குண்டைத் தூக்கிப் போட்ட காங்., 39 தொகுதிகள் வேண்டுமாம்! அறிவாலயத்துக்கு பறந்த லிஸ்ட்.. ஷாக் திமுக!
சென்னை: வரவிருக்கும் 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு திமுக கூட்டணிக்குள் தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தைகள் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளன. கடந்த தேர்தலில் 25 தொகுதிகளில் போட்டியிட்ட தமிழக காங்கிரஸ் கட்சி, இந்த முறை கணிசமாக அதிகரித்து 39 தொகுதிகள் வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்துள்ளது. இந்த கோரிக்கையை முன்வைக்கவே காங்கிரஸ் மேலிடம் அமைத்த ஐவர் குழு, திமுக தலைவர் மற்றும் முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து பேசியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த இரண்டு தசாப்தங்களாக திமுக கூட்டணியில் முக்கிய அங்கமாக இருந்து வரும் காங்கிரஸ், 2004 முதல் 2021 வரை நடந்த பெரும்பாலான தேர்தல்களை திமுகவுடன் இணைந்தே சந்தித்துள்ளது. 2014 லோக்சபா தேர்தலில் மட்டும் தனித்து களமிறங்கிய காங்கிரஸ், அதன் பின்னர் மீண்டும் திமுக கூட்டணியில் இணைந்தது.
2021 சட்டசபை தேர்தலில் காங்கிரசுக்கு 25 தொகுதிகள் ஒதுக்கப்பட்ட நிலையில், அதில் 18 இடங்களில் வெற்றி பெற்றது. இந்த வெற்றி விகிதமே, தற்போது கூடுதல் தொகுதிகளை கேட்கும் அடிப்படை காரணமாகக் கூறப்படுகிறது.

2026 சட்டமன்ற தேர்தல்
இதற்கிடையே, நடிகர் விஜய் தலைமையில் தமிழக வெற்றிக் கழகம் என்ற புதிய அரசியல் கட்சி தொடங்கப்பட்டதும், கூட்டணி அரசியல் சமன்பாடுகளில் புதிய குழப்பத்தை உருவாக்கியுள்ளது. ஆட்சியில் பங்கு வழங்கப்படும் என்ற விஜயின் அறிவிப்பு, நீண்ட காலமாக அதிகாரத்தைத் தவிர்த்து நிற்கும் தமிழக காங்கிரசாரிடையே புதிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியதாக சொல்லப்படுகிறது. அதன் தாக்கமாக, திமுக கூட்டணியில் தொடர்ந்தாலும், இம்முறை ஆட்சியில் உரிய பங்கு கிடைக்க வேண்டும்; அதற்காக அதிக தொகுதிகள் ஒதுக்கப்பட வேண்டும் என்ற அழுத்தம் காங்கிரஸ் தரப்பில் அதிகரித்துள்ளது.
திமுக காங்கிரஸ் கூட்டணி
இந்த சூழலில், திமுக தலைமையிடம் நேரடியாக பேச காங்கிரஸ் மேலிடம் திடீரென ஐவர் குழுவை அமைத்தது அரசியல் வட்டாரங்களில் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த குழுவில் கிரிஷ் சோடங்கர், தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் இடம்பெற்றுள்ளனர். அவர்கள் நேற்று சென்னை அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினை சந்தித்து தொகுதி பங்கீடு குறித்து விரிவாக ஆலோசனை நடத்தியுள்ளனர்.
காங்கிரஸ் 39 தொகுதிகள்
திமுக தரப்பில் மூத்த அமைச்சர்கள் மற்றும் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் இந்த பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டனர். பேச்சுவார்த்தையின் போது, இம்முறை குறைந்தது 39 தொகுதிகள் காங்கிரசுக்கு ஒதுக்கப்பட வேண்டும் என்று அந்த குழு வலியுறுத்தியதாக தெரிகிறது. மேலும், காங்கிரசுக்கு சாதகமானதாக கருதப்படும் 125 தொகுதிகளை ஆய்வு செய்து, அதில் இருந்து 39 தொகுதிகளின் பட்டியலையும் திமுக தலைமையிடம் வழங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கூட்டணி கட்சிகள்
ஆனால், இந்த கோரிக்கைக்கு உடனடி முடிவு எடுக்காமல், திமுக சார்பிலும் ஒரு குழு அமைத்த பின்னர் விரிவாக ஆலோசிக்கலாம் என்ற பதிலையே முதல்வர் அளித்துள்ளதாக கூறப்படுகிறது. அதே நேரத்தில், திமுக கூட்டணியில் ஏற்கனவே இடம்பெற்றுள்ள விசிக, மதிமுக, இடதுசாரி கட்சிகள் உள்ளிட்டவர்களுக்கு எவ்வளவு தொகுதிகள் ஒதுக்கப்படும் என்பது இன்னும் இறுதி செய்யப்படாத நிலையில், காங்கிரசின் இந்த கூடுதல் கோரிக்கை கூட்டணிக்குள் புதிய சிக்கலை உருவாக்கும் என்ற கருத்தும் அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.
