பாஜக கோட்டைக்கு வருவதால்.. முதல்வர் டெல்டாவிற்கு எஸ்கேப்பாகிவிட்டார்.. பேரணியில் அண்ணாமலை பேச்சு!
சென்னை: நாங்கள் கோட்டையை நோக்கி வருகிறோம் என்றதும் முதல்வர் ஸ்டாலின் எஸ்கேப்பாகி, டெல்டா மாவட்டத்திற்கு சென்றுள்ளார். முதல்வர் எங்கே சென்றாலும் பாஜக விடப்போவது கிடையாது, என்று அண்ணாமலை சென்னையில் நடக்கும் பாஜக போராட்டத்தில் பேசி உள்ளார்.
தமிழ்நாட்டில் திமுக அரசு பெட்ரோல் - டீசல் விலையை குறைக்காததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக சார்பாக இன்று போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. கடந்த மே 21ம் தேதி நாடு முழுக்க பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு அதிரடியாக குறைத்து அறிவிப்பு வெளியிட்டது.
இந்த நிலையில் மாநில அரசும் வரியை குறைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து பாஜக தற்போது போராட்டத்தில் குதித்து உள்ளது. ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் இருந்து கோட்டையை நோக்கி பாஜக பேரணி நடந்து வருகிறது.

அண்ணாமலை
இதில் பேசிய தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, பெட்ரோல் டீசல் விலையை திமுக அரசு உடனடியாக குறைக்க வேண்டும். விடியாத அரசு பெட்ரோல் டீசல் விலையை குறைக்க மாட்டேன் என்கிறது. பாஜக வாக்குறுதி கொடுக்காமலே இரண்டு முறை பெட்ரோல், டீசல் விலையை குறைத்துள்ளது. கடந்த 3 நாட்களாக திமுக அரசு உதயநிதிக்கு ஆதரவாக தீர்மானம் போட்டு வருகிறது.

அண்ணாமலை பேச்சு
அவர்கள் மக்கள் பிரச்சனைகளில் கவனம் செலுத்தவில்லை. கோட்டையை நோக்கி நாம் வரப்போகிறோம் என்று தெரிந்ததும் முதல்வர் எஸ்கேப் ஆகிவிட்டார். முதல்வர் எஸ்கேப் ஆகி டெல்டாவை நோக்கி சென்றுவிட்டார். முதல்வர் எங்கே சென்றாலும் பாஜக விடப்போவது கிடையாது,. நீங்கள் சொன்ன வாக்குறுதியை நிறைவேற்றுங்கள் என்றுதான் கூறுகிறோம். நீங்கள் கொடுக்காத வாக்குறுதியை நாங்கள் நிறைவேற்ற சொல்லவில்லை.

பாஜக போராட்டம்
விடியாத அரசின் நாட்கள் எண்ணப்படுகின்றன. இன்னும் 750 நாட்கள்தான் இருக்கின்றன. நாம் சுவச் பாரத் பற்றி பேசிக்கொண்டு இருக்கிறோம். அவர்கள் கஞ்சா ஆபரேஷன் செய்து கொண்டு இருக்கிறார்கள். சாதாரண பொதுமக்கள் சாலையில் நடக்கவே பயப்படுகிறார்கள். சாலையிலேயே பட்டப்பகலில் கொலைகள் நடக்கின்றன. சட்ட ஒழுங்கு மோசமாகிவிட்டது.

விடியாத அரசு
இன்னும் 4 நாட்களில் பாஜக சார்பாக 2 ஊழல் பட்டியல் வெளியிடப்படும். 2 அமைச்சர்கள் செய்த ஊழல்கள் பற்றி வெளியிடுவோம். விஞ்ஞான பூர்வமாக ஊழல் செய்துள்ளனர். நிலக்கரியை ஊழல் செய்த அமைச்சர் இருக்கிறார். கண்ணுக்கு தெரியாத மின்சாரத்தில் அமைச்சர் செய்த ஊழல் பற்றி வெளியிடுவோம். காற்றில் என்ன ஊழல்.. கண்ணுக்கு தெரியாத மின்சாரத்தில் ஊழல் செய்தவர்களை பற்றி வெளியிடுவோம், என்று அண்ணாமலை குறிப்பிட்டுள்ளார்.
-
அண்ணாமலை மாதிரி இனி ஒருத்தர் வர மாட்டார்.. பாஜகவிலிருந்து விலகியதால்.. கலங்கிய ஆர்எஸ்எஸ்! -
"மக்கள் சக்தி இயக்கம்".. அண்ணாமலை தொடங்கும் புதிய அரசியல் பாதை? அமித் ஷா தந்த ரியாக்சன் என்ன? -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
டீசல் + ஐசோபியூட்டனால்.. மத்திய அரசின் அடுத்த மெகா திட்டம்.. இதுமட்டும் நடந்துட்டா போதும்! -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
Petrol, Diesel Price: மீண்டும் மீண்டுமா? சென்னையில் பெட்ரோல், டீசல் விலை உயர்வு.. இன்றைய ரேட் என்ன?












Click it and Unblock the Notifications