நான் ஒன்னும் சேரியில் பிறக்கல! வாயைக் கொடுத்து வாங்கிக் கட்டிக் கொண்ட அர்ணவ்! இந்த பிரச்சினை வேறயா?
சென்னை : சின்னத்திரை சீரியலில் பிரபலமான நடிகர் அர்ணவ் தனது மனைவியுடனான பிரச்சினை குறித்து பேசிய போது, நான் சேரியில் பிறக்கல என கூறியது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது தொடர்பாக கண்டனங்கள் வலுத்து வருகிறது.
சின்னத்திரை சீரியலில் பிரபலமானவர் நடிகர் அர்ணவ், அவரது குடும்பத்தில் அவர் மனைவி திவ்யாவுடன் சமீப காலமாக ஏற்பட்டு இருக்கும் பிரச்சினை காரணமாக செய்திகளிலும் சமூக வலைதளங்களிலும் அவரது பெயர் அடிக்கடி அடிபடுகிறது.
அவரது மனைவியும் சின்னத்திரை நடிகையுமான திவ்யா அர்ணவை காதலித்து திருமணம் செய்து கொண்ட பிறகு தான் மன ரீதியாக பாதிக்கப்பட்டு சிகிச்சையும் பெற்று வந்தேன். தன்னை மதமாற்றி திருமணம் செய்த கொண்டதோடு கர்ப்பிணியான தன்னை கொடுமைப் படுத்தியாதாகவும் கூறியிருந்தார்.

அர்ணவ்
மேலும், அர்ணவ் 45 நாட்கள் என்னுடன் பேசாமல் ஒரே வீட்டில் இருந்தார். இதனாலேயே நான் மன உளைச்சலுக்கு ஆளானேன். நான் கருவை கலைக்க வேண்டும் என்றால் ஏன் அரசு மருத்துவமனைக்கு செல்ல வேண்டும் என கேள்வி எழுப்பியதோடு, அவருடன் வந்த சக நடிகைகள் அரணவ் குறித்தும் அவர் படப்பிடிப்பு தளங்களில் ஒரு நடிகையுடன் செய்த சில்மிஷங்கள் செய்ததாகவும் குற்றம் சாட்டினார்.

மனைவி திவ்யா
இந்நிலையில் மனைவி திவ்யாவுடன் சமீப காலமாக ஏற்பட்டு இருக்கும் பிரச்சினை குறித்து திருவேற்காட்டில் உள்ள அவரது இல்லத்தில் செய்தியாளர்களை அர்ணவ் சந்தித்தார். அப்போது பேசிய அவர்," தனது மனைவிக்கு ஒரு விதமான மனநிலை பாதிப்பு இருக்கிறது. குழந்தை பிறந்த பின் அதற்கான சிகிச்சை மேற்கொள்ள தான் திட்டமிட்டு இருந்தேன் எனக் கூறினார்.

சேரியில் பிறக்கல..
தன் குடும்பத்தில் ஏற்படும் பிரச்சினைக்கு நண்பர் ஈஸ்வர் தான் காரணம். தனது குடும்பத்தில் ஏற்படும் பிரச்சனையை தீர்க்க முயற்சிப்பது போல் தன்னிடம் தொலைபேசியில் பேசும் ஈஸ்வர் கொச்சையான வார்த்தைகளை பயன்படுத்தினார். தான் சேரியில் பிறக்கவில்லை. நண்பர் ஈஷ்வரும் சேரியில் பிறக்கவில்லை என்று தெரிவித்த அவர், ஆனால் ஈஸ்வர் ஏன் கொச்சையான வார்த்தைகளை பேசுகிறார் என்று தனக்கு புரியவில்லை என்றும் விளக்கம் ஒன்றை அளித்துள்ளார் .

கடும் சர்ச்சை
அப்போது சேரியில் உள்ளவர்களை தரம் தாழ்த்துவது போல் பேசுவது ஏன் என்று செய்தியாளர் கேட்டதற்கு ஈஸ்வர் கொச்சையான வார்த்தைகளை பயன்படுத்துவது குறித்து எடுத்துக்காட்டுவதற்காகவே சேரி வாழ் மக்களை உதாரணத்திற்கு கூறியதாக அர்ணவ் விளக்கமளித்தார். எனினும் ஒரு தவறான உதாரணத்திற்கு சேரி வாழ் மக்களை மையப்படுத்தி அர்ணவ் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. திரையில் ஹீரோ போல பவனி வரும் நடிகர் சர்ச்சையான பேச்சு பேசி இருப்பது சேரி வாழ் மக்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications