5 லட்சத்தை நெருங்கும் மொத்த பாதிப்பு.. இன்று தமிழகத்தில் 5495 பேருக்கு கொரோனா.. கோவையில் உச்சம்!
சென்னை: தமிழகத்தில் இன்று 5495 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் மொத்த பாதிப்பு 497066 ஆக உயர்ந்துள்ளது.
இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தினமும் 90 ஆயிரதத்திற்கும் அதிகமான கேஸ்கள் இந்தியாவில் பதிவாகி வருகிறது. விரைவில் தினசரி கேஸ்களில் எண்ணிக்கை 1 லட்சத்தை தொடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் தமிழகத்தில் மட்டும் தினசரி கேஸ்கள் சராசரியாக 5500-5900க்குள் உள்ளேயே இருந்து வருகிறது. பெரிய அளவில் கேஸ்கள் அதிகரிக்காமல் ஒரே அளவில் உயர்ந்து வருகிறது.

தமிழகம் எப்படி
தமிழகத்தில் இன்று 5495 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் மொத்த பாதிப்பு 497066 ஆக உயர்ந்துள்ளது. மொத்த பாதிப்பு 5 லட்சத்தை நெருங்குகிறது. நாளை தமிழகம் 5 லட்சம் கொரோனா கேஸ்கள் என்ற எண்ணிக்கையை அடைய வாய்ப்புள்ளது. தமிழகத்தில் 47110 பேர் சிகிச்சை பெறும் கொரோனா நோயாளிகளாக உள்ளனர்.

டிஸ்சார்ஜ் எப்படி
தமிழகத்தில் 6277 பேர் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தில் 441649 பேர் இதுவரை டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தில் மொத்தமாக 8307 பேர் கொரோனா காரணமாக பலியாகி உள்ளனர். தமிழகத்தில் இன்று 76 பேர் இன்று கொரோனா காரணமாக பலி உள்ளனர்.

சென்னை எப்படி
சென்னையில் இன்று 978 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. சென்னையில் தினசரி 900+ கேஸ்கள் சராசரியாக வருகிறது. சென்னையில் இன்று 1215 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். சென்னையில் மொத்த கேஸ்களின் எண்ணிக்கை 147591 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் 10645 பேர் சிகிச்சை பெறும் நோயாளிகளாக உள்ளனர்.

டெஸ்ட் எண்ணிக்கை
தமிழகத்தில் கொரோனா சோதனை செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 60 லட்சத்தை நெருங்குகிறது. 5803778 மாதிரிகள் இதுவரை தமிழகத்தில் சோதனை செய்யப்பட்டுள்ளது. இன்று 88562 மாதிரிகள் தமிழகத்தில் சோதனை செய்யப்பட்டுள்ளது. சோதனைகளை தமிழகம் துரிதப்படுத்தி உள்ளது. தமிழகத்தில் இன்று 86486 பேருக்கு கொரோனா சோதனைகள் செய்யப்பட்டுள்ளது. 5619012 பேர் தமிழகத்தில் கொரோனா சோதனை செய்யப்பட்டு உள்ளனர்.

கோவை எப்படி
இன்று செங்கல்பட்டில் 267 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மொத்தமாக 30065 பேருக்கு அங்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. இன்று சேலத்தில் 289 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மொத்தமாக 14180 பேருக்கு அங்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. இன்று கோவையில் 428 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மொத்தமாக 21665 பேருக்கு அங்கு கொரோனா ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications