தங்கை மகளுடன் ராகுல் காந்தி.. பாஜக நிர்மல் பதிவால் கொந்தளிப்பு! டெல்லியிலிருந்து போலீசில் புகார்
சென்னை: பிரியங்கா காந்தியின் மகள் ராகுல் காந்தி அமர்ந்திருக்கும் படத்தை பகிர்ந்து கருத்திட்டு பாஜக நிர்வாகி நிர்மல் குமாரை காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி கடும் கண்டனம் தெரிவித்து இருக்கிறார்.
மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா அரசின் வகுப்புவாத அரசியலுக்கு எதிராக ஒற்றுமையை ஏற்படுத்த கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையிலான ஒற்றுமை யாத்திரையை கடந்த 7 ஆம் தேதி தொடங்கினார் ராகுல் காந்தி.
கன்னியாகுமரி காந்தி மண்டபத்தில் நடக்கத் தொடங்கிய ராகுல் காந்தி 11 ஆம் தேதி கேரள எல்லையில் உள்ள முலகுமூடு கிராமத்திற்கு வந்தடைந்தார். 11 வது நாளான இன்று நடை பயணத்தை அவர் மேற்கொண்டார்.

கேரளாவில் யாத்திரை
கேரளாவில் நடைபயணம் மேற்கொண்டு இருக்கும் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தியுடன் ஏராளமான காங்கிரஸ் தொண்டர்கள் கலந்துகொண்டு வருகிறார்கள். அவரது நடைபயணம் குறித்த செய்திகள் இந்திய அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்த தொடங்கி இருக்கின்றன. நாளுக்கு நாள் ஆதரவு அதிகரித்து வருவதாக காங்கிரஸ் கட்சியினர் தெரிவித்து வருகின்றனர்.

பாஜக நிர்மல் குமார்
இந்த நிலையில் தமிழ்நாடு பாஜக நிர்வாகி சிடிஆர் நிர்மல்குமார் ட்விட்டரில் ராகுல் காந்தி ஒரு பெண்ணுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். அத்துடன், "குழந்தைகளுடன் மருதாணி வைத்து விளையாடும் இந்த #pappu-வை கூட்டிக்கொண்டு யாத்திரை போகும் அந்த 10 பேரை நினைத்தால் தான் பாவமாக இருக்கிறது.. " என்று குறிப்பிட்டு இருந்தார்.

சைபர் கிரைமில் புகார்
நிர்மல் குமாரின் இந்த கருத்துக்கு பலரும் கண்டனம் தெரிவித்து இருந்தனர். தமிழ்நாடு நிதியமைச்சர் பிடிஆர், காங்கிரஸ் எம்பி ஜோதிமணி ஆகியோரும் இதனை கண்டித்திருந்தனர். இந்த நிலையில் நிர்மல் குமார் மீது டெல்லியை சேர்ந்த ஆதித்யா கோஸ்வாமி என்ற நபர் சைபர் கிரைமில் புகாரளித்துள்ளார்.

உசிலம்பட்டி டிஎஸ்பி
தனது மருமகளுடன் ராகுல் காந்தி இருந்த படத்தை தவறாக பதிவிட்டதாக அவர் தனது புகாரில் சுட்டிக்காட்டியுள்ளார். இது தொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள ஆதித்யா கோஸ்வாமி உசிலம்பட்டி டிஎஸ்பியிடம் இது தொடர்பாக பேசியுள்ளதாக குறிப்பிட்டு இருக்கிறார்.












Click it and Unblock the Notifications