சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கொரோனா தடுப்பு.. பள்ளிகள் அனைத்தையும் அரசிடம் ஒப்படையுங்கள்.. சென்னை மாநகராட்சி அதிரடி உத்தரவு!

கொரோனா பாதிப்பு காரணமாக சென்னையில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளை அரசிடம் ஒப்படைக்க சென்னை மாநகராட்சி உத்தரவு பிறப்பித்துள்ளது.

Google Oneindia Tamil News

சென்னை: கொரோனா பாதிப்பு காரணமாக சென்னையில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளை அரசிடம் ஒப்படைக்க சென்னை மாநகராட்சி உத்தரவு பிறப்பித்துள்ளது.

Recommended Video

    உலகத்தை உலுக்கிய கொள்ளை நோய்கள்... இனியாவது மாறுவோமா?

    தமிழகத்தில் இன்று மேலும் 161 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் மொத்தமாக தமிழகத்தில் 2323 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது.

    சென்னையிலும் இன்றுதான் இதுவரை ஏற்பட்டதிலேயே அதிகமான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சென்னையில் 138 பேருக்கு இன்று கொரோனா ஏற்பட்டுள்ளது. சென்னையில் மொத்தம் 906 பேருக்கு ஏற்பட்டுள்ளது.

    கடந்த 3 நாட்கள்தான் மோசம்.. உயரும் கொரோனா கிராப்.. சென்னை மட்டுமல்ல.. மற்ற மாவட்டங்களிலும் தீவிரம்! கடந்த 3 நாட்கள்தான் மோசம்.. உயரும் கொரோனா கிராப்.. சென்னை மட்டுமல்ல.. மற்ற மாவட்டங்களிலும் தீவிரம்!

    அதிரடி உத்தரவு

    அதிரடி உத்தரவு

    இந்த நிலையில் கொரோனா பாதிப்பு காரணமாக சென்னையில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளை அரசிடம் ஒப்படைக்க சென்னை மாநகராட்சி உத்தரவு பிறப்பித்துள்ளது. பேரிடர் மேலாண்மை சட்ட பிரிவை தமிழக அரசு இதன் மூலம் அமல்படுத்தி உள்ளது. இந்த சட்டம் மூலம் பள்ளிகள், தனியார் நிறுவனங்களை அரசு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரலாம். இந்த இடங்களில் மக்களை தங்க வைக்க அனுமதிக்கலாம்.

    அவசர தேவை

    அவசர தேவை

    அவசர காலத்தில் இந்த இடங்களை அரசு பயன்படுத்த இந்த சட்டம் வழி வகுக்கிறது. தற்போது அதே சட்டத்தை தமிழக அரசு கையில் எடுத்து, சென்னையில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளை அரசிடம் ஒப்படைக்க உத்தரவிட்டுள்ளது. கொரோனா தடுப்பு பணிக்காக இந்த பள்ளிகள், அதன் வளாகங்கள் தேவைபடுகிறது என்று சென்னை மாநகராட்சி அதிரடி உத்தரவு பிறப்பித்ததுள்ளது.

    என்ன காலக்கெடு

    என்ன காலக்கெடு

    மே 2ம் தேதிக்குள் அரசு, தனியார் பள்ளிகளை அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. இதனால் இந்த பள்ளிகள் மற்றும் அதன் அறைகள் கொரோனா தடுப்பு மையங்களாக மாற்றப்படும் என்று தகவல் வருகிறது. சென்னையில் கொரோனா கேஸ்கள் அதிகரித்து வருகிறது. இதனால் அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக தெரிகிறது. சென்னையில் மேலும் கேஸ்கள் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

    தடுக்கும் வகையில் அறிவிப்பு

    தடுக்கும் வகையில் அறிவிப்பு

    இதற்கு தயாராகும் வகையில் அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது என்று கூறுகிறார்கள். இதனால் சென்னையில் வரும் மே 3ம் தேதி பெரும்பாலும் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட வாய்ப்பு இல்லை. தொடர்ந்து லாக் டவுன் நீடிக்கும் என்கிறார்கள். இன்னொரு பக்கம் சென்னையில் கொரோனா பரவலை அடுத்த 10 நாட்களுக்குள் தடுத்திட வேண்டும் என்று மண்டல வாரியாக அமைக்கப்பட்ட அதிகாரிகளுக்கு மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் உத்தரவிட்டுள்ளார்.

    English summary
    Coronavirus: Hand over all Government and private schools institutions to it by May 2 orders Greater Chennai Corporation.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X