Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

’எம்.சி’ ஆன ’வி.சி’ மைக் பிடிப்பதுதான் உங்க வேலையா? சுதா சேஷய்யனுக்கு அட்வைஸ் கொடுக்கும் ஆர்வலர்கள்!

Subscribe to Oneindia Tamil

சென்னை : தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் சுதா சேஷய்யன் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு சென்று மேடை தொகுப்பாளராக மாறி பேசி வருவது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ள நிலையில், மதம் சார்ந்த நிகழ்வுகளில் அவர் கலந்து கொள்வதாகவும் புகார் எழுந்துள்ளது.

சென்னை கிண்டியில் உள்ள டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக இருப்பவர் சுதா சேஷய்யன். இவர் தமிழ், இலக்கியம், ஆன்மீகம், மேடைப்பேச்சு,பட்டிமன்றம் என பல துறைகளில் ஆர்வம் கொண்டவர்.

கடந்த நவம்பர் மாதம் 19-ம் தேதி உத்திர பிரதேச மாநிலம் வாரணாசியில் நடைபெற்ற காசி தமிழ் சங்கமம் தொடக்க விழா நிகழ்ச்சியில் நிகழ்ச்சி தொகுப்பாளராக பங்கேற்ற பல்கலைக்கழக துணைவேந்தர் சுதா சேஷய்யன் முழு நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கினார்.

சுதா சேஷய்யன்

சுதா சேஷய்யன்

நிகழ்ச்சியை தொகுத்து வழங்க தமிழ் தெரிந்த எத்தனையோ நபர்கள் இருக்கும்போது ஒரு பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர், அதுவும் மிக அதிகமான பணிகள் இருக்கக்கூடிய தமிழ்நாடு மருத்துவ பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரான இவர் ஏன் இவ்வளவு தூரம் வந்து... அடுத்ததாக இவர் பேசுவார், அடுத்ததாக அவர் பேசுவார்... என தொகுத்து வழங்கிக் கொண்டிருக்கிறார் என சர்ச்சையானது.

காசி தமிழ்ச் சங்கமம்

காசி தமிழ்ச் சங்கமம்

அதனைத் தொடர்ந்து இந்த மாதம் 16ம் தேதி காசி தமிழ்ச் சங்கமம் நிறைவு விழாவிலும் அவரே நிகழ்ச்சி தொகுப்பாளராக பங்கேற்று, மீண்டும் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியது மட்டும் இல்லாமல் ஹிந்தியில் பேசும் நபர்களுக்கு ட்ரான்ஸ்லேட்டர் ஆகவும் மேடையில் இருந்து தமிழில் பேசிக் கொண்டிருந்தார். இதற்காக தமிழ்நாட்டில் கைதேர்ந்த ட்ரான்ஸ்லேட்டர்கள் பலர் இருக்கும் போது மீண்டும் இந்த நிகழ்ச்சியில் துணை வேந்தர் கலந்து கொண்டது சர்ச்சையானது.

 மகா பெரியவா ஆராதனை

மகா பெரியவா ஆராதனை

இந்த நிலையில் கடந்த செவ்வாய்கிழமை மாலை அலுவலக நாளில் காஞ்சிபுரம் மாவட்டம் சங்கரமடத்தில் நடைபெற்ற "மகா பெரியவா ஆராதனை" நிகழ்ச்சியில் பங்கேற்ற துணைவேந்தர் சுதா அங்கு சென்று ஒரு மணி நேரம் ஆன்மீக சொற்பொழிவாற்றினார். இதற்கெல்லாம் இவர் முறையாக அனுமதி பெற்று தான் செல்கிறாரா..? என்பது ஒரு கேள்வியாக உள்ளது.

கேள்வி

கேள்வி

இருந்தாலும்... அனுமதி பெற்றே சென்றாலும் கூட இந்த பணிகளை செய்வதற்காகவே பலர் இருக்கும் நிலையில், தமிழ்நாட்டில் மிக மிக முக்கியமான ஒரு பல்கலைக்கழகத்தின் அதுவும் மருத்துவ பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக இருக்கக்கூடிய தனக்கு இருக்கும் கல்வி சார்ந்த பணிகளை எல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு கலைப்பணி ஆற்றிய வருவது ஏன்..? என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்...

துணைவேந்தர்

துணைவேந்தர்

காஞ்சிபுரத்தில் நடைபெற்ற ஆராதனை நிகழ்ச்சியில் அவரைப் பற்றிய அறிமுகத்தின்போது அவர் தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் என்பதற்கு பதிலாக, போரூர் ராமச்சந்திரா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் என ஒருவர் மாற்றி கூற அதற்கு எந்த மறுப்பும் கூறாமல் சுதா ஷேசய்யன் அமைதியாக அமர்ந்திருந்தார்.

 மொழி பெயர்ப்பு

மொழி பெயர்ப்பு

மருத்துவ படிப்பிற்கான புத்தகங்கள் ஆங்கிலத்தில் இருந்து இந்தியில் மொழிபெயர்க்கப்பட்டு குஜராத் உள்ளிட்ட பல மாநிலங்களில் வழங்கப்பட்டு வருகின்றது. அதேபோல தமிழிலும் மொழிபெயர்க்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ள நிலையில் அதுபோன்ற ஆக்கபூர்வமான, மாணவர்களுக்கு பயனுள்ள பணிகளை இன்னும் தீவிரமாக துணைவேந்தர் சுதா சேஷய்யன் கவனித்தால் அது எதிர்கால சந்ததியினருக்கு பயனுள்ளதாக அமையும் என மாணவர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+