தமிழகத்தில் 17 மாவட்டங்களில் உயரும் கொரோனா - 10 மாவட்டங்களில் உயிரிழப்பு இல்லை
தமிழகத்தில் 10 மாவட்டங்களில் கொரோனா உயிரிழப்புகள் எதுவும் நேற்று பதிவாகவில்லை. வழக்கத்தை விட 17 மாவட்டங்களில் கொரோனா தொற்று பாதிப்பு கடந்த 24 மணி நேரத்தில் அதிகரித்து உள்ளது.
சென்னை: தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு 100க்கும் குறைவான புதிய தொற்று பதிவான மாவட்டங்களின் எண்ணிக்கை செவ்வாய்க்கிழமை 25 ஆக இருந்தது. புதன்கிழமையன்று இந்த எண்ணிக்கை 23 ஆக குறைந்துள்ளது. தமிழகத்தில் 10 மாவட்டங்களில் கொரோனா உயிரிழப்புகள் எதுவும் நேற்று பதிவாகவில்லை.
தமிழ்நாட்டில் நேற்று ஒரே நாளில் புதிதாக 4506 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதில் வழக்கம் போல அதிகபட்சமாக கோவை மாவட்டத்தில் 514 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. ஒட்டுமொத்த பாதிப்பு ஒவ்வொரு நாளும் குறைந்து வந்தாலும், 17 மாவட்டங்களில் நேற்றைய தொற்று பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

திருச்சி, திருவண்ணாமலை, விருதுநகர், தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் தொற்று எண்ணிக்கை கணிசமாகவே உயர்ந்துள்ளது.
கள்ளக்குறிச்சி, கரூர்,நாகப்பட்டினம், நாமக்கல், நீலகிரி, புதுக்கோட்டை, சிவகங்கை, தென்காசி, திருநெல்வேலி, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் கொரோனா தொற்றால் புதன்கிழமையன்று யாரும் உயிரிழக்கவில்லை.
திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று முதல்நாள் 125 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. அதே தொற்று நேற்று 199 பேருக்கு புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.
இதே போன்று திருச்சியில் நேற்று முதல்நாள் 170 பேருக்கு தொற்று உறுதியான நிலையில், நேற்று 205 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. விருதுநகரில் நேற்று முதல்நாள் 48 பேருக்கு மட்டுமே தொற்று உறுதியானது. நேற்று அந்த எண்ணிக்கை 71 ஆக உயர்ந்துள்ளது.
தூத்துக்குடியின் கொரோனா பாதிப்பு 59 லிருந்து 75 ஆக உயர்ந்துள்ளது. திருவள்ளூர் ,திருப்பத்தூர், சிவகங்கை, பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களில் பத்துக்கும் குறைவாகவே கூடுதல் புதிய தோற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 100க்கும் குறைவான புதிய தொற்று பதிவான மாவட்டங்களின் எண்ணிக்கை நேற்று 25 ஆக இருந்தது. புதன்கிழமையன்று இந்த எண்ணிக்கை 23 ஆக குறைந்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா தொற்றால் நேற்று ஒரே நாளில் 113 பேர் உயிரிழந்துள்ளதாக தமிழக சுகாதாரத்துறை அறிவிப்பு வெளியிட்டது. அதே நேரத்தில் தமிழகத்தில் 10 மாவட்டங்களில் கொரோனா உயிரிழப்புகள் எதுவும் நேற்று பதிவாகவில்லை.












Click it and Unblock the Notifications