சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

நாடு முழுவதும்.. மேலும் 2 வாரங்களுக்கு லாக்டவுன் நீட்டிப்பு.. மத்திய அரசு அதிரடி அறிவிப்பு

மேலும் 2 வாரங்களுக்கு லாக்டவுன் நீட்டிக்கப்பட்டுள்ளது

Google Oneindia Tamil News

சென்னை: மே 4 முதல் மே 17ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக மத்திய உள்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது. நிலைமையை முழுமையாக ஆராய்ந்த பிறகு மேலும் 2 வாரங்களுக்கு இந்த ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Recommended Video

    Lockdown extended by two weeks | நாடு முழுவதும் மேலும் 2 வாரங்களுக்கு ஊரடங்கு நீட்டிப்பு

    வைரஸை கட்டுக்குள் கொண்டு வர, தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மத்திய மாநில அரசுகள் தீவிரமான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.. இது சம்பந்தமாக அனைத்து மாநில முதல்வர்களுடனும் பிரதமர் அவ்வப்போது வீடியோ கான்பரஸ்மூலம் ஆலோசனை நடத்தி வருகிறார்.

    இந்த ஆலோசனை கூட்டங்களில் மாநிலங்களில் உள்ள தொற்று பாதிப்பு, எண்ணிக்கை, செயல்பாடுகள், திட்டங்கள், நடவடிக்கைகள் குறித்தும், ஊரடங்கு தொடர்பாகவும் தொடர்ந்து விவாதிக்கப்பட்டு வருகிறது.

    அறிவிப்பு

    அறிவிப்பு

    அப்படி நடந்த ஆலோசனையின்படிதான் மே 3-ம் தேதி வரை நாடு முழுவதும் ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக கடந்த 14-ம் தேதி அறிவிக்கப்பட்டது.. மாநிலங்களின் முதல்வர்களுடன் பிரதமர் 3 தினங்களுக்கு முன்பும்கூட வீடியோ கான்பரஸ் மூலம் மீண்டும் ஆலோசனை நடத்தினார்.

    நடவடிக்கைகள்

    நடவடிக்கைகள்

    அப்போது, வைரஸ் தடுப்புப் பணிகளில், மத்திய, மாநில அரசுகளின் முயற்சிகள் எந்த மாதிரியான பலன்களை அளித்துள்ளன என்பது பற்றியும், இது தொடர்பான அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்தும் முதல்வர்களிடம் பிரதமர் மோடி கருத்துக்களை கேட்டறிந்தார். இதை தவிர, ஊரடங்கை நீட்டிப்பதா, அல்லது படிப்படியாக தளர்த்துவதா என்பது குறித்தும் அன்றைய தினம் ஆலோசித்ததாக கூறப்பட்டது.

    நீட்டிப்பு

    நீட்டிப்பு

    அதனால் ஊரடங்கு நீட்டிப்பு தொடர்பாக விரைவிலேயே அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இன்று 2 வாரங்களுக்கு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. மே 4 முதல் மே 17ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக மத்திய உள்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது. தற்போதுள்ள நிலைமையை முழுமையாக ஆராய்ந்த பிறகு மேலும் 2 வாரங்களுக்கு ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    2 வாரம்

    2 வாரம்

    ஏற்கனவே 2 முறை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது மே 4ந்தேதி முதல் 3வது முறையாக ஊரடங்கு மேலும் 2 வாரம் நீட்டிக்கப்பட்டு உள்ளது. அதேசமயம், நாடு முழுவதும் சிவப்பு மண்டலப் பகுதிகளில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தொடரும் என மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. அதன்படி, அனைத்து மண்டலங்களிலும் ரயில், விமான, மெட்ரோ, பஸ் போக்குவரத்து செயல்படாது. பள்ளி கல்லூரிகள் கல்வி நிறுவனங்கள் இயங்காது. பயிற்சி மையங்கள், பயிற்சி நிலையங்கள் செயல்படாது.

    சில தடைகள்

    சில தடைகள்

    சிவப்பு மண்டலப் பகுதிகளில் உள்ள கண்டெய்ன்மென்ட் ஸோன்களுக்கு வெளியே உள்ள பகுதிகளில் ஏற்கனவே விதிக்கப்பட்ட தடையுடன் மேலும் சில தடைகள் கூடுதலாக விதிக்கப்படுகின்றன. அதன்படி, சைக்கிள் ரிக்ஷாக்கள், ஆட்டோ ரிக்ஷாக்கள் ஓடுவது, டாக்சிகள், கேப் வாகனங்கள் இயக்குவது, மாவட்டங்களுக்கு இடையிலான பஸ் போக்குவரத்து, சலூன் கடைகள், ஸ்பா, மற்றும் பார்பர்ஷாப்கள் செயல்படுவது தடை விதிக்கப்படுகிறது.

    English summary
    coronavirus: lockdown extends for a further 2 weeks beyond may 4
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X