குணம் அடைந்த காஞ்சிபுரம் என்ஜினியருக்கு மீண்டும் கொரோனா? மருத்துவமனையில் அனுமதி?

Subscribe to Oneindia Tamil

சென்னை: கொரோனா உறுதி செய்யப்பட்டு குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆன காஞ்சிபுரம் என்ஜினீயர் சென்னை அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதா தகவல்கள் வெளியாகி உள்ளது.

Recommended Video

    கொரோனாவால் பாதிக்கப்பட்ட மகாராஷ்டிரா.. தமிழகத்தின் நிலை என்ன?

    இந்தியாவில் கொரோனா வைரஸ் இதுவரை 149 பேருக்கு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. டெல்லி, மும்பை, கர்நாடகா மாநிலம் கலபுராக்கி உள்ளிட்ட மூன்று இடங்களில் தலா ஒருவர் என இதுவரை மூன்று பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். மூன்று பேரும் 60வயதை கடந்தவர்கள் ஆவர்.

    coronavirus: kanchipuram engineer again admitted to chennai rajiv gandhi govt hospital

    இந்தியாவிலேயே மகாராஷ்டிராவில் தான் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. அங்கு 40க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.அதற்கு அடுத்தபடியாக கேரளாவில் 26 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. ஹரியானாவில் 15 பேருக்கும் உத்தரப்பிரதேசத்தில் 15 பேருக்கும், கர்நாடகாவில் 11 பேருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

    இந்நிலையில் தமிழகத்தில் காஞ்சிபுரத்தைச் சேர்ந்த ஒருவருக்கு மட்டும் கொரோனா பாதிப்பு இருப்பது பரிசோதனையில் தெரியவந்தது. அவருக்கு சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டது. இதையடுத்து அவர் சில நாட்களில் குணம் அடைந்து வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

    இந்நிலையில் தமிழகத்தின் முதல் நபராக கொரோனாவால் பாதிக்கப்பட்டு சில நாட்களிலேயே சிகிச்சையில் குணமடைந்து வீட்டுக்கு அனுப்பப்பட்ட அவர் காஞ்சிபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் அவரை அழைத்து வந்து மீண்டும் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. எனினும் தமிழக அரசு சார்பிலோ, சுகாதார அமைச்சகம் சார்பிலோ இது வரை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+