கணினி பாடத்தை அரசு பாடத்திட்டத்தில் சேர்க்க தமிழக அரசுக்கு கோரிக்கை
சென்னை: கருணாநிதியின் கலைத்திட்டம் (அரசு பள்ளிகளில் கணினி அறிவியல் பாடம்) மாற்றம் வருகின்ற கல்வியாண்டில் நடைமுறைப்படுத்த வேண்டும் என கணினி ஆசிரியர் சங்கத்தினர் தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இதுகுறித்து அந்த சங்க நிர்வாகிகள் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், கடந்த 10 ஆண்டுகளில் பாடத்திட்டத்தை மட்டும் மாற்றி அமைத்த முந்தைய அரசு கலைத் திட்டத்தில் எவ்வித மாற்றமும் கொண்டு வரவில்லை. இதற்கெல்லாம் முன்னோடியாக மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி சமச்சீர் கல்வியில் கணினி அறிவியல் பாடத் திட்டம் ஆறாவது படமாக மாற்றி அமைத்தார்.

இதன் மூலம் கலைத் திட்டத்தில் முதல் முறையாக மாற்றம் செய்து கல்வியை உலகத் தரத்திற்கு கொண்டு செல்லவிருந்த வடிவத்தை 2011ம் ஆண்டு பொறுப்பேற்ற அதிமுக அரசு முற்றுப்புள்ளி வைத்தது. அரசுப்பள்ளியில் கணினி அறிவியல் பாடம் என்பது இன்று வரை அரசுப் பள்ளி மாணவர்களுக்கு கானல் நீராக போய்விட்டது.
முதல்வர் ஸ்டாலின் இது போன்று நல்ல திட்டங்களை எல்லாம் செயல்படுத்த வேண்டுகிறோம். வருகின்ற கல்வியாண்டில் அனைத்து மாணவர்களும் கணினி அறிவியல் பாடத்தை அரசுப் பள்ளியில் ஆறாவது பாடமாக கொண்டு வந்து அவரது பிறந்த நாளை அரசு பள்ளிகளில் கணினி அறிவியல் தோற்றுவித்த நாளாக கொண்டாட வேண்டுகிறோம் என கோரிக்கை வைத்துள்ளார்கள்.
-
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்! -
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
திண்டுக்கல் கொடை ரோடு விஏஓ சத்யா கனவிலும் நினைக்காதது.. அரசு ஊழியர்கள் அறிய வேண்டிய பாடம் -
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% தாண்டினால் என்ன நடக்கும்? வீட்டு வாடகைப்படியிலும் மாற்றம்? -
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம்












Click it and Unblock the Notifications