லீக்கான மேட்டர்.. மோப்பம் பிடித்த உளவுத்துறை! விஜய் மீட்டிங் ப்ளானை கேன்சல் செய்த காங்கிரஸ் புள்ளி!
சென்னை: தமிழக அரசியலில் வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, காங்கிரஸ் கட்சிக்குள் நடைபெறும் ஆலோசனைகள் தற்போது பெரும் கவனத்தை பெற்றுள்ளன. குறிப்பாக, நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றி கழகத்துடன் (தவெக) கூட்டணி தொடர்பான தகவல்கள் அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன.
தமிழக காங்கிரஸ் கமிட்டியின் முக்கிய நிர்வாகிகள் விரைவில் டெல்லி சென்று, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியை நேரில் சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளதாக கூறப்படுகிறது. இந்த சந்திப்பில், தமிழ்நாட்டின் தற்போதைய அரசியல் சூழல், திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸின் நிலை, வரும் 2026 சட்டமன்றத் தேர்தல் வியூகம் உள்ளிட்ட பல்வேறு முக்கிய விவகாரங்கள் பேசப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறிப்பாக, திமுக கூட்டணியில் தொடரலாமா, அல்லது மாற்று கூட்டணிகளை பரிசீலிக்கலாமா என்ற கேள்வி, காங்கிரஸ் கட்சிக்குள் தீவிரமாக விவாதிக்கப்பட்டு வருவதாக சொல்லப்படுகிறது. இதற்கிடையில், திமுக கூட்டணி வேண்டாம், நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றி கழகத்துடன் கூட்டணி அமைக்கலாம் என டெல்லி தலைமையிடம் சில தமிழக காங்கிரஸ் தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.

தவெக அரசியல் திட்டம்
திமுகவுடன் நீண்ட காலமாக கூட்டணியில் இருந்தாலும், அந்த கூட்டணியில் காங்கிரசுக்கு போதிய அரசியல் பலன் கிடைக்கவில்லை என்ற குற்றச்சாட்டு, காங்கிரஸ் கட்சிக்குள் தொடர்ந்து இருந்து வருகிறது. அதனாலேயே, புதிய அரசியல் வாய்ப்புகளை தேடி காங்கிரஸ் மேலிடம் கவனம் செலுத்தி வருவதாக கூறப்படுகிறது. இந்த பின்னணியில்தான், தென்னிந்திய அரசியலில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய ஒரு தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றி கழகம் மற்றும் காங்கிரஸ் கட்சி இடையே, ஒரு முக்கிய கூட்டணிக்கான பேச்சுவார்த்தை தொடங்கலாம் என்ற தகவல் அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை கிளப்பியுள்ளது.
நடிகர் விஜய்
இந்த கூட்டணி, தமிழகத்தை மட்டுமின்றி கேரளா மற்றும் புதுச்சேரி அரசியலிலும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியதாக பார்க்கப்படுகிறது. நடிகர் விஜய்க்கு தமிழகத்தில் மட்டுமல்லாமல், கேரளா மற்றும் புதுச்சேரியிலும் பெரிய ரசிகர் வட்டம் இருப்பது குறிப்பிடத்தக்கது. சமீப காலமாக, விஜய் தனது அரசியல் செயல்பாடுகளை தமிழக எல்லைக்குள் மட்டும் கட்டுப்படுத்தாமல், புதுச்சேரி மற்றும் கேரளா அரசியலையும் கருத்தில் கொண்டு செயல்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இதன் ஒரு பகுதியாகவே, இந்த மூன்று மாநிலங்களையும் இணைக்கும் வகையில் ஒரு பெரிய அரசியல் திட்டம் தயாராகி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
காங்கிரஸ் தவெக கூட்டணி
அதனால், தமிழக வெற்றி கழகம் - காங்கிரஸ் கூட்டணி, தமிழகம், புதுச்சேரி, கேரளா ஆகிய மூன்று மாநிலங்களை இலக்காக கொண்டு வியூகம் வகுக்கப்பட்டிருக்கலாம் என்ற கருத்து அரசியல் வட்டாரங்களில் நிலவுகிறது. கர்நாடகா, தெலங்கானா போன்ற மாநிலங்களில் ஏற்கனவே ஆட்சியை பிடித்துள்ள காங்கிரஸ், கேரளாவில் மீண்டும் அதிகாரத்தை கைப்பற்றவும், புதுச்சேரியில் அரசியல் செல்வாக்கை அதிகரிக்கவும் முயற்சி செய்து வருகிறது. அதே நேரத்தில், அரசியலில் புதிதாக களமிறங்கியுள்ள நடிகர் விஜய்க்கு, காங்கிரஸ் போன்ற தேசிய கட்சியுடன் கூட்டணி அமைப்பது ஒரு முக்கிய வாய்ப்பாக அமையலாம் என்ற பார்வையும் உள்ளது.
