தமிழகத்தில் அடியோடு சரியும் கொரோனா பாதிப்பு.. இந்த 2 மாவட்டங்களில் மட்டும் தொற்று அதிகம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டில் இன்று 688 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனாவுக்கு மேலும் 11 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழ்நாட்டில் கொரோனா தொற்று தொடர்ந்து குறைந்து வருகிறது.

தினசரி பாதிப்பில் சென்னை முதலிடத்தில் உள்ளது. கோவை இதற்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தில் உள்ளது. இன்று மட்டும் 1,02,771 பேருக்கு சோதனை செய்யப்பட்டது.

குறையும் கொரோனா

குறையும் கொரோனா

தமிழ்நாட்டில் கொரோனா தொற்று தொடர்ந்து குறைந்து வருகிறது. தற்போது கொரோனா 800-க்குள் குறைந்து விட்டது. இந்த நிலையில் தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 688 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது நேற்றை விட குறைவாகும். கொரோனா மொத்த பாதிப்பு 27,34,034 உயர்ந்துள்ளது. கொரோனாவுக்கு மேலும் 11 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா உயிரிழப்பு

கொரோனா உயிரிழப்பு

கோவையில் அதிகபட்சமாக கொரோனாவுக்கு 3 பேர் உயிரிழந்துள்ளனர். சென்னையில் 2 பேர் இறந்துள்ளனர். இதுவரை கொரோனாவுக்கு 36,586 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனாவில் இருந்து மேலும் 739 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை மொத்தம் 26,89,627 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர்.

சென்னை டாப்

சென்னை டாப்

7,821 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்று மட்டும் 1,02,771 பேருக்கு சோதனை செய்யப்பட்டது. இதுவரை மொத்தம் 5,43,57,568 பேருக்கு சோதனை செய்யப்பட்டுள்ளது. சென்னையில் மேலும் 123 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பில் சென்னை தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது.

ஈரோடு, சேலம்

ஈரோடு, சேலம்

கோவை 110 பாதிப்புகளுடன் இரண்டாம் இடத்தில் நீடிக்கிறது. செங்கல்பட்டில் 56 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. காஞ்சிபுரத்தில் 20 பேருக்கும், மதுரையில் 4 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கன்னியாகுமரியில் 14 பேருக்கும், திருவள்ளூரில் 23 பேருக்கும், திருச்சியில் 19 பேருக்கும் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. திருப்பூரில் 49 பேருக்கும், ஈரோட்டில் 59 பேருக்கும், சேலத்தில் 45 பேருக்கும், நாமக்கல்லில் 40 பேருக்கும், தஞ்சாவூரில் 14 பேருக்கும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. சென்னையிலும், கோவையிலும் தினசரி பாதிப்பு தொடர்ந்து 100-ஐ கடந்து வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+