சித்தப்பா சபேஷின் இறுதி ஊர்வலத்தில்! நடனமாடி வழியனுப்பிய ஸ்ரீகாந்த் தேவா! முகம் முழுக்க சோகம்
சென்னை: இசையமைப்பாளர் தேவாவின் சகோதரரும் பல ஹிட் பாடல்களை கொடுத்தவருமான சபேஷ் (68) உடல்நலக் குறைவால் நேற்று காலமான நிலையில் இன்று அவரது இறுதிச் சடங்கில் நடனமாடி தனது சித்தப்பாவை ஸ்ரீகாந்த் தேவா வழியனுப்பி வைத்த நெகிழ்ச்சியான சம்பவம் நடந்துள்ளது.
இசையமைப்பாளர் தேவாவின் இரட்டைச் சகோதரர்கள்தான் சபேஷ்- முரளி. 1983 ஆம் ஆண்டு கீபோர்டு பிளேயராக தனது இசைப்பயணத்தை தொடங்கிய சபேஷ். தன் அண்ணன் தேவா மட்டுமின்றி கே.வி.மகாதேவன் உள்ளிட்ட பல்வேறு இசையமைப்பாளர்களிடம் பணியாற்றியுள்ளார்.

1989-ஆம் ஆண்டு தேவா திரையுலகில் இசைமைப்பாளராக அறிமுகம் ஆவதற்கு முன்பே அவருக்கு உறுதுணையாக இருந்தவர்கள் சபேஷ்- முரளி. ரஜினி நடிப்பில் வெளியான 'அண்ணாமலை', 'பாட்ஷா', 'அருணாச்சலம்' ஆகிய படங்களுக்கு பின்னணி இசை அமைத்தது மட்டுமின்றி, தற்போது வரை ரஜினி படங்களில் வரும் இன்ட்ரோ டைட்டில் இசை, இவர் இசையமைத்தது தான்.
தேவா ஆண்டுக்கு 23 படங்கள் வரை இசையமைத்து கொண்டதற்கு சபேஷ் - முரளி இசைக் கோர்ப்பு பணிகளில் ஈடுபட்டு வந்தனர். "உதயம் தியேட்டருல", "கந்தன் இருக்குமிடம் கந்தகோட்டம்", "கொத்தால்சாவடி லேடி", "அண்ணாநகரு ஆண்டாளு", "குன்றுத்துல கோயிலு கட்டி" போன்ற பாடல்களை சபேஷ் பாடியுள்ளாரா்.
காத்தடிக்குது காத்தடிக்குது பாடலையும் சபேஷ்தான் பாடியிருந்தார். "ஜோடி", "ஆட்டோகிராப்" உள்ளிட்ட பாடல்களுக்கும் பின்னணி இசை அமைத்துள்ளார். தேவா, சபேஷ், முரளி, சம்பத், சிவா- பஞ்சபாண்டவர்கள் என சொல்லப்படும் 5 பேரும் இணைந்து எத்தனையோ ஹிட் பாடல்களை கொடுத்துள்ளன.
இந்த நிலையில் சபேஷுக்கு அண்மைக்காலமாக உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவர் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு நேற்று சிகிச்சை பலனின்றி காலமானார். தனது தம்பியின் இறப்பால் தேவா மிகவும் நிலைக்குலைந்துவிட்டார்.
சபேஷின் உடலுக்கு இயக்குநர்கள் ஆர்.வி.உதயகுமார், பேரரசு, சேரன் உள்ளிட்டோர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். ஸ்ரீகாந்த் தேவா தனது சித்தப்பாவுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்திவிட்டு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், சபேஷ் சித்தப்பாதான் என்னோட குரு. முதல் முதலாக என் விரலைப் பிடித்து அவர்தான் கீபோர்ட் சொல்லிக் கொடுத்தாரு.
என்னோட சித்தப்பாவையும் குருவையும் நான் இழந்துட்டேன். அவருக்கு நான் ஒரு மகன்தான். என்னை ரொம்ப பத்திரமா பார்த்துப்பாரு. கீபோர்ட்ல அவரோட விரல்களைப் பார்த்துதான் ஒரு கீபோர்ட் பிளேயராகணும்னு நான் நெனச்சேன்.
சித்தப்பா மறைவால் அப்பாவை பார்க்கவே முடியவில்லை. ரொம்ப உடைந்து போய்ட்டாரு என ஸ்ரீகாந்த் தேவா கண்ணீர் மல்க தெரிவித்தார்.
அவரது இறுதி ஊர்வலம் புறப்பட்ட போது நடிகர் ஜெய், ஸ்ரீகாந்த் தேவா உள்ளிட்டோர் அவரது உடலை தூக்கிக் கொண்டு இறுதி ஊர்வல வாகனத்தில் வைத்தனர்.
தனது சித்தப்பாவின் இறுதி ஊர்வலத்தில் அவருக்காக நடனமாடி வழியனுப்பி வைத்தார் ஸ்ரீகாந்த் தேவா. முகத்தில் அத்தனை சோகம் ததும்ப அவர் நடனமாடினார்.
இது போல் அண்மையில் ராபர்ட் மாஸ்டர் தனது தாய் இறப்பிலும், பிரியங்கா ரோபோ சங்கர் தனது கணவரின் இறப்பிலும் நடனமாடி அஞ்சலி செலுத்தியது குறிப்பிடத்தக்கது.
-
அடுத்த ரவுண்டு ஆரம்பம்.. வெயிலுக்கு பிரேக் தரும் மழை.. 2 ஆம் தேதி வரை கொளுத்த போகுது! வானிலை மையம் -
15 out of 16: சென்னை மாவட்டத்தில் எத்தனை தொகுதிகளில் திமுக போட்டி? சத்யராஜ் மகளுக்கு சீட் இல்லை! -
தலைநகர் சென்னையை மொத்தமாக அள்ள திமுக பிளான்.. 15 தொகுதிகளில் நேரடி போட்டி! 1ல் காங்கிரஸ்! -
Vijay: வேணும்னே பண்றாங்க.. 10 குற்றச்சாட்டுகளுடன் தலைமை செயலகத்துக்கு நேரில் போன விஜய்! -
Gold Price: மீண்டும் ஷாக் கொடுத்த தங்கம் விலை.. ஒரே நாளில் அதிரடி உயர்வு.. நகை பிரியர்கள் கலக்கம்! -
தமிழகத்தின் முதல் பி.ஆர்.டி.எஸ்.. சென்னையில் பிரம்மாண்ட போக்குவரத்து மாற்றம்.. பணிகள் ஸ்டார்ட்! -
சென்னையில் வீடுகளுக்கு குழாய் மூலம் கேஸ்.. கட்டணம், பாதுகாப்பு எப்படி.. அதிகாரி விளக்கம் -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னை மாணவி தடா அருவிக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி












Click it and Unblock the Notifications