இதுவரை இல்லாத உச்சம்.. தமிழகத்தில் இன்று 2396 பேருக்கு கொரோனா.. மொத்த பாதிப்பு 56845 ஆக உயர்வு!
சென்னை: தமிழகத்தில் இன்று புதிதாக 2396 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் மொத்தமாக கொரோனா பாதிப்பு 56845 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தீவிரம் அடைந்து வருகிறது. நாளுக்கு நாள் தினமும் 2000+ கேஸ்கள் தமிழகத்தில் வர தொடங்கி உள்ளது. இதுவரை இல்லாத அளவிற்கு இன்றுதான் தமிழகத்தில் அதிகமாக கேஸ்கள் வந்துள்ளது.
தமிழகத்தில் கொரோனாவை கட்டுப்படுத்தும் வகையில் சென்னையில் லாக்டவுன் போடப்பட்டுள்ளது. இந்த நிலையில் சென்னையில் தொடர்ந்து கேஸ்கள் அதிகரித்து வருகிறது.

இன்று கேஸ்கள்
தமிழகத்தில் இன்று புதிதாக 2396 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் மொத்தமாக கொரோனா பாதிப்பு 56845 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் 1254 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் ஆக்டிவ் கேஸ்களின் எண்ணிக்கை 24822 ஆக உள்ளது.

சென்னை நிலை
சென்னையில் மொத்த கேஸ்களின் எண்ணிக்கை 39641 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று 1045 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு இருக்கிறார்கள் தமிழகத்தில் மொத்தமாக 31316 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர் சென்னையில் மொத்தம் 17285 ஆக்டிவ் நோயாளிகள் உள்ளனர்.

எத்தனை பலி எண்ணிக்கை
தமிழகத்தில் இன்று 38 பேர் பலியாகி உள்ளனர். தமிழகத்தில் மொத்த பலி எண்ணிக்கை 704 ஆக உள்ளது. தமிழகத்தில் இறப்பு சதவிகிதம் 1.2% ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் மொத்தமாக 559 பேர் பலியாகி உள்ளனர். தமிழகத்தில் இறப்பு சதவிகிதம் அதிகரித்து வருகிறது. இறப்பு சதவிகிதம் குறைவாக இருந்த நிலையில், தற்போது தினமும் அது அதிகரிக்க தொடங்கி உள்ளது

எத்தனை சோதனை
தமிழகத்தில் இன்று 33231 மாதிரிகள் கொரோனா சோதனை செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் மொத்தமாக 861211 மாதிரிகள் கொரோனா சோதனை செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்றுதான் அதிகமாக கொரோனா மாதிரிகள் சோதனை செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்று 32186 பேருக்கு கொரோனா சோதனை செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் மொத்தமாக 821594 பேருக்கு இதுவரை கொரோனா சோதனை செய்யப்பட்டுள்ளது
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications