சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

"டெல்லி" போய் திரும்பிய 25 பேர் பூரண சுகம்.. ஹேப்பி டிஸ்சார்ஜ்.. சந்தோஷமாக விடைகொடுத்த ஓமந்தூரார்

டெல்லி சென்று திரும்பிய 25 பேர் பூரண சுகமடைந்து டிஸ்சார்ஜ் ஆயினர்

Google Oneindia Tamil News

சென்னை: கண்களில் நிம்மதி.. முகங்களில் மலர்ச்சியுடன் காணப்படும் இவர்கள் யாருமல்ல.. டெல்லிக்குப் போய் வந்ததால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு கண்காணிப்புக்குப் பிறகு தொற்று இல்லை என்று வீடு திரும்பத் தயாரானவர்கள்தான். இந்த வீடியோ வைரலாகி வருகிறது..

டெல்லிக்கு போய் வந்து ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்த 30 பேரில் 25 பேருக்கு தொற்று கொரோனா இல்லை என்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து சிகிச்சை பெற்று வந்த இவர்கள், சிகிச்சை அளித்த டாக்டர்களுக்கு நன்றி சொல்ல.. டாக்டர்கள் இவர்களுக்கு கைதட்டி வழி அனுப்பி வைக்க.. மொத்த ஆஸ்பத்திரியும் நெகிழ்ந்து வழிந்து நிரம்பியது!!

டெல்லி

டெல்லி

இந்தியாவுக்குள் கொரோனா ஊடுருவினாலும், டெல்லி மாநாட்டுக்கு பிறகுதான் தீவிரம் அடைந்ததாக ஒரு கருத்து பரப்பப்பட்டது. அதன்படி, யாரெல்லாம் டெல்லி போய் வந்தார்களோ அவர்களை கண்டறிந்து சோதனையும், சிகிச்சையும் நடந்து வருகிறது.

சிகிச்சை

சிகிச்சை

அந்த வகையில் டெல்லி போய்வந்த 30 பேர் சென்னை ஓமந்தூரார் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.. இவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் சிகிச்சை பெற்று வந்தனர்.. இவர்களுடன் சேர்த்து மொத்தம் 90 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 15 நாட்கள் இவர்கள் அனைவருமே தீவிர சிகிச்சையில் இருந்தனர்.

டிஸ்சார்ஜ்

டிஸ்சார்ஜ்

15 நாட்கள் தீவிர காண்காணிப்பில் இருந்த இவர்களுக்கு திரும்பவும் கொரோனா டெஸ்ட் எடுக்கப்பட்டது. அந்த ரிசல்ட்டில் யாருக்கும் தொற்று இல்லை என்பது உறுதியானது... இதையடுத்து 30 பேரும் அவர்களின் வீடுகளுக்கு செல்ல மருத்துவக்குழுவினர் பரிந்துரைத்தனர். இதையடுத்து 30 பேரும் இன்று மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.

மகிழ்ச்சி

மகிழ்ச்சி

இதில் 30 பேரில் 25 பேர் டெல்லி மாநாட்டுக்கு சென்றனர்.. மீதமுள்ள 5 பேர் அவர்களின் சொந்தக்காரர்களாம்.. டிஸ்சார்ஜ் ஆனவர்கள் முகங்களில் மகிழ்ச்சி தென்பட்டது.. வார்டை விட்டு வெளியே வரும்போதே முகக்கவசத்துடன் வந்தனர்.. கிளம்பி செல்வதற்கு முன்பு டாக்டர்களுக்கு தங்கள் நன்றியை சொன்னார்கள்.. ஒரு ஹாலில் அனைவரும் உட்கார வைக்கப்பட்டனர்.

கைதட்டி நன்றி

கைதட்டி நன்றி

அங்கிருந்த டாக்டர்கள், நர்ஸ்களுக்கு கண்ணீர் மல்க நன்றியை சொன்னார்கள்.. இவர்கள் அனைவருக்கும் சிகிச்சை தந்த டாக்டர்கள், நர்ஸ்கள் கைகளை ஆரவாரத்துடன் தட்டி வழியனுப்பினர். கிளம்பும்போது 30 பேருக்கும் பழங்கள், பிஸ்கட்களை ஆஸ்பத்திரி நிர்வாகம் தந்து, வாகனமும் ஏற்பாடு செய்து அவரவர் வீடுகளுக்கு அனுப்பி வைத்தது.. மருத்துவமனை பொறுப்பு முதல்வர் நாராயணபாபு இதை பற்றி சொல்லும்போது, "கொரோனா தொற்று பாதித்தவர்களை எங்களது சகோதரர்களை போல பார்த்துக் கொண்டோம்" என்றார்.

சகோதரத்துவமும், சகிப்புத்தன்மையும் இருந்தால் எந்த கொரோனாவையும் வெல்லலாம் என்பதைதான் இந்த சம்பவம் எடுத்துக் காட்டி உள்ளது!!

English summary
coronavirus: thirty corona victims discharged from omandurar gov hospital
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X