பொன்முடிக்கு உற்ற துணையாக இருந்தாரே.. விக்கிரவாண்டி எம்எல்ஏ புகழேந்தி மறைவுக்கு ஸ்டாலின் இரங்கல்
சென்னை: விக்கிரவாண்டி எம்எல்ஏ புகழேந்தி மரணமடைந்ததற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: விழுப்புரம் தெற்கு மாவட்ட கழகச் செயலாளரும் எம்எல்ஏவுமான புகழேந்தி எதிர்பாராத வகையில் மறைவுற்ற நிகழ்வு, மிகவும் அதிர்ச்சியும் வேதனையையும் தருகிறது.

கடந்த சில நாட்களாக உடல்நலம் குன்றியிருந்த அவர், தன் உடல்நலன் பற்றியெல்லாம் சிந்திக்காமல் கழகத்தின் வெற்றிக்காகத் தேர்தல் பணிகளை ஆற்றினார். நேற்றைய தினம் என்னுடைய பரப்புரைக் கூட்டத்தில் கலந்து கொள்ளவும் அவர் வந்தார். அப்போது சற்றே அவருக்கு மயக்கம் வந்தது. இதனால் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
உடனடியாக நானும் மருத்துவர்களைத் தொடர்பு கொண்டு அவரது உடல்நலனைக் கவனித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டிருந்தேன். நலன் பெற்று மீண்டு வருவார் என நம்பியிருந்த நிலையில் அவர் நம்மை விட்டு பிரிந்த செய்தி வந்து நம்மைத் துயரத்தில் ஆழ்த்தியிருக்கிறது.
1973 ஆம் ஆண்டு கழகத்தின் கிளைச் செயலாளராக தமது அரசியல் வாழ்வைத் தொடங்கினார் புகழேந்தி அவர் தமது அயரா உழைப்பாலும் மக்கள் பணியாலும் படிப்படியாக வளர்ந்து கழகத்தின் மாவட்டச் செலாளராகவும் எம்எல்ஏவாகவும் உயர்ந்தார். 1996ஆம் ஆண்டு ஒன்றிய தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டு சிறப்பான பணிகளை மேற்கொண்டவர். விக்கிரவாண்டி தொகுதி மக்களோடு மக்களாக இருந்து அவர்களுக்கான அனைத்து பணிகளையும் அக்கறையுடன் மேற்கொண்டு வந்தார்.
இதனால்தான் அவரை சட்டசபைக்கு தேர்வு செய்து மக்கள் அனுப்பி வைத்தனர். எப்போது என்னை சந்திக்க வந்தாலும் மக்களுக்கான கோரிக்கைகளுடன்தான் வருவார். அவற்றுக்கான தீர்வுகளைப் பெற்றுச் செல்வார். கழக துணை பொதுச் செயலாளர் க.பொன்முடிக்கு உற்ற துணையாக விளங்கி மக்களோடு மக்களாக வாழ்ந்த புகழேந்தியின் மறைவு விக்கிரவாண்டி தொகுதிக்கும் விழுப்புரம் மாவட்டத்திற்கும் மட்டுமின்றி கழகத்திற்கும் பேரிழப்பாகும். ஈடு செய்ய முடியாத அவரது பேரிழப்பால் வாடும் அவரது குடும்பத்தினர் , உறவினர், நண்பர்கள், கழகத் தோழர்கள் அனைவருக்கும் எனது இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு இரங்கல் பதிவில் முதல்வர் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
விக்கிரவாண்டி தொகுதி எம்எல்ஏ புகழேந்தி விழுப்புரம் தெற்கு மாவட்ட திமுக செயலாளராக உள்ளார். அவர் கடந்த 2019 ஆம் ஆண்டு விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிட்டு தோற்றார்.

இதைத் தொடர்ந்து 2021 ஆம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் அதே தொகுதியில் மீண்டும் போட்டியிட்டு வென்று எம்எல்ஏவானார். கடந்த சில தினங்களாக உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதனால் 10 நாட்களுக்கு மேலாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
அவருக்கு கல்லீரலில் பாதிப்பு ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகின. இதையடுத்து நேற்று முன் தினம்தான் அவர் சென்னையிலிருந்து விக்கிரவாண்டி திரும்பினார். இதைத் தொடர்ந்து முதல்வர் ஸ்டாலின் பங்கேற்ற திமுக தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பங்கேற்றார்.
அப்போது அவர் திடீரென மயங்கி விழுந்தார். உடனடியாக அவரை முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் இன்று காலை முதலே அவருடைய உடல்நிலை மோசமாக இருப்பதாக தெரியவந்தது. இதையடுத்து திமுக தொண்டர்கள் மருத்துவமனைக்கு குவிந்த வண்ணம் இருந்தனர்.
இந்த நிலையில் புகழேந்தி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து அவருடைய உடலுக்கு அமைச்சர் பொன்முடி நேரில் சென்று கண்ணீர் அஞ்சலி செலுத்தினார்.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications