தமிழகத்தில் 4-வது நாளாக அதிகரிக்கும் கொரோனா.. இந்த 3 மாவட்டங்களில் பாதிப்பு அதிவேகம்.. என்ன காரணம்?
சென்னை: தமிழ்நாட்டில் இன்று 1,639 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனாவுக்கு மேலும் 27 பேர் உயிரிழந்துள்ளனர்.
தமிழ்நாட்டில் கொரோனா தொற்று குறைந்து வந்த நிலையில் கடந்த 4 நாட்களாக அதிகரித்து வருகிறது. சென்னையில் மூன்றாவது நாளாக கொரோனா தினசரி பாதிப்பு குறைந்து சற்று ஆறுதல் அளிக்கிறது.

கொரோனா அதிகரிப்பு
தமிழ்நாட்டில் கொரோனா தொற்றின் இரண்டவது அலை அதிவேகமாக குறைந்து வந்தது. தமிழ்நாடு அரசு மேற்கொண்ட நடவடிக்கையும், கடுமையான ஊரடங்குமே கொரோனாவை குறைத்தது. இந்த நிலையில் தமிழ்நாட்டில் கடந்த நான்கு நாட்களாக கொரோனா மீண்டும் அதிகரித்துள்ளது. தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 1,639 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இறப்புகள் எண்ணிக்கை
இதனால் மொத்த பாதிப்பு 26,32,231 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவுக்கு மேலும் 27 பேர் உயிரிழந்துள்ளனர். செங்கல்பட்டில் அதிகபட்சமாக கொரோனாவுக்கு 3 பேர் இறந்துள்ளனர். கோவையில் 2 பேரும், காஞ்சிபுரத்தில் 2 பேரும் உயிரிழந்துள்ளனர். மயிலாடுதுறையில் 2 பேர் இறந்துள்ளனர். இதுவரை கொரோனாவுக்கு 35,146 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனாவில் இருந்து மேலும் 1,517 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை மொத்தம் 25,80,686 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர். கொரோனா பாதிப்பை விட குணமடைவோர் விகிதம் குறைவாக இருக்கிறது.

சென்னையில் குறைவு
16,399 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்று மட்டும் 1,58,117 பேருக்கு சோதனை செய்யப்பட்டது. இதுவரை மொத்தம் 4,31,66,828 பேருக்கு சோதனை செய்யப்பட்டுள்ளது. சென்னையில் மேலும் 170 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. சென்னையில் கடந்த 3 நாட்களகா பாதிப்பு சற்று குறைந்து ஆறுதல் அளிக்கிறது. அதே வேளையில் கோவை தொடந்து முதலிடம் பிடித்துள்ளது. ஈரோட்டிலும் கொரோனா உச்சம் தொட்டுள்ளது.

தஞ்சாவூரில் அதிகம்
கோவையில் 218 பேருக்கு பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. செங்கல்பட்டில் 114 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. காஞ்சிபுரத்தில் 30 பேருக்கும், மதுரையில் 20 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கன்னியாகுமரியில் 31 பேருக்கும், திருவள்ளூரில் 58 பேருக்கும், திருச்சியில் 47 பேருக்கும் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. திருப்பூரில் 91 பேருக்கும், விருதுநகரில் 7 பேருக்கும், ஈரோட்டில் 151 பேருக்கும், சேலத்தில் 55 பேருக்கும், நாமக்கல்லில் 52 பேருக்கும், தஞ்சாவூரில் 117 பேருக்கும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

5 மாவட்டங்களில் சதம்
சென்னை, கோவை, செங்கல்பட்டு, ஈரோடு மற்றும் தஞ்சாவூர் ஆகிய 5 மாவட்டங்களில் தினசரி பாதிப்பு 100-ஐ கடந்துள்ளது. குறிப்பாக தஞ்சாவூர், ஈரோடு, கோவையில் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இன்று பல மாவட்டங்களில் உயிரிழப்பு இல்லை என்பது மகிழ்ச்சி தரக்கூடிய செய்தியாக இருக்கிறது. கொரோனா சற்று அதிகரித்துள்ளதால் தமிழக மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டிய நேரம் இது. கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றினால் கொரோனா மேலும் அதிகரிப்பதை தவிர்க்க முடியும்.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications