குரங்கா? தலைவரே இப்படி பேசுனா தொண்டர்கள் எப்படி? - அண்ணாமலை சர்ச்சை பேச்சால் கொந்தளித்த எம்.எல்.ஏ!
சென்னை : அரசியல் அடிச்சுவடு தெரியாதவர்களை கட்சியின் தலைவராக ஆக்கினால் இப்படித்தான் அநாகரிகமாக பேசுவார்கள் என அண்ணாமலைக்கு காங்கிரஸ் எம்.எல்.ஏ செல்வப்பெருந்தகை கண்டனம் தெரிவித்துள்ளார்.
அமைச்சர் செந்தில்பாலாஜியின் விமர்சனம் பற்றி பாஜக தமிழக தலைவர் அண்ணாமலையிடம் இன்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது, பத்திரிகையாளர்களை கடுமையாகப் பேசினார் அண்ணாமலை.
மரத்தின் மீது குரங்கு தாவுவதைப் போல் ஏன் சுற்றி சுற்றி வருகிறீர்கள் என்று பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களிடம் கோபமாகப் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்தில் பாஜக தலைமை அலுவலகத்தின் முன்பு பாஜகவினர் பத்திரிகையாளர்களை தாக்க முயன்றது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இன்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, பத்திரிகையாளர்களை திட்டியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடலூரில் அண்ணாமலை
இந்தி திணிப்புக்கு எதிராக திமுக போராட்டம் நடத்திய நிலையில், திமுக தமிழை அழிப்பதாக குற்றம்சாட்டி தமிழ்நாடு முழுவதும் பாஜகவினர் இன்று ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். கடலூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பங்கேற்றார். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு பிறகு அண்ணாமலையிடம் அமைச்சர் செந்தில் பாலாஜி விமர்சனம் தொடர்பாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்ப முற்பட்டனர்.

குரங்கு மாதிரி
அப்போது மரத்து மேல் குரங்கு தாவுவது போல் ஏன் சுற்றி சுற்றி வருகிறீர்கள் என செய்தியாளர்களிடம் அண்ணாமலை கோபமாகப் பேசினார். தொடர்ந்து பேசிய அண்ணாமலை, நாய், பேய், சாராய வியாபாரி சொல்வதற்கெல்லாம் என்னால் பதிலளிக்க முடியாது எனக் கூறிவிட்டு, பத்திரிகையாளர்களைப் பொருட்படுத்தாமல் அங்கிருந்து கோபமாகப் புறப்பட்டுச் சென்றார்.

சாராய அமைச்சர்
தீபாவளி பண்டிகைக்கு டாஸ்மாக் மூலம் வந்த வருமானம் தொடர்பாக தவறான தகவலைப் பரப்பும் பத்திரிகையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் செந்தில் பாலாஜி எச்சரிக்கை விடுத்ததைக் குறிப்பிட்டு, அவரை சாராய அமைச்சர் என்ற வார்த்தையை உபயோகித்து அண்ணாமலை விமர்சித்து வருகிறார். பல மாதங்களாகவே செந்தில் பாலாஜி - அண்ணாமலை இடையே வார்த்தைப் போர் நடந்து வருகிறது.

முற்றிய மோதல்
கோவையில் நடந்த கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக அண்ணாமலை திமுக அரசை விமர்சித்து வந்த நிலையில், உண்மைத் தன்மையை வெளியிடுவதற்கு முன்பு பதற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில் பாஜக தலைவர் இந்த வழக்கு சம்பந்தமாக பேசியுள்ளார். எனவே, அவருக்கு இந்தத் தகவல்கள் எப்படி கிடைத்தது, எதன் அடிப்படையில் இவ்வாறு அவர் வெளியிட்டார் என்பது தொடர்பாக என்.ஐ.ஏ முதலில் அவரிடம் விசாரணை நடத்த வேண்டும் என்றார்.

பத்திரிகையாளர்கள் மீது கோபம்
செந்தில் பாலாஜி அப்படி கூறியது பற்றி செய்தியாளர்கள் கேட்க முயன்றபோதுதான் அண்ணாமலை, 'மரத்து மேல் குரங்கு தாவுவது போல் ஏன் சுற்றி சுற்றி வருகிறீர்கள்' என பத்திரிகையாளர்களிடம் கோபப்பட்டார். செந்தில் பாலாஜி, டாஸ்மாக் விற்பனை பற்றி தவறான தகவல் பரப்பினால் நடவடிக்கை என பத்திரிகையாளர்களை எச்சரித்ததற்கு எதிராகப் பொங்கி, பத்திரிகையாளர்களுக்கு ஆதரவாகப் பேசிய அண்ணாமலை, இன்று பத்திரிகையாளர்களிடம் கோபமாகப் பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அண்ணாமலைக்கு கண்டனம்
சில நாட்களுக்கு முன்பு அண்ணாமலை அமெரிக்காவில் இருந்து திரும்பியபிறகு பாஜக அலுவலகமான கமலாலயத்திற்கு வந்தபோது பாஜகவினர் பத்திரிகையாளர்களுடன் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் பாஜகவினருக்கும், பத்திரிகையாளர்களுக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பத்திரிகையாளர்களை தாக்க முயன்ற பாஜகவினர் பற்றி அண்ணாமலையிடம் பத்திரிகையாளர்கள் முறையிட்டனர். இதையடுத்து செய்தியாளர்களிடம் பாஜகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவத்திற்கு அண்ணாமலை வருத்தம் தெரிவித்தார். இந்நிலையில், அவரே செய்தியாளர்களிடம் மோசமாக நடந்து கொண்டுள்ளதற்கு கண்டனங்கள் எழுந்து வருகின்றன.

நாவடக்கம் தேவை
இதுதொடர்பாக காங்கிரஸ் சட்டமன்றக் கட்சித் தலைவர் செல்வப்பெருந்தகை தனது ட்விட்டர் பக்கத்தில், "பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, தமிழ்நாட்டில் இருக்கும் பத்திரிகையாளர்களை, செய்தி சேகரிக்கும் செய்தியாளர்களை ஒருமையில் அழைப்பது, குரங்கு என்று சொல்வதெல்லாம் அநாகரித்தின் உச்சம். இவர்களுக்கு நாவடக்கம் தேவை. பாஜகவினரின் இந்த போக்குக்கிற்கு வன்மையான கண்டனங்கள். தலைமையே இப்படி பேசினால், தொண்டர்கள் எப்படி இருப்பார்கள்?

அரசியல் அடிச்சுவடு தெரியாதவர்
சில வாரங்களுக்கு முன் செய்தி சேகரிக்க சென்ற பத்தரிகையாளர்களை தகாத வார்த்தைகளில் பேசி, அவர்களை அடிப்பதற்கு துணிந்தவர்கள் தான் இந்த பா.ஜ.கவினர். நாகரீகம் தவழும் தமிழக அரசியல் வரலாற்றில் அரசியல் அடிச்சுவடு தெரியாதவர்களை கட்சியின் தலைவராக ஆக்கினால் இப்படித்தான் அநாகரிகமாக பேசுவார்கள். இவற்றையெல்லாம் தமிழக மக்கள் கண்டுகொண்டுதான் இருக்கிறார்கள். அவர்களுக்கு தெரியும் எதை எப்படி செய்யவேண்டுமென்று." எனத் தெரிவித்துள்ளார்.
-
"மக்கள் சக்தி இயக்கம்".. அண்ணாமலை தொடங்கும் புதிய அரசியல் பாதை? அமித் ஷா தந்த ரியாக்சன் என்ன? -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
விஜய்க்கு நேரடி குடைச்சல் தரப்போகும் அண்ணாமலை.. பாஜகவில் இருந்து விலகிய கையோடு போட்ட பிளான்! பின்னணி -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
அப்போ ரஜினிக்கு பதில் அண்ணாமலை.. இனி விஜய், உதயநிதிக்கு மாற்றாக மாற முடியுமா? -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெற.. மாணிக்கம் தாகூர் தான் முக்கிய காரணமாம்.. சொல்கிறார் விஸ்வநாதன்! -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
1000% கன்ஃபார்ம்.. புதிய கட்சி ஆரம்பிக்கும் அண்ணாமலை! அடுத்த வாரம் இருக்கு கச்சேரி! பரபர பாஜக! -
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி!












Click it and Unblock the Notifications