ஒரே ஆள் 672 நகைக்கடன் வாங்கி மோசடி... கூட்டுறவு சங்க முறைகேடுகளை புட்டு புட்டு வைத்த ஐ. பெரியசாமி
பல இடங்களில் போலி நகைகளை வைத்து நகைக்கடன்கள் பெற்று மோசடி நடந்துள்ளதாக ஐ பெரியசாமி குற்றம்சாட்டியுள்ளார். முறைகேடு செய்து நகைக்கடன் பெற்றவர்களுக்கு எப்படி தள்ளுபடி செய்ய முடியும்? என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை:கூட்டுறவு சங்கங்களில் யார் முறைகேடு செய்தாலும் பாரபட்சமின்றி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ. பெரியசாமி கூறியுள்ளார். பல இடங்களில் போலி நகைகளை வைத்து நகைக்கடன்கள் பெற்று மோசடி நடந்துள்ளதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
நகைக்கடன் முறைகேடு குறித்து கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி விளக்கமளித்துள்ளார். சென்னை கலைவாணர் அரங்கில் செய்தியாளர்களை சந்தித்த கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ. பெரியசாமி, "பல இடங்களில் போலி நகைகளை வைத்து நகைக்கடன்கள் பெற்று மோசடி நடந்துள்ளதுதாக குற்றம் சாட்டினார்.
முறைகேடு செய்து நகைக்கடன் பெற்றவர்களுக்கு எப்படி தள்ளுபடி செய்ய முடியும்? திருவண்ணாமலையில் ஒரே நபர், ஒரே ஆதார் அட்டை, குடும்ப அட்டை வைத்து 672 நகைக்கடன் வாங்கியுள்ளதாகவும் குற்றம் சாட்டினார்.

பயிர்க்கடன் தள்ளுபடி
கூட்டுறவு சங்களில் யார் முறைகேடு செய்தாலும் பாரபட்சமின்றி கடும் நடவடிக்கை எடுக்கப்படும்" என்று உறுதிப்பட தெரிவித்தார். அத்துடன் சேலம் , நாமக்கல்லில் 51,017 விவசாயிகளுக்கு ரூ.501.69 கோடி அளவிற்கு பயிர் கடன் தள்ளுபடி செய்யப்படும். பயிர் கடன் தள்ளுபடி ஆகுமா மீண்டும் நடப்பாண்டில் பயிர்க்கடன் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முறைகேடு நடந்ததாக புகார்
முன்னதாக சட்டசபையில் விதி 110ன் கீழ் கூட்டுறவு சங்க நிர்வாகிகள் பதவி காலத்தை குறைக்கும் மசோதாவை சட்டப்பேரவையில் அமைச்சர் பெரியசாமி தாக்கல் செய்தார். சட்டத்திருத்த மசோதா மூலம் கூட்டுறவு சங்க நிர்வாகிகள் பதவி காலம் 5 ஆண்டில் இருந்து 3 ஆண்டாக குறைக்கப்பட்டுள்ளது. அத்துடன் அதிமுக ஆட்சியில் கூட்டுறவு சங்கங்களின் தேர்தலில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்த நிலையில், தமிழ்நாடு முழுவதும் சுமார் 20 ஆயிரம் பேர் தேர்வான நிலையில் கூட்டுறவு சங்க தேர்தலை ரத்து செய்ய மசோதா தாக்கல் செய்யப்பட்டது.

ஐ. பெரியசாமி
சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் பயிர்க் கடன் தள்ளுபடி ரசீது வழங்குவது குறித்தும், அவர்களுக்கு மறு பயிர்க் கடன் வழங்குவது குறித்தும் கூட்டுறவுத் துறை அமைச்சர் தமிழ்நாடு சட்ட மன்றத்தில் விதி 110-ன் கீழ் அறிவித்தார். கடந்த ஆண்டு (2020-21) பயிர்க் கடன் வழங்குவதற்கு ரூ.11,000 கோடி குறியீடு நிர்ணயிக்கப்பட்டது. இதில் சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் பயிர்க் கடன் வழங்குவதற்கு நிர்ணயிக்கப்பட்ட குறியீடு முறையே ரூ.746 கோடி மற்றும் ரூ.534 கோடி ஆகும். இதில் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை எய்தியது ரூ.614.92 மற்றும் ரூ.502.62 கோடி ஆகும்.

கடன் பெற்ற விவசாயிகள் யார்
சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டங்களைப் பொறுத்தவரை பெருவாரியாக சோளம் மற்றும் மரவள்ளிக் கிழங்கு பயிரிடப்பட்டுவரும் நிலையில் இப்பயிர்களுக்கு ஒரு ஏக்கருக்கு வழங்கப்படும் கடன் தொகை மிகவும் குறைவு என்பதால், பயிர்க் கடன் அளவு அதிகமாக உள்ள மஞ்சள் மற்றும் வாழை போன்ற பயிர்களைக் குறிப்பிட்டு கிராம நிர்வாக அலுவலரிடமிருந்து சிட்டா அடங்கல் பெறாமல் கடன் பெறும் விவசாயிகளே சுய உறுதி மொழி அளித்து கடன் பெற்றுள்ளது கள ஆய்வின்போது கண்டறியப்பட்டுள்ளது.

