கிளாம்பாக்கம் பிரச்சனைக்கு பெரிய தீர்வு.. சென்னை மாநகராட்சி எடுத்த முக்கிய முடிவு.. ஹாப்பி நியூஸ்
சென்னை: சென்னை மாநகராட்சி மூலம் கிளாம்பாக்கம் பேருந்து முனையம் மற்றும் கேளம்பாக்கம் சாலையின் பின்புறத்தை இணைக்கும் வகையில் 350 மீட்டர் நீளமும் 8 மீட்டர் அகலமும் கொண்ட மேம்பாலம் அமைக்கும் பணிகள் தொடங்கி உள்ளன.
மேலும் வண்டலூர் உயிரியல் பூங்காவில் 467 சதுர மீட்டர் காப்புக்காடு நிலத்தை சாலை விரிவாக்கத்திற்காக விட்டுக்கொடுக்க வேண்டும் என்று சென்னை மாநகராட்சி கோரிக்கை விடுத்துள்ளது. இதன் மூலம் அந்த சாலைகளில் இனி போக்குவரத்து நெரிசல் வெகுவாக குறையும் என்று சென்னை மாநகராட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பாலம் அமைக்கும் பணிகள்: இன்னொரு பக்கம் கிளாம்பாக்கத்தில் கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையம் (கேசிபிடி) திறக்கப்பட்டதால் கடும் நெரிசல் ஏற்பட்டுள்ள நிலையில், ஜிஎஸ்டி சாலை - ஐயஞ்சேரி சாலை சந்திப்பில் மேம்பாலம் அமைப்பது குறித்து இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் ஆய்வு செய்து வருகிறது.
ஜிஎஸ்டி சாலையை எட்டுவழிப் பாதையாக விரிவுபடுத்திய போதிலும், வண்டலூர் சந்திப்பில் மேம்பாலம் திறந்தும் கூட இங்கே போக்குவரத்து நெரிசல் நிலவி வருகிறது. இந்த டெர்மினஸ் திறக்கப்பட்டதையடுத்து தற்போது வாகன போக்குவரத்து நெரிசல் அதிகரித்துள்ளது.
சமீபத்தில் மாநில அதிகாரிகளுடன் நடந்த கூட்டத்தில், பெருங்களத்தூரில் இருந்து செங்கல்பட்டு வரை உயர்த்தப்பட்ட சாலை விரைவில் வரவிருந்தாலும், நெரிசலைக் குறைக்க ஜிஎஸ்டி சாலை - ஐயஞ்சேரி சாலை சந்திப்பில் மேம்பாலம் கட்டுவது குறித்து பரிசீலிக்க முடிவு செய்யப்பட்டது என்று NHAI வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இதற்கான பணிகள் அங்கே மிக விரைவில் தொடங்கும் என்று தேசிய நெடுஞ்சாலை துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
நடைபாலம்: இது போக.. இன்னொரு பக்கம் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் - ரயில் நிலையத்தை இணைக்கும் ஆகாய நடைபாதை அமைக்க டெண்டர் கோரியது தமிழ்நாடு அரசு. நடைபாதை அமைக்கும் பணிகளை சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் மேற்கொள்ள உள்ளது.
கிளாம்பாக்கம் ரயில் நிலையத்தில் இருந்து பேருந்து நிலையத்தின் மையப்பகுதிக்கு 400 மீ நீளத்தில் ஆகாய நடைபாதை அமைக்கப்பட உள்ளது. இதுவரை கோயம்பேடு வரை இயக்கப்பட்ட பேருந்துகள் இனி கிளாம்பாக்கம் கலைஞர் பேருந்து முனையத்தில் நிறுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில்தான் கிளாம்பாக்கத்தில் ரயில் நிலையம் கட்டும் பணி தமிழ்நாடு அரசு நிதியில் தொடங்கப்பட்டு உள்ளது.
வண்டலூர் மற்றும் ஊரப்பாக்கம் ரயில் நிலையங்களுக்கு இடையே, கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை எதிர்கொள்ளும் ஜிஎஸ்டி சாலையில், புதிய ரயில் நிலையத்திற்கான கட்டிடங்கள் மற்றும் நடைமேடைகள் கட்டுவதற்கான குடிமராமத்து பணி தொடங்கி உள்ளது. இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்திற்குள் புதிய ரயில் நிலையம் தயாராகிவிடும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
மேலும், கிளாம்பாக்கம் டெர்மினஸை புதிய ரயில் நிலையத்துடன் இணைக்கும் வகையில் 450 மீட்டர் நீளமுள்ள ஸ்கைவாக்கிற்கான பணி இறுதி செய்யப்பட்டுள்ளது, மேலும் செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகம் ஸ்கைவாக் கட்டுவதற்கான நிலத்தை கையகப்படுத்துவதற்கான இறுதி அறிவிப்பை வெளியிட்டு உள்ளது. புதிய ரயில் நிலையத்தின் கட்டுமானச் செலவுக்காக, தெற்கு ரயில்வேக்கு, 20 கோடி ரூபாயை, மாநில அரசு ஏற்கனவே மாற்றியது குறிப்பிடத்தக்கது.
பேருந்து நிலையம்; சென்னை உள்ளே வராமல் இனி கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தோடு இந்த பேருந்துகள் நிற்கும். முக்கியமாக கோயம்பேடு வரை இந்த பேருந்துகள் வராது. சென்னை உள்ளே வர இனி நீங்கள் வேறு பேருந்து பிடித்துதான் வர வேண்டும். இது தனியார் பேருந்துகளுக்கு பொருந்தாது.
சென்னை, கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து இயங்கிய பேருந்துகள் இனி எந்தெந்த வகையில் இங்கிருந்து இயங்கும் என்பது பற்றிய கேள்வி எழுந்துள்ளது. அரசு விரைவு போக்குவரத்து கழகத்தை பொறுத்தவரை இன்றைக்கு கோயம்பேட்டிலிருந்து இயங்குகின்ற பேருந்துகள், கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு வந்து தெற்கு பகுதிக்கு செல்லும்.












Click it and Unblock the Notifications