கொரோனா மூன்றாம் அலை : குழந்தைகளின் உடல் நலத்தை பாதுகாக்க என்னென்ன செய்ய வேண்டும்
கொரோனாவின் மூன்றாவது அலையில் குழந்தைகள் அதிகம் பாதிக்கப்படுவார்கள் என்கின்றன கணிப்புகள். கொரோனா மூன்றாவது அலையில் இருந்து குழந்தைகளை பாதுகாப்பது எப்படி என்று பார்க்கலாம்.
சென்னை: கொரோனாவிலிருந்து குழந்தைகளைப் பாதுகாப்பது எப்படி, மூன்றாவது அலையில் குழந்தைகள் இலக்காக வாய்ப்பிருக்கிறதா, பெற்றோர் செய்ய வேண்டியவை என்னென்ன என்ன மாதிரியான உணவுகளைத் தர வேண்டும் என்று குழந்தைகள் நல மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
Recommended Video
காய்ச்சல் அல்லது தலைவலி. உடல்வலி, தொண்டை வலி, வறட்டு இருமல், கால் வலி, கண் வலி. இவைகளெல்லாம் அறிகுறிகள். அனைத்து வீடுகளிலும் கட்டாயமாக காய்ச்சல் சரிபார்க்கும் தெர்மா மீட்டர், பல்ஸ்ஆக்ஸி மீட்டர் மற்றும் டிய்யூ பேப்பர் வைத்திருக்க வேண்டும்.

மேற்கண்ட அறிகுறிகள் எதேனும் குழந்தைகளுக்கு தென்பட்டால் உடனடியாக கொரோனா பரிசோதனை செய்யவும் செய்தபிறகு பாசிட்டிவ் என்று வந்தால் பெற்றோர்கள் உடனடியாக அரசு குழந்தைகள் நல மருத்துவரை அணுகவும்.
குழந்தைகளுக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்.
குழந்தைகளை வெளியில் விடாமல் வீட்டில் இருக்க வைக்கவும். வீட்டிற்கு விருந்தாளிகள் வருவதையும் நண்பர்கள் வருவதையும் தவிர்க்கவும். குழந்தைகளை கூட்டமான இடங்களுக்கும் மற்றும் விசேஷங்களுக்கும் அழைத்துச் செல்ல வேண்டாம்.
ஒரு நாளைக்கு இரண்டு தடவை குளிக்க வைக்க வேண்டும். கைகளை அடிக்கடி சோப்பு கொண்டு கழுவ வைக்க வேண்டும். குழந்தைகள் தங்களுடைய மூக்கு, வாய், கண் ஆகியவற்றை கைகளை சுத்தம் செய்யாமல் தொட விட வேண்டாம்.
பெரியவர்களை கைகளை கழுவாமல் குழந்தைகளை தொட அனுமதிக்க வேண்டாம். குழந்தைகள் உபயோகிக்கும் கைபேசி மற்றும் விளையாட்டுப் பொருட்கள் ஆகியவற்றை சுத்தம் செய்ய வேண்டும். ஒரு நாளைக்கு அரை மணி நேரமாவது குழந்தைகளை சூரிய ஒளியில் விளையாட வைக்க வேண்டும்.
தினமும் வீடு மற்றும் கழிவறையை சுத்தமாக வைத்திருக்க வேண்டும். தினமும் பாய் மற்றும் தலையணைகளை சுத்தம் செய்து தலையணை உறைகளை மாற்ற வேண்டும். மிதமான சுடு தண்ணீரில் வாய் கொப்பளிக்க வைக்க வேண்டும்.
தனிமனித இடைவெளி, முக கவசம் மற்றும் கை கழுவும் முறைகளை கற்றுக்கொடுங்கள். கைகுலுக்குவது, முத்தமிடுவது மற்றும் மற்ற எந்த வித முறையிலும் குழந்தைகளைத் தொடுவதை தவிர்க்க வேண்டும்.
குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுகளைத் சாப்பிட தர வேண்டும். ஒரு நாளைக்கு இரண்டு முட்டை. அவித்த அல்லது ஊறவைத்த பருப்பு வகைகள், தினமும் ஒரு டம்ளர் பால் கொடுக்க வேண்டும். பழங்கள் காய்கறிகள் கீரை வகைகள் சாப்பிடத்தரவேண்டும். இவை குழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். முடிந்தவரை வீட்டில் சமைத்த உணவுகளை மட்டுமே குழந்தைகளுக்கு கொடுங்கள்.
வெளி உணவுகளை தவிர்த்துவிடுங்கள் என்பது மருத்துவர்களின் அறிவுரையாகும்.
-
நாடு கடத்தப்படும் கரப்பான் பூச்சி கட்சி தலைவர்? ஏர்போர்ட்டில் வைத்தே கைது செய்யவும் திட்டம்? -
காங். துரோகம்.. மனக்காயத்தில் தொண்டர்கள்! இந்திய கூட்டணி கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! - திமுக -
இந்தியா கையில் 5ம் தலைமுறை Su-57 போர் விமானம்.. ரஷ்ய அதிபர் புதினின் பெரிய ஆஃபர்.. மோடி ஏற்பாரா? -
இனி இந்தியாவை தொட முடியாது.. ரஷ்யா அனுப்பிய புதிய எஸ் 400 வான்வெளி பாதுகாப்பு சிஸ்டம்.. செம -
2047ல் இந்தியா வல்லரசு.. வாய்ப்பில்லை ராஜா! இன்னும் 34 வருஷமாகும்.. உண்மையை உடைத்த ஆய்வறிக்கை! -
இந்தியா கூட்டணியில் இனி திமுக இல்லை? காங்கிரஸின் செயலால் பாஜகவிற்கு மிகப்பெரிய ஜாக்பாட் -
தமிழகத்திற்கு வரும் 100 நாள் வேலை திட்ட நிதியில் 60% கட்.. 'VB-G RAM G' திட்டத்தில் மெகா அதிர்ச்சி -
2029க்கு டார்கெட் செய்யும் விஜய்.. எப்படியாவது உள்ளே நுழைய வேண்டும்.. திமுக கொடுத்த கேப்.. ராகுல் முடிவு என்ன? -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது!












Click it and Unblock the Notifications