தமிழகத்தில் கலவரத்தை உருவாக்க திட்டம்! காவல்துறை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும் -கொங்கு ஈஸ்வரன்
சென்னை: தமிழகத்தில் திட்டமிட்டு வன்முறை சம்பவங்கள் அரங்கேற்றப்படுவது போல் தோன்றுவதாக கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி பொதுச்செயலாளர் ஈஸ்வரன் தெரிவித்துள்ளார்.
இது போன்ற நிகழ்வுகளை காவல்துறையினர் இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும் என அவர் ஆவேசம் காட்டியுள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;

கடந்த ஒரு வார காலமாக தமிழகத்தினுடைய பல பகுதிகளில் திட்டமிட்ட வன்முறை சம்பவங்கள் அரங்கேற்றப்படுவது போல் தோன்றுகிறது. உள்நோக்கத்தோடு சட்டம் ஒழுங்கிற்கு சவால் விடுகின்ற நிகழ்வுகள் நடப்பதை பார்க்கின்றோம். தமிழகத்தில் அமைதியற்ற ஒரு சூழ்நிலை நிலவுவது போல ஒரு மாயையை உண்டாக்குகின்ற முயற்சிகளாக இவை பார்க்கப்படுகிறது. தமிழக காவல் துறை சம்பந்தப்பட்டவர்களை கைது செய்ய தீவிர நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
இரண்டு தரப்பினர்களுக்கு இடையே மோதல்கள் போல பல பகுதிகளிலும் தொடர் வன்முறைகளாக உருவாக்கப்படுவது தடுக்கப்பட வேண்டும். இப்போது நடப்பவை ஆரம்பமாக இருந்தாலும் நடத்துபவர்களுடைய எதிர்கால திட்டம் சந்தேகத்திற்குரியதாக இருக்கின்றது. பல வட மாநிலங்களில் இதைப் போன்ற சிறு சிறு சலசலப்புகள் தான் மாநில தழுவிய கலவரங்களாக மாறி கட்டுப்படுத்தப்பட முடியாத மத கலவரங்கள் உருவாவதற்கு காரணமாக இருந்தன.
அதன் மூலம் அரசியல் லாபங்கள் அந்த மாநிலங்களில் குறிப்பிட்ட சில அரசியல் கட்சிகளுக்கு நடந்ததையும் நாம் அறிவோம். கலவரங்கள் உருவாக்கப்பட்டு சட்டம் ஒழுங்கு சீர்கெட்டால் தாம் சர்வாதிகாரியாக மாறுவதற்கு தயங்க மாட்டேன் என்று முதலமைச்சர் குறிப்பிட்டு பேசியதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். அப்படிப்பட்ட ஒரு சூழலை உருவாக்க நினைக்கின்ற சில கட்சிகளுடைய முயற்சிகள் உடனடியாக இரும்புக்கரம் கொண்டு தடுக்கப்பட வேண்டும்.
-
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
தமிழ்நாட்டில் பெண்கள், ஆண்களில் மதுப்பழக்கம் உள்ளவர்கள் எத்தனை சதவீதம்? மத்திய அரசு வெளியிட்ட டேட்டா -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
கோட் சூட்டிற்கு பதிலாக பட்டு வேஷ்டி சட்டை.. திடீரென டிரஸ் கோடு மாற்றிய முதல்வர் விஜய்! ஏன் தெரியுமா? -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
அமைச்சர்களுக்காக கடவுள் காத்திருக்க வேண்டியதில்லை.. நிர்மல்குமார் வழக்கில் ஹைகோர்ட் அதிரடி! -
"22 வயதில் ஐபிஎஸ் - பஞ்சாப்பை சேர்ந்தவர்".. தமிழகத்தின் புதிய டிஜிபி மகேஷ் குமார் அகர்வால் யார்? பின்னணி -
Chennai Metro: சென்னை பூந்தமல்லி- வடபழனி மெட்ரோ ரயில் சேவை எப்போது தொடங்கும்? எங்கெங்கு நிற்கும்? -
வாடகை கிடையாது.. 22 அமைச்சர்களுக்கு பங்களாக்கள் ஒதுக்கீடு.. விஜய் - புஸ்ஸி - ஆதவ்விற்கு இல்லை.. ஏன்? -
4 ஆயிரம் உதவி பேராசிரியர் பணியிடங்கள்! 6 மாதத்திற்குள் தேர்வு நடத்த வேண்டும்.. சென்னை ஐகோர்ட் அதிரடி -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்!












Click it and Unblock the Notifications