இதுவரை இல்லாத அளவிற்கு அதிகம்.. ஒரே நாளில் 203 பேருக்கு கொரோனா.. தமிழகத்தில் 2526 பேர் பாதிப்பு!
சென்னை: தமிழகத்தில் இன்று ஒரே நாளில் புதிதாக 203 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,526 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா தீவிரம் அடைய தொடங்கி உள்ளது. கடந்த 4 நாட்களாக தினமும் தமிழகத்தில் 100+ கேஸ்கள் வந்துள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தொடர்பாக இன்று சுகாதாரத்துறை செயலாளர் விஜயபாஸ்கர் செய்தியாளர் சந்திப்பு நடத்தினார்.
அதில், தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு இன்றுதான் அதிக பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. அதன்படி தமிழகத்தில் ஒரே நாளில் 203 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார்.

சென்னை நிலை
மேலும், தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,526 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் 176 பேருக்கு இன்று கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சென்னையில் மொத்தம் 1082 பேருக்கு இதுவரை கொரோனா ஏற்பட்டுள்ளது. இன்று கொரோனா காரணமாக ஒருவர் பலியாகி உள்ளார். கொரோனாவால் பாதிக்கப்பட்ட சென்னையை சேர்ந்த 98 வயது நபர் உயிரிழந்ததால் இதுவரை பலியானவர்கள் எண்ணிக்கை 28ஆக உயர்ந்தது.

செங்கல்பட்டு நிலை
செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று 8 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று 6 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. கடலூர் மாவட்டத்தில் இன்று ஒருவருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் இன்று ஒருவருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று 2 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது.

கரூர் நிலை
கரூர் மாவட்டத்தில் இன்று ஒருவருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. மதுரை மாவட்டத்தில் இன்று 3 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. நாகை மாவட்டத்தில் இன்று ஒருவருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. தஞ்சை மாவட்டத்தில் இன்று 2 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் இன்று ஒருவருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது.

அரியலூர் நிலை
அரியலூர் மாவட்டத்தில் இன்று ஒருவருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்று 54 பேர் குணமாகி உள்ளனர். மொத்தமாக 1312 பேர் குணமடைந்து உள்ளனர். இந்தியாவிலேயே அதிகமாக தமிழ்நாட்டில் தான் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 54 சதவிதம் பேர் குணமடைந்துள்ளனர். கொரோனா சோதனையில் தமிழகம் இரண்டாம் இடத்தில் உள்ளது. தமிழகத்தில் கொரோனா சோதனைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

மொத்த சோதனை
இன்று மொத்தமாக 9687 பேருக்கு தமிழகத்தில் கொரோனா சோதனைகள் செய்யப்பட்டுள்ளது. மொத்தம் 1.30 லட்சம் பேருக்கு தமிழகத்தில் கொரோனா சோதனைகள் செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இன்று மட்டும் 3600 பேருக்கு கொரோனா சோதனை செய்யப்பட்டுள்ளது. அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா பரிசோதனை அதிகரிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இறப்பு விகிதம் 1.1% ஆக உள்ளது.குணமடைதல்- 52% ஆக உள்ளது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications