கொரோனா 3வது அலை : பள்ளி கல்லூரிகளை திறக்கும் சூழல் தற்போதைக்கு இல்லை - முதல்வர் ஸ்டாலின்
தமிழ்நாட்டில் பள்ளிக் கல்லூரிகளை தற்போதைக்கு திறக்கும் சூழல் இல்லை என்று முதல்வர் மு.க ஸ்டாலின் கூறியுள்ளார். பள்ளிகள் திறப்பு குறித்து ஆசிரியர்கள், பெற்றோரிடம் கருத்து கேட்டு முடிவெடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்
கொரோனா 3ஆவது அலையை தவிர்க்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். பள்ளிக் கல்லூரிகளை தற்போதைக்கு திறக்கும் சூழல் இல்லை. பள்ளிகள் திறப்பு குறித்து ஆசிரியர்கள், பெற்றோரிடம் கருத்து கேட்டு முடிவெடுக்கப்படும் என்றார்.
முதல்வராக பதவியேற்ற பிறகு இரண்டாம் முறையாக டெல்லி சென்ற ஸ்டாலின் குடியரசு தலைவர் மாளிகையில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை இன்று சந்தித்து பேசினார். தமிழக சட்டப்பேரவையில் நூற்றாண்டு விழாவில் தலைமை தாங்கி நடத்த அழைப்பு விடுத்தார் முதல்வர் மு.க ஸ்டாலின்.

இந்த சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் ஸ்டாலின், தமிழக சட்டப்பேரவையில் நூற்றாண்டு விழாவில் தலைமை தாங்கி நடத்த குடியரசுத் தலைவரை அழைத்தேன். சட்டமன்றத்தில் கலைஞர் கருணாநிதி சிலையை திறந்து வைக்க குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்திற்கு அழைப்பு விடுத்தேன். கிண்டி பன்னோக்கு சிறப்பு மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டுவதற்கு வருமாறு அழைப்பு விடுத்தேன் என்று கூறினார்.
தமிழக முதல்வராக பொறுப்பேற்றுள்ள எனக்கு குடியரசுத் தலைவர் வாழ்த்து தெரிவித்தார். மதுரையில் கலைஞர் பெயரில் அமைக்கப்படும் நூலகத்துக்கு அடிக்கல் நாட்டவும் குடியரசுத் தலைவர் ஒப்புக்கொண்டுள்ளதாக கூறினார்.

எழுவர் விடுதலை குறித்து குடியரசு தலைவரிடம் எதுவும் பேசவில்லை. 7 பேர் விடுதலை விவகாரத்தில் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். மேகதாதுவில் அணை கட்ட கர்நாடகத்துக்கு அனுமதி தர மாட்டோம் என்று மத்திய அரசு உறுதி அளித்துள்ளது.
கொரோனா 3ஆவது அலையை தவிர்க்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக கூறிய முதல்வர் ஸ்டாலின்,பள்ளிக் கல்லூரிகளை தற்போதைக்கு திறக்கும் சூழல் இல்லை என்றார். பள்ளிகள் திறப்பு குறித்து ஆசிரியர்கள், பெற்றோரிடம் கருத்து கேட்டு முடிவெடுக்கப்படும் என்றும் முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
-
இதுக்கு பருத்தி மூட்டை குடோனிலேயே இருந்திருக்கலாம்! ஸ்டாலின் தந்த ரியாக்சன்! அப்செட்டான திமுக தலைகள் -
விஜய்யை கணிக்கல.. முதுகில் குத்திருக்காங்க.. திமுக தோல்விக்கு காரணம்.. ஸ்டாலின் மேஜையில் ரிப்போர்ட் -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
இந்தியா கூட்டணியில் இருந்து திமுக விலகுவதாக மு.க ஸ்டாலின் என்னிடம் கூறவில்லை - காங்கிரஸ் ப.சிதம்பரம் -
டெல்லி தமிழ்நாடு இல்ல கேண்டீனில் தீ விபத்து.. முதல்வர் விஜய் புறப்பட்ட சிறிது நேரத்தில் பரபரப்பு -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications