சரிப்பட்டு வராது! மொத்தமாக முடிவு கட்டுறேன்! ஸ்டாலின் எடுத்த பிரம்மாஸ்திரம்! அடிதூள்! எல்லாம் மாறுது
சென்னை: 2026 சட்டசபை தேர்தலுக்கு முன்பாக உள்ளாட்சி தேர்தலை நடத்தும் திட்டம் முதல்வர் ஸ்டாலினிடம் உள்ளதாம். இதற்கான ஆலோசனைகளை அவர் இப்போதே செய்ய தொடங்கி விட்டாராம்.
தமிழ்நாட்டில் சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 20 மாதங்கள் உள்ளன. 20 மாதங்கள் தேர்தலுக்கு இருந்தாலும் திமுக வேகமாக மீண்டும் ஆட்சியை பிடிப்பதற்கான பணிகளை முடுக்கிவிட்டுள்ளது. 2026 சட்டப்பேரவை தேர்தலுக்கான ஒருங்கிணைப்புக் குழுவை முதல்வர் மு.க.ஸ்டாலின் அமைத்துள்ளார்.

இக்குழுவில், திமுக முதன்மை செயலாளர் கே.என்.நேரு, அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, அமைச்சர்கள் எ.வ.வேலு, தங்கம் தென்னரசு மற்றும் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இளைஞரணி செயலாளராக உள்ள அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு, துணை முதல்வர் பதவி வழங்கப்படும் என்ற பேச்சுகள் எழுந்த நிலையில், அடுத்த சட்டப்பேரவை தேர்தலை ஒருங்கிணைக்கும் பணி வழங்கப்பட்டுள்ளது.
அவசர மீட்டிங்: 2026 சட்டசபை தேர்தலுக்கான திமுக ஒருங்கிணைப்புக் குழுவுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரண்டு நாட்களுக்கு முன் ஆலோசனை மேற்கொண்டுள்ளார். கட்சியில் அமைப்பு நீதியாக சீரமைப்பை மேற்கொள்வது பற்றி ஆலோசித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் இந்த முறை உதயநிதி ஸ்டாலினுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டு உள்ளது. கட்சியில் முக்கிய முடிவுகளை எடுக்க போவது உதயநிதி ஸ்டாலின்தான் என்பது இந்த மீட்டிங் மூலம் தெரிய வந்துள்ளது.
3 பிளான்கள்: 2024 சட்டசபை தேர்தலுக்கான ஏற்பாடுகளை ஆளும் திமுக இப்போதே செய்ய தொடங்கிவிட்டது.
பிளான் 1: கூட்டணியை ஒருங்கிணைப்பது. திமுக கூட்டணியை இதேபோல் காத்து வைக்க முடிவு செய்துள்ளதாம்.
பிளான் 2: இரண்டாவதாக எதிர்கட்சிகளை தவிடுபொடியாக்கும் வகையில் பென் அமைப்பு மூலம் பல சர்வேக்களை எடுக்க முடிவு செய்துள்ளனர் தேர்தலில் முடிவுகளை மாற்றும் பகுதிகள், சாதி ரீதியிலான வாக்குகள் என்று பல விஷயங்களை இந்த சர்வே மூலம் எடுக்க உள்ளனராம்.
பிளான் 3: கடைசியாக திமுக கூட்டணி 200+ இடங்கள், திமுக கூட்டணி 170+ இடங்களை வெல்வது தொடர்பாக ஆலோசனைகளை மேற்கொள்ள ஸ்டாலின் முடிவு செய்துள்ளாராம். இதற்காக கட்சியில் அமைப்பு ரீதியிலான மாற்றங்களை செய்வது பற்றியும் ஸ்டாலின் பேசி உள்ளாராம்
உள்ளாட்சி தேர்தல்: 2026 சட்டசபை தேர்தலுக்கு முன்பாக உள்ளாட்சி தேர்தலை நடத்தும் திட்டம் முதல்வர் ஸ்டாலினிடம் உள்ளதாம். இதற்கான ஆலோசனைகளை அவர் இப்போதே செய்ய தொடங்கி விட்டாராம்.
இதுவரை ஊரக உள்ளாட்சிகளுக்கான தேர்தலை நடத்துவது அல்லது தள்ளிப்போடுவது தொடர்பாக திமுக அரசு இறுதி முடிவு எடுக்காமல் இருக்கிறது. திமுக சீனியர்கள் யாருக்கும் இந்த தேர்தலை நடத்துவதில் விருப்பமில்லை. தேர்தலை தள்ளி வைக்க வேண்டும் என்பதே அவர்களின் நோக்கமாக இருக்கிறது.
இது குறித்து ஸ்டாலினிடம் பலமுறை வலியுறுத்தியும் வந்துள்ளனர் சீனியர்கள். அதே சமயம், மாவட்ட, ஒன்றிய அளவிலான திமுகவினரோ, டிசம்பரில் தேர்தலை நடத்தியாக வேண்டும் என தலைமைக்கு தங்களின் விருப்பத்தை தெரிவித்தபடி இருக்கின்றனர். உள்ளாட்சி அளவில் கவுன்சிலர்கள் பலர் திமுக தலைமையின் பேச்சை கேட்கவில்லை என்று புகார்கள் வைக்கப்படுகின்றன. இதற்கெல்லாம் முடிவு கட்டும் விதமாக உள்ளாட்சி தேர்தலை நடத்த ஸ்டாலின் ஆலோசனை செய்து வருகிறாராம்.
இந்த நிலையில், ஊரக உள்ளாட்சிக்கான தேர்தலை நடத்துவதற்கு தயாராகும் வகையில், ஜனவரி 1, ஏப்ரல் 1 , ஜூலை 1, அக்டோபர் 1 ஆகிய மாதத் தேதிகளை அடிப்படையாகக் கொண்டு 18 வயது நிரம்பிய புதிய வாக்காளர்களை பதிவு செய்யும் நடவடிக்கைகளை முன்னெடுக்க மாநில தேர்தல் ஆணையம் முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வருகின்றன.
-
“கூட்டணி கட்சிகள் இல்லைனா திமுக 10 தொகுதிகளில் கூட வெற்றி பெற்றிருக்காது”.. ஆதவ் அர்ஜுனா தாக்கு! -
"தவெகவுக்கு ஏன் வாக்களித்தோம் என மக்கள் வேதனை".. விஜய் ஆட்சியை கடுமையாக விமர்சித்த ஸ்டாலின்! -
“திமுக ஒரு நச்சுப்பாம்பு” வாயை விட்ட.. மதிமுக அர்ஜுன் ராஜ்! வேடிக்கை பார்க்கும் வைகோ! -
மாட்டிவிட்ட மகளிர் உரிமைத் தொகை..பெண்களின் ஓட்டை கோட்டைவிட்ட திமுக! ஆய்வுக் குழுவின் அதிர்ச்சி தகவல் -
திமுகவில் 30+ மாவட்ட செயலாளர்கள் மாற்றம்? கனிமொழிக்கு ‘செயல் தலைவர்’ பதவி? ஸ்டாலின் மாஸ்டர் பிளான்! -
திமுகவை உதறும் துரை வைகோ.. மதிமுக பொதுக்குழு அதிரடி முடிவு? 2 எம்எல்ஏகள் ராஜினாமா? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
விஜய்யை கணிக்கல.. முதுகில் குத்திருக்காங்க.. திமுக தோல்விக்கு காரணம்.. ஸ்டாலின் மேஜையில் ரிப்போர்ட் -
காவிரி நீரை கொண்டு வருவாரா விஜய்.. தண்ணீருக்கு வழியில்லாமல் குறுவை தொகுப்பா.. திமுக சரமாரி கேள்வி -
பிரதான எதிர்க்கட்சி முதல் 2 எம்.எல்.ஏக்கள் வரை.. இதுவரை தமிழ்நாட்டில் சிபிஐ அமைத்த கூட்டணிகள் லிஸ்ட் -
திமுகவில் செய்ய வேண்டிய மாற்றங்கள்.. வீரமணி வெளியிட்ட அழுத்தமான பதிவு -
“உங்க கட்சியிலேயே நீதி கிடைக்கல.. தமிழக பெண்களுக்கு எப்படி?” - விஜய்க்கு கீதா ஜீவன் சரமாரி கேள்வி!












Click it and Unblock the Notifications