ஈசிஆர் ரோட்டில் முதல்வர் சைக்கிள் பயணம்! ஆன்லைன் வகுப்பு புரியுதாப்பா? மாணவரிடம் கேட்ட ஸ்டாலின்
சென்னை: சென்னை மாமல்லபுரம் ஈசிஆர் சாலையில் முதல்வர் ஸ்டாலின் சைக்கிள் பயணம் மேற்கொண்டார். அப்போது அவ்வழியாக சென்ற பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.
Recommended Video
முதல்வர் ஸ்டாலின் தனது உடல் நலனில் மிகுந்த அக்கறை கொண்டவர். தனது வீட்டில் உடற்பயிற்சி கூடத்தில் அவர் தினந்தோறும் உடற்பயிற்சி செய்து தனது உடலை ஃபிட்டாக வைத்துக் கொள்கிறார்.
இதுகுறித்த வீடியோக்கள் சமூகவலைதளங்களில் வெளியாகும். செய்திகளை கேட்டுக் கொண்டே முதல்வர் ஸ்டாலின் உடற்பயிற்சி செய்வார்.

பிசியிலும் உடற்பயிற்சி
முதல்வரான பிறகும் அத்தனை பிசியிலும் தனது உடற்பயிற்சியை விடாமல் செய்து வருகிறார். இவர் பலருக்கு முன்னுதாரணமாக இருக்கிறார் என நெட்டிசன்கள் சொல்வதுண்டு. அவ்வப்போது நேரம் கிடைக்கும் நேரத்தில் சைக்கிள் பயணம் மேற்கொள்வதையும் வாடிக்கையாக கொண்டுள்ளார். அந்த வகையில் வாரத்திற்கு இரு முறை சைக்கிள் பயணம் மேற்கொள்கிறார்.

தேனீர் கடை
முட்டுக்காடு, ஈசிஆர் சாலைகளில் சைக்கிள் பயணம் மேற்கொள்ளும் முதல்வர் அதற்கான உடை, கையுறை, ஹெல்மெட் அணிந்து கொண்டு சைக்கிளில் செல்கிறார். ஆங்காங்கே பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்து செல்பியும் எடுத்துக் கொள்கிறார். பயணத்தின் போது மாமல்லபுரம் சாலையில் உள்ள தேனீர் கடைகளில் தேனீர் அருந்துவார்.

குறைகளை கேட்டறிந்த முதல்வர்
முட்டுக்காட்டில் ஒரு முறை சைக்கிள் பயணம் மேற்கொண்டிருந்த போது அவருடன் பொதுமக்களும் டீ குடித்தனர். அந்த வகையில் இன்றைய தினம் அவர் மாமல்லபுரத்தில் ஈசிஆர் சாலையில் சைக்கிள் பயணம் மேற்கொண்டார். அப்போது பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.

முதல்வர் சைக்கிள் பயணம்
அங்கிருந்த ஒரு கடையில் டீ குடித்துவிட்டு தனது பயணத்தை தொடர்ந்தார். அப்போது அங்கிருந்த ஒரு பள்ளி மாணவரிடம் பேசினார். ஆன்லைன் வகுப்பில் படிக்கிறாயா, எந்த பள்ளி, ஆன்லைன் வகுப்பு புரிகிறதா, என்ன வகுப்பு, பெயர் என்ன போன்றவற்றை கேட்டார். பின்னர் நன்றாக படிக்க வேண்டும் என அந்த மாணவனுக்கு அறிவுரை வழங்கினார்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications