மதுரை மீனாட்சி, பண்ணாரி, இருக்கன்குடி கோவில்களில் மருத்துவ மையங்கள்..பக்தர்களுக்கு குட் நியூஸ்
சென்னை: மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோவில், இருக்கன்குடி மாரியம்மன் கோவில், பண்ணாரி பண்ணாரியம்மன் கோவில், மதுரை அழகர்கோவில் கள்ளழகர் கோவில்களில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள மருத்துவ மையங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளிக் காட்சி மூலமாக முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.
2021-22-ம் ஆண்டிற்கான இந்து சமய அறநிலையத்துறையின் மானியக்கோரிக்கையில், பக்தர்கள் அதிகளவில் வருகை புரியும் 10 கோவில்களில் தேவையான மருத்துவர் மற்றும் மருத்துவப் பணியாளர்களுடன் கூடிய முதலுதவி மருத்துவ மையங்கள் ஏற்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

அதன்படி முதற்கட்டமாக, திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில், திருவண்ணாமலை அருணாச்சலேசுவரர் கோவில், மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி கோவில், சோளிங்கர் லட்சுமி நரசிம்ம சுவாமி கோவில், மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவில், திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோவில் ஆகிய கோவில்களில் மருத்துவ மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
அந்த மருத்துவ மையங்கள் மற்றும் பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் மேம்படுத்தப்பட்ட மருத்துவ மையம் ஆகியவற்றை முதலமைச்சர் கடந்த 31.12.2021 அன்று காணொலிக் காட்சி மூலம் திறந்து வைத்தார். அதனைத்தொடர்ந்து ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவில், திருவரங்கம் அரங்கநாதசுவாமி கோவில், சமயபுரம் மாரியம்மன் கோவில் ஆகிய 3 கோவில்களில் மருத்துவ மையங்கள் திறந்து வைக்கப்பட்டன.
எதிர்க்கட்சிகள் பற்றி கவலையில்லை.. மக்கள் திருப்தியாக இருக்கிறார்கள்.. சீர்காழியில் மு.க.ஸ்டாலின்!
அதனைத் தொடர்ந்து, 2022-23-ம் ஆண்டிற்கான இந்து சமய அறநிலையத்துறையின் மானியக் கோரிக்கையில், "பக்தர்கள் அதிகளவில் வருகை புரியும் 10 கோவில்களில் மருத்துவ மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இந்தாண்டு மேலும் 5 கோவில்களில் மருத்துவ மையங்கள் புதிதாக அமைக்கப்படும்" என அறிவிக்கப்பட்டது.
அதன்படி மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோவில், இருக்கன்குடி மாரியம்மன் கோவில், பண்ணாரி பண்ணாரியம்மன் கோவில், மதுரை அழகர்கோவில் கள்ளழகர் கோவில், சங்கரன்கோவில் சங்கரநாராயணசுவாமி கோவில் ஆகிய 5 கோவில்களில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள மருத்துவ மையங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.
இந்த மருத்துவ சிகிச்சை மையங்கள் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கும் வயதானவர்கள், குழந்தைகளுக்கு
உதவிகரமாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.