கோயம்புத்தூரில் நின்ற கார்.. டக்னு திறந்து பார்த்த போலீஸ்.. பெண் அதிகாரியா? நிலப்பத்திரமா? அசிங்கம்
சென்னை: கோவையை சேர்ந்த பெண் அதிகாரி வசமாக சிக்கியிருக்கிறார்.. அதிகாரியின் காரை திறந்து பார்த்ததுமே, அதிர்ச்சியில் உறைந்து போனார்களாம் அதிகாரிகள்.. இது தொடர்பான விசாரணையையும் கோவை போலீசார் தீவிரப்படுத்தி வருகிறார்கள்.
கோவை சித்தாபுதூர் பகுதியை சேர்ந்தவர் கருப்பசாமி... இவர், தன்னுடைய நிலத்தை பதிவு செய்துவிட்டு, அதற்கான ஒரிஜினல் ஆவணங்களை கேட்டு சார் பதிவாளர் அலுவலகத்தில் விண்ணப்பித்திருந்தார்.

இந்த விண்ணப்பத்தை பரிசீலனை செய்த சார்பதிவாளர் நான்சி நித்யா கரோலின், "ரூ.35 ஆயிரம் லஞ்சம் தந்தால் மட்டுமே ஆவணங்கள் தரப்படும்.. அதுவும், அந்த பணத்தை நீங்கள், சிங்காநல்லூர் பதிவுத்துறை அலுவலகத்தில் உதவியாளராக உள்ள பூபதிராஜாவிடம் தந்துவிட வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.
ஆனால், தன்னுடைய சொந்த நிலத்தின் ஆவணத்தை பெறுவதற்கு எதற்காக லஞ்சம் தர வேண்டும்? என்று நினைத்த கருப்பசாமி, இது குறித்து லஞ்ச ஒழிப்புத்துறையில் புகார் செய்தார். இதையடுத்து, லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் தந்த ஆலோசனையின்பேரில், கருப்பசாமி, ரசாயனம் தடவிய ரூ. 35 ஆயிரம் பணத்தை, பதிவுத்துறை உதவியாளர் பூபதிராஜாவிடம் கொண்டுபோய் தந்தார்.
அதை வாங்கிக்கொண்டபோது, மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் பூபதி ராஜாவை கையும் களவுமாக பணத்தை பறிமுதல் செய்தனர்.. பிறகு பூபதி ராஜாவையும், நான்சி நித்யா கரோலினையும் கைது செய்தனர்..
தொடர்ந்து நான்சியின் காரையும் சோதனையிட்டனர்.. அப்போது காருக்குள் ரூ. 13 லட்சம் ரொக்கப் பணம் இருந்திருப்பதை கண்டு அதிர்ந்தனர்.. அதற்கு உரிய ஆவணங்கள் இல்லை. இதையடுத்து போலீஸார் ரூ.13 லட்சம் பணத்தையும் பறிமுதல் செய்தனர். நான்சியிடம் விசாரணையும் மேற்கொண்டு வருகிறார்கள்.
டிரான்ஸ்பர்: கடந்த 15 நாட்களுக்கு முன்பு சிங்காநல்லூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி ஏராளமான பணத்தை பறிமுதல் செய்திருந்தனர்.. எனவே, நான்சி மாற்றப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் மாற்றப்படவில்லை.
காரணம், தினமும் கிடைக்கும் லஞ்சப் பணத்தை நான்சி நேரடியாக வாங்காமல், பத்திர எழுத்தர்களிடம் வாங்கி வைக்கும்படி சொல்லியிருக்கிறார்.. அப்படி இதுவரை வாங்கிய லஞ்சப்பணத்தின் மொத்த தொகை ரூ.13 லட்சமாகும்.. இந்த 13 லட்சம் வசூலான தொகையை, தன்னுடைய காரில் வைக்கும்படி பத்திர எழுத்தர்களிடம் சொல்லியிருக்கிறார் நான்சி.. அதன்படியே அவரும் லஞ்சப்பணத்தை காரில் வைத்துள்ளார்.
சோதனைகள்: இதற்கு பிறகுதான், நான்சியை சுற்றிவளைத்து கைது செய்துள்ளுர்கள்.. இதைத்தொடர்ந்து நான்சியின் வீடுகளிலும், அவரது உதவியாளர் வீட்டிலும், சோதனை நடத்தப்பட்டிருக்கிறது.. இதையடுத்து, நான்சி மீதான துறை ரீதியான நடவடிக்கை விரைவில் பாயும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
அதுமட்டுமல்ல, கைதான நான்ஸி நித்யா கரோலின் மீது ஏற்கனவே ஏகப்பட்ட லஞ்சப்புகார்கள் அதிகாரிகளுக்கு வந்துள்ளன.. அதனால்தான், லஞ்ச ஒழிப்பு துறையினர் ஏற்கனவே சோதனை நடத்தி, ஒரு லட்சத்து, 50 ஆயிரத்து 50 ரூபாய் பறிமுதல் செய்திருந்தனர்.. இது தொடர்பாக, நான்ஸி மற்றும் பத்திர பதிவு எழுத்தர் அலுவலக ஊழியர் ஒருவர் மீதும் வழக்கு பதிவு செய்து, விசாரணையும் நடந்து கொண்டிருக்கிறது.. இந்த நேரத்தில், 13 லட்ச ரூபாயுடன் கையும் களவுமாக நான்சி அகப்பட்டுக் கொண்டுள்ளது கோவை வருவாய்த்துறையை அதிர வைத்து வருகிறது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications