சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

தீவிர ஏற்பாடுகள்.. பேருந்துகளை இயக்க தயாராகும் தமிழக அரசு.. எப்போது தொடங்கும்.. கட்டுப்பாடுகள் என்ன?

தமிழகத்தில் எப்போது பேருந்துகள் இயக்கப்படும், என்ன மாதிரியான கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்று தகவல்கள் வெளியாகி வருகிறது.

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் எப்போது பேருந்துகள் இயக்கப்படும், என்ன மாதிரியான கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்று தகவல்கள் வெளியாகி வருகிறது.

Recommended Video

    பேருந்துகளை இயக்க தயாராகும் தமிழக அரசு.. கட்டுப்பாடுகள் என்ன?

    நாடு முழுக்க மே 17ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்தும் விதமாக நாடு முழுக்க ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆனால் இன்னொரு பக்கம் கொஞ்சம் கொஞ்சமாக கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு வருகிறது.

    இன்று மாலையில் இருந்து நாடு முழுக்க குறிப்பிட்ட வழித்தடங்களுக்கான ரயில் சேவை புக்கிங் தொடங்கி உள்ளது. நாளையில் இருந்து ரயில் சேவை தொடங்க உள்ளது.

    நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் அருமருந்து.. நில வேம்பு கசாயம்.. வீட்டில் தயாரிப்பது சுலபம்!நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் அருமருந்து.. நில வேம்பு கசாயம்.. வீட்டில் தயாரிப்பது சுலபம்!

    கட்டுப்பாடு தளர்வு

    கட்டுப்பாடு தளர்வு

    இன்னொரு பக்கம் தமிழகத்தில் இன்று பெரிய அளவில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளது. இன்று கூடுதலாக டீகடை உள்ளிட்ட தனிக்கடைகள் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல் கடைகள் இயங்கும் நேரம் கூடுதலாக்கப்பட்டுள்ளது. மக்களும் வெளியே வர தொடங்கி உள்ளனர். இதனால் தமிழகத்தில் விரைவில் கட்டுப்பாடுகள் தளரும், கொஞ்சம் கொஞ்சமாக இயல்பு நிலை திரும்பும் என்கிறார்கள்.

    பேருந்து எப்போது

    பேருந்து எப்போது

    இந்த நிலையில் தமிழகத்தில் எப்போது பேருந்துகள் இயக்கப்படும், என்ன மாதிரியான கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்று தகவல்கள் வெளியாகி வருகிறது. அதன்படி சென்னையில் வரும் 18ம் தேதி பேருந்துகளை இயக்க அரசு முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வருகிறது. இதற்கான உள் சுற்றறிக்கை பேருந்து நிலையங்களுக்கு சென்றுள்ளது. தமிழகம் முழுக்க சென்னை உட்பட அனைத்து இடங்களிலும் பேருந்துகள் இயக்கப்படும் என்கிறார்கள்.

    என்ன மாதிரியான விதிகள்

    என்ன மாதிரியான விதிகள்

    இதற்கான சில கட்டுப்பாடுகளை விதிக்க முடிவு செய்துள்ளனர். அதன்படி பேருந்தில் பயணம் செய்யும் எல்லோரும் மாஸ்க் அணிய வேண்டும். மாஸ்க் அணிந்தால் மட்டுமே பேருந்தில் ஏற முடியும். அதேபோல் பேருந்தில் 25 பேர் மட்டுமே பயணம் செய்ய முடியும். 20 பேர் அமர்ந்து இருக்க முடியும். 5 பேர் நிற்க முடியும். இரட்டை சீட்களில் ஒருவர் மட்டுமே அமர முடியும்.

    இருக்கை ஒதுக்கீடு

    இருக்கை ஒதுக்கீடு

    மூன்று சீட்களில் இரண்டு பேர் மட்டும் இடைவெளி விட்டு அமர முடியும். இதனால் அரசுக்கு பெரிய அளவில் இழப்பு ஏற்படும் என்கிறார்கள். இதனால் பேருந்து நிறுத்தங்களை அதிகரிக்க முடிவு செய்துள்ளனர். பேருந்து இனி பல இடங்களில் நின்று நின்று செல்லும். குறைந்த பயணிகளால் வரும் இழப்பை ஈடுகட்ட அதிக இடங்களில் நிறுத்த முடிவு செய்துள்ளனர். ஆனால் குறைவான எண்ணிக்கையில் பஸ்கள் இயங்கும்.

    மெட்ரோ எப்படி

    மெட்ரோ எப்படி

    போக போக பஸ் எண்ணிக்கை, மெட்ரோ ரயில் எண்ணிக்கை அதிகரிக்கும் என்கிறார்கள். மெட்ரோ ரயிலில் 150 பேர் மட்டுமே பயணிக்க முடியும். ஆனால் எண்ணிக்கை குறைவாக இருக்கும். மின்சார ரயிலில் 55 பேர் வரை ஒரு பெட்டியில் பயணம் செய்யலாம் என்கிறார்கள். இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் இரண்டு மூன்று தினங்களில் வெளியாகும். விரைவில் சென்னையில் இயல்பு நிலை திரும்பும் என்கிறார்கள்.

    English summary
    Coronavirus: When will the bus start running in Tamilnadu? What are the rules and regulations.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X