அடுத்த அதிரடியை கையில் எடுக்கும் ஸ்டாலின்.. பறந்த புது எச்சரிக்கை.. "இனி நல்லா கவனிக்கணும்"
ஸ்டாலின் மாவட்ட செயலாளர்களை கண்டித்து அறிவுறுத்தி உள்ளாராம்
சென்னை: அடுத்தடுத்த அதிரடிகளை கையில் எடுத்து வரும் முதல்வர் ஸ்டாலினின் பார்வை தற்போது, திமுக உட்பூசல் விவகாரங்களில் தென்பட்டுள்ளது.. அதன்படி, சில மாவட்ட செயலாளர்களுக்கு கடுமையான எச்சரிக்கைகளையும் விடுத்து அறிவுறுத்தி உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
கடந்த சில நாட்களுக்கு முன்பு நாம் ஒரு செய்தியை பதிவிட்டிருந்தோம்.. அதில், ஸ்டாலின் விரைவில் களையெடுப்பு நடத்த போகிறார் என்பதையும், அதற்கான காரணத்தையும் தெரிவித்திருந்தோம்.
அதாவது, இந்த முறை, கூடுதலாக 20 இடங்களில் வெற்றி பெற்றிருக்க வேண்டும், அது மிஸ் ஆயிடுச்சே என்ற வருத்தம் ஸ்டாலினுக்கு இருக்கிறது.. அதிலும், திமுகவை கைவிட்டது கொங்கு மண்டலம் என்பதாலேயே அந்த வருத்தம் மேலும் அதிகமானது..

தோல்வி
எனவே, திமுக எங்கெல்லாம் தோல்வி அடைந்ததோ, அதற்கான காரணங்கள் என்ன என்பது குறித்து ரிப்போர்ட் கேட்டிருந்தார் ஸ்டாலின்.. குறிப்பாக, அமைச்சர்கள் தொகுதியில் திமுக நிர்வாகிகள் எப்படி வேலை பார்த்தனர்? திமுகவின் வெற்றிக்கு தடையாக இருந்த நிர்வாகிகள் யார்? என்ற லிஸ்ட்டும் ஸ்டாலின் கேட்டிருந்தார்.

காரணங்கள்
இதையடுத்து, தேர்தலில் தோல்வி அடைந்த வேட்பாளர்கள் பலரும், தங்கள் பிரச்சனைகளை சொல்லி, எதற்காக தோல்வியடைந்தோம் என்ற காரணங்களையும் திமுக மேலிடத்துக்கு அனுப்பி வைத்தபடி வந்தனர். இந்த லிஸ்ட்கள் கிடைத்தபிறகு, ஒவ்வொரு மாவட்டத்திலும் களப்பணியை முதல்வர் ஸ்டாலின் கையில் எடுப்பார் என்றும், அநேகமாக சட்டசபை கூட்டம் முடிந்த பிறகு இதற்கான நடவடிக்கையை ஆரம்பிப்பார் என்றும் தெரிவித்திருந்தார்.

கூட்டம்
இந்நிலையில்தான், மாவட்ட செயலாளர்கள் கூட்டம் அறிவாலயத்தில் நேற்று நடந்தது.. உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக நடத்தப்பட்ட கூட்டம் என்றாலும், ஸ்டாலின் இந்த கூட்டத்தில் மிக முக்கியமான விஷயத்தை பேசியதாக கூறப்படுகிறது.

பேச்சு
"சட்டசபை தேர்தலில்தான், பெரிய அளவுக்கு வெற்றியை பெற முடியவில்லை. இருந்தாலும் ஆட்சியை பிடித்துள்ளோம்... அடுத்த தேர்தலில் இமாலய வெற்றி பெறும் அளவிற்கு, மக்கள் சேவையில் மாவட்ட செயலர்கள் ஈடுபட வேண்டும்... எதிர்கட்சியாக நாம் இருந்த போது, நமக்கு எந்த விமர்சனமும் வரவில்லை. ஆளுங்கட்சியாக இருப்பதால், சிறு துரும்பு பிரச்னையையும், பெரிய பூதாகரமாக்கி விமர்சித்து விடுவார்கள்.. அதற்கெல்லாம் நீங்கள் இடம் தரக்கூடாது..

அக்கறை
நடந்து முடிந்த தேர்தலில் சில மாவட்ட செயலாளர்கள் மீது குற்றச்சாட்டு வந்துள்ளது.. அவர்கள் எல்லாம் இனியாவது தங்களை திருத்தி கொள்ள வேண்டும்.. மக்கள் நலனில் இன்னும் அதிகமாக அக்கறை காட்டி பணியாற்ற வேண்டும்... உங்களுடன் பணியாற்றும் நிர்வாகிகளும், புகாருக்கும், குற்றச்சாட்டுக்கும் ஆளாகாமல் நீங்கள் இனிமேல் நடந்து கொள்ள வேண்டும்..

முக்கியத்துவம்
சட்டசபை தேர்தலில் கூட்டணி கட்சிகள் எதிர்பார்த்த தொகுதி பங்கீட்டை நம்மால் நிறைவேற்றி தர முடியாத நிலைமை ஏற்பட்டது... அதனால், உள்ளாட்சி தேர்தலில் கூட்டணி கட்சிகளுக்கு விட்டுக் கொடுத்து, அவர்களுக்கும் முக்கியத்துவம் அளித்து இட பங்கீடு வழங்க வேண்டும்.. என்று அறிவுறுத்தி இருக்கிறார் ஸ்டாலின்.

மதிப்பு
முதல்வர் ஸ்டாலினின் இந்த பேச்சு, தமிழக அரசியலில் மேலும் மதிப்பை கூட்டி வருகிறது.. காரணம், தன் கட்சிக்காரர்கள் மீதான புகார்கள் என்றாலும், தயங்காமல் நடவடிக்கை தொடர்ந்து வரும் பட்சத்தில், சில மாவட்ட செயலாளர்களை நேரடியாக கூப்பிட்டு கண்டித்துள்ளது பாராட்டத்தக்கது.. ஆனால், பெயர்களை சொல்லி குறிப்பிட்டால் சுணங்கிவிடுவார்கள் என்பதால், இப்போதைக்கு பொதுப்படையாகவே கண்டித்துள்ளதும் கவனிக்கப்பட்டு வருகிறது.

ஆச்சரியம்
மேலும், கூட்டணி கட்சிகளை, கடந்த தேர்தலில் சரியாக கவனிக்காமல் விட்டதை மனதில் வைத்துள்ளது ஆச்சரியத்தை தருகிறது.. ஆட்சிக்கு வந்ததுமே கூட்டணிகளை பற்றி பெரிதாக ஆட்சியாளர்கள் கவலைப்படாத பட்சத்தில், தற்போது அவர்களை பற்றி சிந்திப்பதுடன், வரப்போகும் தேர்தலிலாவது அவர்களுக்கு சீட் விவகாரத்தில் தாராளத்தை காட்ட போவதாக ஸ்டாலின் சொல்லி உள்ளதை பிற கட்சிகளே வியப்புடன் பார்த்து வருகின்றன. பார்ப்போம்..












Click it and Unblock the Notifications