மக்களே உஷார் அச்சுறுத்தும் கொரோனா.. 2.7 ஆயிரம் பேருக்கு தொற்று உறுதி.. தமிழகத்தில் 38 பேர் பாதிப்பு
சென்னை: நாட்டில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வரும் நிலையில், நாடு முழுவதும் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,710 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் 38 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்கள் முகக்கவசம் அணிய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
2019 ஆம் ஆண்டு முதல் கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளுக்கு கொரோனா தொற்று பாதிப்பால் லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர். அந்த பாதிப்பில் இருந்து பல நிறுவனங்கள் இதுவரை மீண்டு வரவில்லை. இந்நிலையில், நாடு முழுவதும் கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வருவது பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்ந்து பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரிப்பதால் மாவட்ட சுகாதார அதிகாரிகள், தினந்தோறும் பாதிக்கப்படுவோர் குறித்த தகவல்களை சேகரித்து, ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. மருத்துவமனைகளில் அத்தியாவசிய மருந்துகள் இருப்பு இருப்பதை உறுதி செய்ய வேண்டும். படுக்கை வசதிகள், காய்ச்சல் வார்டுகளை ஏற்படுத்த வேண்டும் என சுகாதாரத் துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் கொரோனாவால் பாதித்தோர் எண்ணிக்கை தற்போது 2,710 ஆக உயர்ந்துள்ளது. நாட்டில் கேரள மாநிலத்தில் கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 1,147 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மஹாராஷ்டிர மாநிலத்தில் 424 பேருக்கும், டில்லியில் 294 பேருக்கும், குஜராத்தில் 223 பேருக்கும் தொற்று நோய் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதேபோல, தமிழகம் மற்றும் கர்நாடக மாநிலத்தில் தலா 148 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். பொது இடங்களுக்குச் செல்லும்போது முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என்று மத்திய சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் 38 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா. சுப்பிரமணியன் கூறுகையில், கொரோனா வைரஸ் உருமாற்றமடைந்து பரவி வருகிறது. வதந்திதான் பெரிய நோய். கொரோனா குறித்து யார் வேண்டுமானாலும் தகவல் பரப்பலாம். பதற்றத்தை ஏற்படுத்தாமல் மக்களிடம் முன்னெச்சரிக்கையை ஏற்படுத்துவதே அவசியம்.
தமிழகத்தில் தற்போது 38 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒமைக்ரான் வகையிலான தொற்று பரவி வருகிறது. இதனால், யாரும் பதற்றமடையத் தேவையில்லை. பெரிய பாதிப்பு எதுவும் இதுவரை ஏற்படவில்லை. நுரையீரல், இதயம் போன்ற பாதிப்புக்குள்ளானவர்கள் முகக்கவசம் அணிவது நல்லது. தொற்று பாதிக்கப்பட்டவர்களின் 17 மாதிரிகள் புனே ஆய்வு மையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
கை கழுவுதல், முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளியைக் கடைப்பிடிப்பது நல்லது. பொதுமக்கள் அதிக அளவில் கூடும் பகுதிகளுக்குச் செல்லும்போது சமூக இடைவெளியைக் கடைப்பிடிப்பது நல்லது. ஆனால் இதில் எதுவுமே கட்டாயமில்லை. கடைப்பிடித்தால் நல்லதுதான். கொரோனா பரவலை சமாளிக்க தமிழகத்தில் போதுமான மருத்துவக் கட்டமைப்பு உள்ளது.
தனி வார்டுகளும் தயாராக உள்ளன. கொரோனா பரவலைக் கண்டு பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம். இந்தியாவில், ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. உலகம் முழுவதும் எடுத்துக் கொண்டாலும் பெரிய அளவிலான பாதிப்புகள் இல்லை. சென்னையில் கொரோனா பாதிக்கப்பட் ஒருவர் இறந்ததாக கூறப்பட்டது. ஆனால் அவர் கொரோனாவால் இறக்கவில்லை. ஏற்கனவே உடலில் இருந்த பிரச்சனைகளால் இறந்திருக்கிறார்.
உடல்நலம் பாதிக்கப்பட்டவருக்கு சிகிச்சை அளிக்கப்படும்போது, கொரோனா பரிசோதனையும் செய்யப்பட்டுள்ளது. அதில்தான் அவருக்கு தொற்று பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது. அதுமட்டுமல்லாமல் சம்பந்தப்பட்டவருக்கு நீண்டநாட்களாக கட்டுப்பாட்டில் இல்லாத நீரிழிவு பிரச்சனை இருந்துள்ளது என்று கூறினார்.
-
இப்போ முடியாது.. தேர்தல் முடிந்ததும் செட்டில் பண்றேன்.. கறாராக பேசிய லீமா ரோஸ்.. விக்கித்த எடப்பாடி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
அஜிதா ஆடிய மைண்ட் கேம்.. தவெக-வை தவிக்கவிட்டு திமுக பக்கம் தாவ இதுதான் காரணமா? தூத்துக்குடி மாஸ் -
பேசி முடித்ததுமே சரிந்த பாமக நிறுவனர் ராமதாஸ்.. கேள்விப்பட்டதும் உடனே போன் போட்ட முதல்வர் ஸ்டாலின்! -
”5 கேப்டன் இருந்தும் என் பக்கத்துல இருக்கான் மச்சா” மும்பை அணியை செய்யும் சிஎஸ்கே! தெறிக்கும் மீம்ஸ் -
LIK vs TN 2026 box office: மூன்று நாள் முடிவில் பிரதீப் ரங்கநாதன் Vs நட்டி யாருக்கு வெற்றி? வசூல் நிலவரம் -
யாருங்க இந்த ஐடியாலாம் தருவது? தவெக விஜய் கொடுத்த வாக்குறுதியில்.. இருக்கும் பெரிய ஓட்டை! -
'ஜனநாயகன்' பட லீக்கில் என்ன நடந்தது.. தமிழக காவல்துறை முழு விளக்கம் -
சாத்தூரில் நயினார் வாங்கிய காத்து.. பாஜக தேசிய தலைவரையே கூட்டி வந்தும் கூட்டம் இல்லை -
ஆட்டம் ஆரம்பம்.. முதல் அடி தங்கம், வெள்ளி விலை.. இந்தியாவில் விடியும் முன்பே ஷாக்!












Click it and Unblock the Notifications