விவசாயிகளுக்கு தள்ளுபடி சான்று
மேலும் சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் விவசாயிகள் தங்களது சுய உறுதிமொழியில் கூடுதலான பரப்பில் பயிர் செய்து வருவதாக குறிப்பிட்டுள்ளனர். இந்த விவரங்கள் அடங்கலில் உள்ள விவரங்களுக்கு மாறாக உள்ளது.
இது போன்ற விதிமீறல்கள் பிற மாவட்டங்களில் நடைபெற்றிருப்பினும், இவ்வகையான 2 விதி மீறல்களில் 97% அதாவது மொத்தம் ரூ.516.92 கோடியில் ரூ.501.69 கோடி இவ்விரு மாவட்டங்களில் மட்டுமே கண்டறியப்பட்டுள்ளது.
இந்நிலையில் கடந்த ஜனவரி 2021 மாதம் பயிர்க் கடன் தள்ளுபடி அறிவிக்கப்பட்டு, சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் 1,11,833 விவசாயிகளுக்கு தள்ளுபடி சான்று வழங்கப்பட்டு 51,017 நபர்களுக்கு மேற்கூறிய 2 விதிமீறல்களால் தள்ளுபடி சான்று வழங்கப்படாமல் நிலுவை உள்ளதால், விவசாயிகளுக்கு மீண்டும் பயிர்க் கடன் வழங்கப்படாமலும், பயிர்க் கடன் வழங்க நிர்ணயிக்கப்பட்ட குறியீட்டினை எய்த முடியாமலும் வழக்கமான வேளாண் பணிகளில் ஒரு தொய்வு நிலையும் ஏற்பட்டுள்ளது.

பயிர்க்கடன் வழங்க உத்தரவு
இதனைத் தொடர்ந்து 05.01.2021 அன்று சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டங்களிலிருந்து விவசாயப் பெருமக்கள் தமிழ்நாடு முதலமைச்சரை சந்தித்து இது குறித்து முறையிட்டு, தங்களுக்கும் நடப்பாண்டில் தொடர்ந்து பயிர்க்கடன் வழங்கவும், மற்ற விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது போலவே தங்களுக்கும் பயிர்க்கடன் தள்ளுபடி வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர். மேலும், பயிர்க்கடன் தள்ளுபடி அறிவிப்பினைத் தொடர்ந்து சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டங்கள் உட்பட இதர மாவட்டங்களிலும் மேற்கண்ட விதிமீறல்களுக்குட்பட்ட பயிர்க் கடன்களில் பெரும்பான்மையான விவசாயிகளுக்கு தள்ளுபடி சான்று தேர்தலுக்கு முன்பே விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுவிட்டது.

விவசாயிகளின் நலன்
இந்நிலையில், விவசாயிகளுக்கு கடன் வழங்கும் பணியானது, அதிக முக்கியத்துவம் வாய்ந்த பணியாக உள்ளதாலும், விதிகளின்படி கடன் வழங்க வேண்டியது சங்கத்தின் பணி என்பதையும் கருத்தில் கொண்டு இவ்வகையான விதிமீறல்கள் இனி நடைபெறா வண்ணம் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்பதை உறுதி செய்து விவசாயிகளின் நலனை முன்னிறுத்தி இப்பகுதி விவசாயிகளின் கோரிக்கையை பரிவுடன் பரிசீலித்த முதல்வ இந்நிகழ்வினை சிறப்பினமாக கருதி மேற்கூறிய விவசாயிகளுக்கு பயிர்க்கடன் தள்ளுபடி சான்றினை வழங்கலாம் எனவும் அவர்களுக்கு மீண்டும் தொடர்ந்து பயிர்க் கடன் வழங்கவும் ஆணையிட்டுள்ளார்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கை
இதனால் சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் உள்ள 51,017 விவசாயிகளுக்கு ரூ.501.69 கோடி அளவிற்கு பயிர்க் கடன் தள்ளுபடி வழங்கப்படும் என்பதையும், அவர்களுக்கு நடப்பாண்டில் மீண்டும் பயிர்க் கடன் வழக்கம்போல தொடர்ந்து வழங்கப்படும் என்பதையும் அமைச்சர் ஐ.பெரியசாமி சட்டசபையில் கூறினார். இனி வருங்காலங்களில் இத்தகைய தவறுகள் நிகழாத வண்ணம் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் எனவும் அமைச்சர் கூறியுள்ளார்.
-
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
தேமுதிகவிற்கு 10 தொகுதிகள் ஏன்? பின்னணியில் 2 ஜாதிகளின் ஓட்டுகளுக்கு குறி.. ஸ்டாலின் போடும் கணக்கு -
கமல்ஹாசனின் மநீம தேர்தலில் போட்டியிட வேண்டும்.. ஸ்டாலினுக்கு வேண்டுகோள் வைத்த திருமாவளவன்! -
3 முறை பிரதமர்.. பாஜகவிற்கே எடப்பாடி 27 தான் தந்துள்ளார்.. காங்கிரசுக்கு 28.. திமுகவினர் குமுறல் -
மோடியை மடக்கிய ஸ்டாலின்.. எங்களைக் காக்கப் பிரதமர் தயாரா? தேதி வாரியாக பட்டியல் போட்டு விளாசல்! -
எல்லா சின்னமும் நம்ம சின்னம் தான்.. தவிடுபொடியான சதிகாரர்களின் எண்ணங்கள்! ஸ்டாலின் போட்ட ஆர்டர்! -
Election Exclusive: ரேசில் முந்திய எடப்பாடி.. சடன் ப்ரேக் போட்ட அறிவாலயம்! அதிருப்தி பங்காளிகளை சமாளிக்க புது வியூகம்! -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி அடுத்த குட் நியூஸ்? தமிழக அரசு அசத்திய ரூ.193 கோடி மகளிர் நிதி -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம்












Click it and Unblock the Notifications