சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

தேர்தல் நெருங்குற நேரத்துல ராகுல் காந்தி இப்படியா பண்ணுவாரு... கலக்கத்தில் காங்கிரஸ் கட்சி!

By
Google Oneindia Tamil News

சென்னை: உத்திரப்பிரதேசம், பஞ்சாப் என ஐந்து மாநில தேர்தல் நெருங்கிவிட்டது. காங்கிரஸ் கட்சியின் ராகுல் காந்தி பிரசாரத்தைத் தொடங்காததால் காங்கிரஸ் கட்சியினர் சோகத்தில் இருக்கின்றனர்.

உத்தரப்பிரதேசம், பஞ்சாப், கோவா, மணிப்பூர், உத்தரகண்ட் என ஐந்து மாநில சட்டசபைத் தேர்தல் வரும் பிப்ரவரி 10-ம் தேதி மார்ச் 7ம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடத்தப்படும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது.

ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தலுக்கு அனைத்துக் கட்சிகளும் மும்மரமாக தயாராகி வருகின்றன. பிரசாரத்துக்குத் தேவயான அனைத்து விஷயங்களையும் அனைத்து கட்சிகளும் சிறப்பாக செய்யத் தொடங்கியுள்ளன.

 கல்வானில் சீனா கொடியேற்றும் வீடியோ.. இப்பவாவது மவுனத்தை கலையுங்க... மோடிக்கு ராகுல் அப்பீல் கல்வானில் சீனா கொடியேற்றும் வீடியோ.. இப்பவாவது மவுனத்தை கலையுங்க... மோடிக்கு ராகுல் அப்பீல்

மோடி

மோடி

இந்தியாவில் கொரோனா வேகம் அதிகரித்துள்ளதால், தேர்தல் நடக்கும் மாநிலங்களில் அந்ததந்த மாநில கட்சிகளே தங்களுக்குள் சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளன. இதனால் தேர்தல் பிரசாரம் சற்று சுனங்கி இருக்கிறது. இதை டிஜிட்டல் தளத்தில் எடுத்துச் செல்ல அனைத்து கட்சிகளும் யோசித்து வருகின்றன. பிரதமர் நரேந்திர மோடியைப் பொருத்தவரை உத்திரப்பிரதேசம் மற்றும் பஞ்சாபில் வெற்றி பெற வேண்டும் என நினைக்கிறார். அதற்காக உத்திரப்பிரதேசத்தில் கொரோனா தொற்று அதிகரிக்கும் முன்னரே அவர் பிரசாரத்தி துவக்கிவிட்டார்.

பஞ்சாப் பிரச்சனை

பஞ்சாப் பிரச்சனை

இந்த நிலையில், பஞ்சாப் மாநிலத்தில் நலத்திட்டங்கள் வழங்கவும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்கவும் பிரதமர் மோடி பஞ்சாப் சென்றார். ஹெலிகாப்டரில் செல்லவேண்டியவர், வானிலை காரணமாக சாலை வழியாக சென்றார். அங்கு விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்ததால், 15 நிமிடங்களுக்கும் மேலாக ஒரு மேம்பாலத்தில் நிற்கவேண்டியதாகிவிட்டது. இது பிரதமரின் பாதுகாப்பையே கேள்விக்குறியாக்கி, நாடு முழுதும் பெரிய எதிர்ப்பலையை உருவாக்கியது.

உத்திரப்பிரதேசம்

உத்திரப்பிரதேசம்

உத்திரப்பிரதேச தேர்தலை நாடே உற்று நோக்கி வருகிறது. ஆளும் பா.ஜ.கவை எதிர்த்து சமாஜ்வாதி கட்சியின் அகிலேஷ் யாதவ் சிறப்பாக பிரசாரம் செய்கிறார். கருத்துக் கணிப்புகளும் அவருக்கு சாதகமாகவே வந்துள்ளது. இங்கு காங்கிரஸ் மூன்றாவது இடத்தில் இருப்பதாகவே தெரியவருகிறது.

பிரியங்கா காந்தி

பிரியங்கா காந்தி

உத்தரப்பிரதேசம் மற்றும் கோவா சட்டமன்றத் தேர்தலுக்கு காங்கிரஸ் கட்சியின் தேசியப் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி பொறுப்பாளராக நியமிக்கப்பட்டிருக்கிறார். இந்த மாநிலங்களில் பிரியங்காவின் பிரசாரம் அனல் பறக்கிறது.உத்திரப்பிரதேசத்தில் தொடர்ந்து பிரியங்காவின் செயல்பாடு பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது. ஆனால் பிரியங்கா காந்தி எந்த தொகுதியில் போட்டியிடுவார் என்று தெரியவில்லை. அல்லது தேர்தல் கருத்துக்கணிப்புகளைப் பார்த்து கடைசிவரை தேர்தலில் போட்டியிடாமலும் போக அதிக வாய்ப்பிருப்பதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதுபோல காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர்கள் பட்டியலும் வெளியாவதில் சிக்கல் இருக்கிறது.

ராகுல் காந்தி

ராகுல் காந்தி

காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய முகமாக கருதப்படுபவர் ராகுல் காந்தி. இந்த ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தலில் சூறாவளி பிரசாரம் செய்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது. அவர் கலந்து கொள்ள பொதுக்கூட்டம் கூட ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால் கொரோனா காரணமாக அனைத்தும் தள்ளிவைக்கப்பட்டது.

ராகுல் எங்கே

ராகுல் எங்கே

ஐந்து மாநில தேர்தல் நெருங்கிவிட்டது. மாநில தலைவர்கள் செய்யும் பிரசாரம் கூட ராகுல் காந்தி செய்யவில்லை என்று காங்கிரஸ் கட்சியே வருத்தத்தில் இருக்கிறது. இந்த நிலையில் ராகுல் காந்தியைக் கேட்டு டெல்லிக்கு ஐந்து மாநிலத்தில் இருந்தும் அழைப்புகள் வந்துகொண்டிருக்கின்றன. ராகுல் காந்தி பிரசாரம் செய்தால் வெற்றி பெறும் இடங்கள் உறுதியாகும் என மாநில காங்கிரஸ் கட்சியினர் நினைக்கிறார்கள்.

வெளிநாட்டில் ராகுல் காந்தி

வெளிநாட்டில் ராகுல் காந்தி

ராகுல் காந்தி கடந்த டிசம்பர் 27ம் தேதி சொந்த அலுவல் காரணமாக ஐந்து நாள் பயணமாக இத்தாலி சென்றார். பயணத்தை முடித்துவிட்டு மீண்டும் இந்தியா வந்து பிரசாரத்தை தொடர்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ராகுல் காந்தி தன்னுடைய பயணத்தை நீட்டித்திருக்கிறார். தேர்தல் நெருங்கும் நேரத்தில் ராகுல் காந்தியின் இத்தாலி பயணம் காங்கிரஸ் கட்சியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

English summary
Five state assembly elections are approaching, including Uttar Pradesh and Punjab. The Congress party is saddened that Rahul Gandhi has not started his campaign.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X