திமுக-காங்கிரஸ்
எனவே, வரவிருக்கும் நாட்களில் திமுக-காங்கிரஸ் இடையிலான இந்த தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை, 2026 தேர்தல் அரசியலில் முக்கிய திருப்பமாக அமையக்கூடும் என்று கணிக்கப்படுகிறது. இந்நிலையில் காங்கிரஸ் கேட்டுள்ள தொகுதிகளின் பட்டியல் தற்போது கசிந்துள்ளது. அதன்படி, பொன்னேரி, வேளச்சேரி, ஸ்ரீபெரும்புதுார், செய்யூர், மதுராந்தகம், சோளிங்கர், கே.வி.குப்பம், கலசப்பாக்கம், ஊத்தங்கரை, கள்ளக்குறிச்சி, ஆத்துார், ஓமலுார் ஆகிய தொகுதிகள் அந்த பட்டிலில் உள்ளது.
தொகுதி பட்டியல்
மேலும், சேலம் தெற்கு, சங்ககிரி, நாமக்கல், கோபிசெட்டிப்பாளையம், ஊட்டி, சூலுார், கோவை தெற்கு, உடுமலைபேட்டை, விருத்தாசலம், கடலுார், சிதம்பரம், மயிலாடுதுறை, பாபநாசம், அறந்தாங்கி, காரைக்குடி, மேலுார், மதுரை தெற்கு, ஸ்ரீவில்லிபுத்துார், சிவகாசி, திருவாடானை, ஸ்ரீவைகுண்டம், தென்காசி, கடையநல்லுார், நாங்குநேரி, குளச்சல், விளவங்கோடு, கிள்ளியூர் ஆகிய கேட்டதாகச் சொல்லப்படுகிறது.
-
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
காங்கிரஸ் VS பாஜக.. தமிழகத்தில் எந்தெந்த தொகுதிகளில் ‘கை' - ‘தாமரை' நேரடி மோதல்.. வெல்வது யாரு? -
ரூ.2000 + ரூ.8000.. இல்லத்தரசிகளின் மனதை வெல்லும் திமுக மாஸ்டர் பிளான்.. கூப்பன் தருவது ஏன்? -
அரசு அலுவலர், ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு! ஸ்டாலின் சொன்ன மேஜர் அறிவிப்பு! திமுக சிக்ஸர் வாக்குறுதி -
மகளிரை கவர சூப்பர் வாக்குறுதி.. ரூ.5 லட்சம் வரை சுய உதவி குழு பெண்களுக்கு கடன்.. ஸ்டாலின் அறிவிப்பு -
திமுக ஏஜெண்ட் செல்வப் பெருந்தகை.. காங்கிரஸில் வெடித்த கலகம்! டெல்லிக்கு டிக்கெட் போடும் கதர் தலைகள்! -
அதிமுக மாஜிகளுக்கு கட் அவுட்..திமுக உ.பி.களுக்கு கெட் அவுட்டா? 19 சீட்டுகளை அள்ளிய ’அம்மா’ பிள்ளைகள் -
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் பட்டியல் வெளியானது.. சின்னதுரைக்கு மீண்டும் வாய்ப்பு! -
பெரும் பணக்காரர்களுக்கு செல்வ வரி விதிக்கப்படுமா? நாடாளுமன்றத்தில் திமுக எம்.பி. வில்சன் கேள்வி -
திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்த முன்னாள் MLA செ.கு.தமிழரசன்! இரட்டை இலையில் வென்றவர்! அதான் ஹைலைட் -
"ஈ அடிச்சான் காப்பி".. அதிமுக தேர்தல் அறிக்கையை காப்பியடித்த திமுக? எவ்வளவு ஒற்றுமை பாருங்க -
"ரூ.30 லட்சம் வரை கடனுதவி".. சிறுபான்மையினரை கவர திமுக தேர்தல் அறிக்கையில் டாப் 10 அறிவிப்பு












Click it and Unblock the Notifications