சென்னையில்.. பட்டப்பகலில்.. ரவுடி சேகரின் 3வது மனைவி மீது குண்டு வீச்சு.. அரிவாள் வெட்டு.. பரபரப்பு!
Recommended Video
சென்னை: பட்டப்பகலில்.. சென்னையின் ரிச்சி தெரு அருகில்.. ரவுடி சேகரின் 3-வது மனைவியை ஒரு கும்பல் வெடிகுண்டால் வீசியும், அரிவாளால் வெட்டியும் கொல்ல முயற்சித்துள்ளது. இந்த சம்பவம் சென்னையில் மிகுந்த பரபரப்பை தந்து வருகிறது.
பிரதமர் மோடி, சீன அதிபர் ஷி ஜின்பிங் வருகையையொட்டி, சென்னை விமான நிலையம் முதல் மாமல்லபுரம் வரை பாதுகாப்பு நடவடிக்கைகள் பலமாக உள்ளன. அதனால் ஏர்போர்ட் முதல், மாமல்லபுரம் வரை உள்ள சாலைகளில் தீவிர சோதனை, பாதுகாப்பு, ஆய்வு, என பரபரத்து காணப்படுகிறது.
அதாவது திபெத் நாட்டினர் யாராவது வேலை பார்த்து வந்தாலோ, எங்காவது லாட்ஜ்களில் தங்கியிருந்தால்கூட உடனே தங்களுக்கு சொல்ல வேண்டும் என போலீசார் அறிவுறுத்தி இருந்தனர். இந்த அளவுக்கு உச்சக்கட்ட பாதுகாப்பின்பிடியில் சென்னை இருக்கும்போதுதான் வெடிகுண்டு வீசி ரவுடி குடும்பத்தை அரிவாளால் வெட்டிய சம்பவம் நடந்துள்ளது.

இளம் மனைவி
மவுன்ட் ரோடில் ரிச்சி தெருவில்தான் இந்த பயங்கரம் நடந்துள்ளது. ஒரு ரவுடியின் இளம் மனைவியை கொலை செய்வதற்காக ஒரு கும்பல் ஆட்டோவில் வந்துள்ளது. இவர் பெயர் மலர். வக்கீலான இவர் ஒரு அதிமுக பிரமுகரும் கூட. இன்று பிற்பகல் 1 மணி இருக்கும்.

அரிவாள் வெட்டு
மலர் அவரது சொந்தக்காரர் அழகுராஜா என்பவருடன் ரிச்சி தெரு அருகே அதாவது காஸினோ தியேட்டர் எதிரே நடந்து சென்று கொண்டு இருந்தார். அப்போது தான் அந்த கும்பல் ஆட்டோவில் பின் தொடர்ந்து வந்தது. மொத்தம் 6 பேர் ஆட்டோவில் இருந்து இறங்கினர். அந்த பெண்ணின் மீது நாட்டு வெடிகுண்டை அவர்கள் வீசினர். ஆனால் அது குறி தவறி, ரோட்டில் விழுந்து வெடித்தது. இதனால் அங்கிருந்த மக்கள் கூட்டம் அலறி அடித்து சிதறி ஓடினர்.

ஜனநெருக்கடி
ஆனாலும் அந்த கும்பல், ஆத்திரம் அடங்காமல், பின்னாடியே போய் மலரையும், அழகுராஜாவையும் அரிவாளால் வெட்டி கொலை செய்ய முயற்சித்தது. இதில் அழகுராஜா, திருவல்லிக்கேணி போலீஸ் ஸ்டேஷனுக்குள் புகுந்து கொண்டார். மலர் மட்டும் அவர்களிடம் சிக்கி கொண்டார். அந்த கும்பல் மலரை அரிவாளால் வெட்டியது. "என்னை காப்பாத்துங்க" என்று மலர் நடுரோட்டிலேயே கதறினார். பின்னர் கூட்டம் சேருவதற்குள், வந்த ஆட்டோவிலேயே ஏறி தப்பி விட்டது அந்த கும்பல்.

யார் இந்த சேகர்?
எனினும், மலர், அழகுராஜா உட்பட 3 பேர் படுகாயமடைந்துள்ளனர். அவர்கள் இப்போது அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணையில் குதித்துள்ளனர். அரிவாள் வெட்டு விழுந்த பெண் ரவுடி சேகரின் 3-வது மனைவியாம். இது ஒரு முன்விரோதத்தினால் நடந்த தாக்குதல் என தெரியவந்துள்ளது. இப்போதைக்கு மலரின் உயிருக்கு ஆபத்து இல்லை என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

விசாரணை
வெடிக்காத நிலையில் நாட்டு வெடிகுண்டு ஒன்றையும் போலீஸார் கைப்பற்றி, அதுதொடர்பாகவும் விசாரணை நடந்து வருகிறது. சீன அதிபர் வருகையையொட்டி பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ள நிலையில்.. பட்டப்பகலில் அதுவும் ரிச்சி தெருவில் நடந்த இந்த கொலை முயற்சியால் மேலும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
-
சென்னை உட்பட.. 30 மாவட்டங்களுக்கு பறந்த மஞ்சள் அலர்ட்! அடுத்த 2 மணி நேரம் உஷார்! -
சென்னையின் மெகா மேக் ஓவர்.. நகரின் மையத்தில்.. வரப்போகும் 3 மேஜர் திட்டங்கள்.. இன்ஜினியரிங் அதிசயம்! -
Gold Price: மீண்டும் எகிறிய தங்கம் விலை.. ஒரே நாளில் தாறுமாறாக உயர்வு.. நகை பிரியர்கள் கலக்கம் -
மீண்டும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு.. ரூ.2.5 லட்சம் கோடி மெகா திட்டம்! -
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
30 வருடமாக "டிமிக்கி" கொடுத்த பாகிஸ்தான்.. உடனே ரூ.32,459 கோடி கடனை தர வேண்டும்.. UAE விதித்த கெடு -
Jayalalitha: நானும் ஜெயலலிதாவும் சர்ச் பார்க் பள்ளியில்தான் படித்தோம்! மணப்பாறையில் கனிமொழி பேச்சு -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
ரஷ்ய கஜானாவில் அடி.. இந்தியாவுக்கு ஓடி வந்த புடின் அரசு.. LPG பிரச்சனைக்கு வழிபிறந்தது? -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ்












Click it and Unblock the Notifications