கேசி வேணுகோபால் சென்னை
இந்த சூழலில்தான், காங்கிரஸ் பொதுச்செயலர் கே.சி. வேணுகோபால் சமீபத்தில் சென்னைக்கு வந்தார். அவர் நடிகர் விஜயை ரகசியமாக சந்தித்து பேச திட்டமிட்டிருந்ததாக கூறப்படுகிறது. ஆனால், அவரது வருகை குறித்து கட்சி நிர்வாகிகளுக்கும், மத்திய மற்றும் மாநில உளவுத்துறை போலீசாருக்கும் தகவல் கசிய்ந்ததால், நேரடியாக இருவரும் சந்திக்கும் திட்டம் கடைசி நேரத்தில் திடீரென தவிர்க்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. இதையடுத்து, திட்டமிட்டிருந்த பட்டினப்பாக்கம் நட்சத்திர ஹோட்டலில் தங்காமல், சென்னை அண்ணா சாலை அருகே உள்ள வேறு ஒரு நட்சத்திர ஹோட்டலில் வேணுகோபால் தங்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
விஜயுடன் சந்திப்பு
வேணுகோபால் வருகை குறித்து அறிந்த தமிழக காங்கிரஸ் எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள் அவரை வரவேற்க விமான நிலையம் சென்றதாகவும், ஆனால் அவர்களை பார்த்த வேணுகோபால், தன்னை சந்திக்க யாரும் ஹோட்டலுக்கு வர வேண்டாம் என கூறி சென்றதாகவும் சொல்லப்படுகிறது. இதன் மூலம், இந்த வருகை மிகுந்த ரகசியத்துடன் நடத்தப்பட்டதாக அரசியல் வட்டாரங்கள் கருதுகின்றன.
காங்கிரஸ் மாற்று கூட்டணி
அன்று இரவு சென்னையில் தங்கிய வேணுகோபால், தமிழக வெற்றி கழகத்துடனான கூட்டணி குறித்து பலரை சந்தித்து ஆலோசனை நடத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதனைத் தொடர்ந்து, அவர் கோவைக்கு சென்று, அங்கிருந்து ஊட்டிக்கு பயணம் செய்து சில முக்கிய நபர்களை சந்தித்ததாகவும் கூறப்படுகிறது. இந்த சந்திப்புகள், வரவிருக்கும் தேர்தலை முன்னிட்டு நடைபெறும் பெரிய அரசியல் நகர்வுகளின் தொடக்கமாக இருக்கலாம் என்ற எதிர்பார்ப்பு தற்போது அரசியல் வட்டாரங்களில் அதிகரித்துள்ளது.
-
150 கட்சிகளுடன் கூட்டணி வைத்திருக்கும் விஜய்! அடித்து சொன்ன சீமான்! இதை கவனிச்சீங்களா! -
விஜய்க்கு பாதுகாப்பு கொடுங்க.. மத்திய அரசுக்கு பதில் மணிப்பூர் ஆளுநருக்கு கடிதம் எழுதிய தவெக! -
விஜய்க்கு அதிகாலையே சிம்ம சொப்பனமாக வந்த ஸ்டாலின்.. திருச்சியில் 'டீ' பிரேக் பாலிடிக்ஸ்.. செம மூவ்! -
விஜய் செல்வாக்கு + பதவி.. திருமாவளவன் மாநில அரசியலுக்கு திரும்புவதற்கு பின்னணியில் 2 காரணங்கள்! -
தேர்தலுக்கு பின்.. விஜயுடன் கூட்டணி.. பாஜக போடும் மாஸ்டர் பிளான்.. முக்கோண பிரம்மாஸ்திரம்! -
சஞ்சய் 4 வருஷமாக படும்பாடு.. விஜய் நிஜ ஹீரோ இல்ல, தந்தையாக தோற்று விட்டார்! பிரபலம் ஆதங்கம் -
விஜய் பேச்சை கேட்க ஆள் வரல! செல்ஃபி எடுக்க குவிந்த ரசிகர்கள்! இதுதான் பரப்புரையா! -
வேட்பாளரை கூட சரியா பார்த்து நிறுத்த தெரியாத விஜய்! வழக்கு, சர்ச்சைகளில் சிக்கியவர்களுக்கு சீட் -
சங்கீதா சொன்னது தான் உண்மையா? விஜயின் சொத்து பட்டியலை சுட்டிக்காட்டும் நெட்டிசன்கள்! அடுத்த பஞ்சாயத்து -
என்னது பி டீமா.. ஏ டீம் யாருன்னு தெரியுமா.. ஆவேசமான சீமான்.. விஜயையும் சும்மா விடலையே -
‘ஜனநாயகன்’ டிக்கெட்டை அதிக விலைக்கு விற்று மோசடி செய்தவர் தவெக வேட்பாளரா? சொந்த கட்சியினரே எதிர்ப்பு -
தன்னையும், மக்களையும் நம்பாதவர்தான்.. 2 தொகுதியில் போட்டியிடுவார்! அட்டாக் மோடில் சீமான்












Click it and Unblock the Notifications