சர்ச்சையில் புஷ்பா! தமிழர்களை இழிவாக சித்தரிப்பது அயோக்கியத்தனம்! வெடிக்கும் டைரக்டர் களஞ்சியம்!
சென்னை: நடிகர் அல்லு அர்ஜூன் நடிப்பில் உருவாகி திரையில் ஓடிக்கொண்டிருக்கும் புஷ்பா திரைப்படம் புதிய சர்ச்சையில் சிக்கியிருக்கிறது.
தெலுங்கு டப்பிங் படமான புஷ்பாவில் தமிழக காவல்துறையினரை இழிவுப்படுத்தும் வகையில் காட்சிகள் இடம்பெற்றிருப்பதும், செம்மரக்கடத்தல் தொழிலின் தலைமையிடமாக சென்னையை சித்தரித்திருப்பதும் தமிழ் உணர்வாளர்களின் எதிர்ப்பை பெற்றிருக்கிறது.
அந்த வகையில் தமிழ் உணர்வாளரும், இயக்குநருமான களஞ்சியம் புஷ்பா திரைப்படம் குறித்த தனது பார்வையை ஒன் இந்தியா தமிழிடம் பகிர்ந்துகொண்டார். அதன் விவரம் பின்வருமாறு;

புஷ்பா திரைப்படம்
தெலுங்கில் ரங்கஸ்தலம் போன்ற ஹிட் படங்களை கொடுத்த இயக்குநர் சுகுமாரின் இயக்கத்தில் உருவாகிய புஷ்பா திரைப்படம் டப்பிங் மூலம் தமிழ் உள்ளிட்ட இன்னும் பல மொழிகளில் திரையில் ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த திரைப்படத்தில் செஞ்சந்தன மரம் கடத்தலில் ஈடுபடும் ஹீரோ, தமிழக காவல்துறையினரை பணத்தால் பேரம் பேசி வளைப்பது போன்ற காட்சிகள் இடம்பெற்றிருக்கின்றன. அதாவது பணத்தை வாங்கிக்கொண்டு இது போன்ற கடத்தல்களுக்கு தமிழக காவல்துறையினர் உடந்தையாக இருப்பது போன்று சித்தரிக்கப்பட்டுள்ளது.

பச்சை தெலுங்கன்
மேலும், செஞ்சந்தன மரம் திருப்பதி ஷேசாலம் வனப்பகுதியில் வளர்ந்தாலும் அதனை உலகம் முழுவதும் கடத்துவது தமிழர் என்பது போலும், சென்னையில் தான் செஞ்சந்தன மரம் கடத்தல் சாம்ராஜ்யம் நடைபெறுவது போன்றும் புஷ்பா திரைப்படத்தில் சித்தரிக்கப்பட்டுள்ளது. இதுமட்டுமல்லாமல் தமிழ் டப்பிங்கிலும் நான் பச்சை தெலுங்கன் என அல்லு அர்ஜூன் பேசுவது போன்று காட்சி வைக்கப்பட்டு பிறகு அது மியூட் செய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

அயோக்கியத்தனம்
இந்நிலையில் தமிழ் உணர்வாளரும், இயக்குநருமான களஞ்சியம் புஷ்பா திரைப்படம் குறித்து கூறுகையில், ''புஷ்பா திரைப்படத்தில் அயோக்கியத்தனமான காட்சிகளை வைத்திருக்கிறார்கள். ஒரு கடத்தல் காரனிடம் பணத்தை வாங்கிக்கொண்டு அவனை தமிழக போலீஸார் விடுவிப்பது போன்று காட்சிப்படுத்தப்பட்டிருப்பது ஏற்க முடியாத ஒன்று. எந்தளவுக்கு தமிழக காவல்துறையினரை எடை போட்டு வைத்துள்ளார்கள் என்பது இந்த காட்சியின் மூலம் தெரிய வருகிறது.''

களஞ்சியம் சாடல்
''இரண்டாவது செம்மரக்கடத்தலில் ஈடுபடுவதே ஆந்திராவில் உள்ள பெரும் முதலாளிகளும், தொழிலதிபர்களும் தான். அவர்கள் தான் தமிழக அப்பாவி கூலித் தொழிலாளர்களின் வறுமையை பயன்படுத்தி அவர்களை ஏமாற்றி மரம் வெட்டும் தொழிலுக்கு அழைத்துச் செல்கின்றனர். தமிழக கூலித் தொழிலாளர்களை ஆந்திர போலீஸார் சுட்டுக்கொன்ற போது நிகழ்விடத்துக்கு சென்று பார்த்து பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரோடு பேசியிருக்கிறேன். புஷ்பா திரைப்படத்தில் என்னவென்றால், செம்மரக்கடத்தல் தொழிலின் தலைமையகமே சென்னை தான் என்ற தவறான கருத்தை பதிவு செய்திருக்கிறார்கள்.''
Recommended Video

மிகவும் தவறு
''செம்மரக்கடத்தல் தொழில் செய்து வரும் ஆந்திர கார்ப்பரேட் முதலாளிகளின் சதித்திட்டத்தால் தமிழகம் மீது மோசமான பிம்பம் கட்டமைக்க முயற்சி செய்யப்பட்டிருக்கிறது. குறிப்பாக தமிழக காவல்துறையினரை இழிவுப்படுத்தும் வகையில் காட்சி வைக்கப்பட்டிருப்பது ரொம்ப தப்பு.'' நடிகர் அல்லு அர்ஜூனின் புஷ்பா திரைப்படத்துக்கு இவ்வாறு இயக்குநரும், தமிழ் உணர்வாளருமான களஞ்சியம் தனது எதிர்ப்பை பதிவு செய்திருக்கிறார்.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications