சென்னையில் ஸ்டேஜ் 3-ஆ? தினமும் அதிகரிக்கும் "காண்டாக்ட்" இல்லாத கேஸ்கள்.. குழப்பத்தில் அதிகாரிகள்!
சமீப நாட்களாக சென்னையில் கொரோனா பாதிக்கப்படும் நபர்களில் பலருக்கு எப்படி கொரோனா தாக்குதல் ஏற்படுகிறது என்பதே தெரியாத நிலை ஏற்பட்டுள்ளது.
சென்னை: சமீப நாட்களாக சென்னையில் கொரோனா பாதிக்கப்படும் நபர்களில் பலருக்கு எப்படி கொரோனா தாக்குதல் ஏற்படுகிறது என்பதே தெரியாத நிலை ஏற்பட்டுள்ளது.
Recommended Video
கொரோனா வைரஸின் தாக்கம் தமிழகத்தில் இப்போதைக்கு குறைவதற்கான அறிகுறிகள் தெரியவில்லை. தினமும் பலர் தமிழகத்தில் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார்கள்.
தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1821 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் நேற்று மட்டும் கொரோனாவிலிருந்து 94 பேர் குணமடைந்துள்ளனர். தமிழகத்தில் நேற்று மேலும் 66 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

எத்தனை பேர்
நேற்று தமிழகத்தில் கொரோனாவால் 66 பேர் பாதிக்கப்பட்டனர். இதில் மொத்தம் 19 பேருக்கு எப்படி கொரோனா வந்தது என்று தெரியவில்லை. காஞ்சிபுரத்தில் ஒருவருக்கு எப்படி கொரோனா வந்தது என்று தெரியவில்லை. பெரம்பலூரில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்ட இரண்டு பேருக்கும் எப்படி கொரோனா வந்தது என்று தெரியவில்லை. அதேபோல் திருவண்ணாமலை, விழுப்புரம் மற்றும் விருது நகரில் நேற்று தலா ஒருவருக்கு கொரோனா வந்தது.

சென்னை நிலை
இந்த மூன்று பேருக்கும் எப்படி கொரோனா வந்தது என்று தெரியவில்லை. சென்னையில் நேற்று வந்தது மொத்தம் 43 கேஸ்கள். இதில் மொத்தம் 13 கேஸ்களுக்கு எப்படி கொரோனா வந்தது என்று கண்டுபிடிக்க முடியவில்லை. இதில் 10 கேஸ்கள் தொடர்பு மூலம் வந்து இருக்கலாம் என்று கூறுகிறார்கள். 3 பேருக்கு நேரடியாக கொரோனா வந்திருக்க வாய்ப்புள்ளது என்று அஞ்சுகிறார்கள். இதுதான் கடந்த சில வாரமாக சென்னையில் நிலை.

சென்னையின் காண்டாக்ட் லெஸ் கேஸ்கள்
தமிழகத்தில் சென்னையில்தான் இப்படி அதிகமாக காண்டாக்ட் லெஸ் கேஸ்கள் அதிகம் வருகிறது. பொதுவாக ஒருவருக்கு கொரோனா வந்தால் அவருக்கு யார் மூலம் கொரோனா வந்தது என்று கண்டுபிடிக்க வேண்டும். ஏனென்றால் இப்படி யார் மூலம் கொரோனா வந்தது என்று கண்டுபிடித்தால் மட்டும்தான் கொரோனா பாதிக்கப்பட்ட எல்லோரையும் தனிமைப்படுத்த முடியும்.

சமூக பரவலை தடுக்க முடியும்
அப்படி எல்லோரையும் தனிமைப்படுத்தினால் மட்டுமே சமூக பரவலை தடுக்க முடியும்.ஆனால் தற்போது சென்னையில் எப்படி ஒருவருக்கு கொரோனா வருகிறது என்றே தெரியாத நிலை ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் மற்ற இடங்களில் ஒருவருக்கு கொரோனா ஏற்பட்டால் எளிதாக அவரின் காண்டாக்ட் கண்டுபிடிக்கப்படுகிறது. ஆனால் சென்னையில் இது மிகவும் சிரமமாக இருக்கிறது.

சென்னையில் ஸ்டேஜ் 3
இதனால் சென்னையில் ஸ்டேஜ் 3 பரவல் வந்துவிட்டதா என்று கேள்வி எழுந்துள்ளது. கம்யூனிட்டி பரவல் எனப்படும் ஸ்டேஜ் 3 மிகவும் ஆபத்தானது. ஸ்டேஜ் 3 என்பது வெளிநாடு செல்லாத, அல்லது வெளிநாடு சென்ற நபருடன் தொடர்பு கொள்ளாத ஒருவருக்கு கொரோனா ஏற்படுவது. உதாரணமாக 'ஏ' என்ற நபர் வெளிநாடு சென்று தமிழகம் வந்துள்ளார். 'ஏ' என்ற நபருக்கு கொரோனா உள்ளது. அவரின் உறவினர் ஒருவருக்கும் இவர் மூலம் கொரோனா பரவி இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம்.

சிக்கலாகும்
இப்பொது அந்த உறவினர் வெளியே செல்கிறார். அவர் சினிமா தியேட்டர் ஒன்றில் தனக்கு தெரியாத நபர் அருகே அமர்ந்து படம் பார்க்கிறார். இப்போது அந்த அருகில் இருக்கும் நபருக்கும் கொரோனா பரவி உள்ளது என்று வைத்துக் கொள்வோம். இதன் மூலம் 'ஏ' என்ற நபருக்கு கொஞ்சம் கூட தொடர்பு இல்லாத வேறு ஒரு நபருக்கு கொரோனா பரவி உள்ளது. இதுதான் கம்யூனிட்டி பரவல் அல்லது ஸ்டேஜ் 3. ஒருவேளை சென்னையில் இந்த ஸ்டேஜ் 3 பரவல் ஏற்பட்டு இருக்கலாம் என்று கூறுகிறார்கள்.

காரணம் என்ன?
சென்னையில் இப்படி அதிக அளவில் கொரோனா கேஸ்கள் காண்டாக்ட் இல்லாமல் ஏற்பட மக்கள் தொகையும், அதிக ஜன நெருக்கடியும் காரணம். கேரளாவில் எளிதாக காண்டாக்ட் டிரேஸ் செய்ய முடிகிறது என்றால் அங்கு மக்கள் தொகை குறைவு. ஆனால் சென்னையில் அப்படி செய்ய முடியாது. இதனால் சென்னையில் அதிகாரிகள் கடும் குழப்பத்திற்கு உள்ளாகி உள்ளனர். எப்படி திடீர் திடீர் என்று ஒருவருக்கு கொரோனா வருகிறது என்று குழப்பத்திற்கு உள்ளாகி உள்ளனர்.

வேறு வழி முறை
இதனால் நடைமுறை காண்டாக்ட் டிரேசிங்கை விட சென்னையில் கொரோனாவை கட்டுப்படுத்த வேறு ஒரு வழி முறையை சென்னையில் கொண்டு வர வேண்டும் அதாவது காண்டாக்ட் டிரேசிங் பெரிய அளவில் பலன் அளிக்கவில்லை. இதனால் அதற்கு பதிலாக வேறு ஏதாவது வகையில் கொரோனா நோயாளிகள் எப்படி பாதிக்கப்படுகிறார்கள் என்று கண்டுபிடிக்க கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications