குறையும் கொரோனா - 23 மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகள் அறிவிக்க வாய்ப்பு - முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை
கொரோனா பாதிப்பு படிப்படியாகக் குறைந்து வரும் நிலையில் மருத்துவ நிபுணருடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று ஆலோசனை மேற்கொள்கிறார்.
சென்னை: தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு குறைவாக உள்ள மாவட்டங்களில் சிறிய ஜவுளி கடைகள், நகைக் கடைகளுக்கு அனுமதி அளிக்கலாமா எனவும் கோவில்கள், மசூதிகள், தேவாலயங்களில் பக்தர்களுக்கு வழிபாடு நடத்த அனுமதிக்கலாமா என்றும் முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்த உள்ளார்.
தமிழ்நாட்டில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு வரும் 5 ஆம் தேதியுடன் நிறைவடைகிறது.கொரோனா பாதிப்பு படிப்படியாகக் குறைந்து வரும் நிலையில் மருத்துவ நிபுணருடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் நாளை வெள்ளிக்கிழமை ஆலோசனை மேற்கொள்கிறார்.

தலைமைச் செயலகத்தில் காலை 11 மணிக்கு நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் ஊரடங்கு நீட்டிப்பு, கூடுதல் தளர்வுகள் குறித்தும் மருத்துவ நிபுணர்களுடன் ஆலோசனை மேற்கொள்கிறார்.
கடந்த முறை மாவட்டங்கள் மூன்று வகைகளாக பிரிக்கப்பட்டு தளர்வுகள் அளிக்கப்பட்டன. முதல் வகை மாவட்டத்தில் கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய 11 மாவட்டங்கள் உள்ளன.
2வது வகையில் 23 மாவட்டங்கள் உள்ளன. அரியலூர், கடலூர், தர்மபுரி, திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, மதுரை, பெரம்பூர், தேனி, தென்காசி, நெல்லை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், ராணிப்பேட்டை, சிவகங்கை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, தூத்துக்குடி, திருச்சி, விழுப்புரம், வேலூர் மற்றும் விருதுநகர் இந்த வகை பிரிவில் உள்ளன.
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களும் 3வது வகை பிரிவில் இடம் பெற்றுள்ளன. இந்த 27 மாவட்டங்களிலும் கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்திருப்பதால் 90 சதவிகித தளர்வுகள் அமலில் உள்ளன. இந்த 4 மாவட்டங்களிலும் இயல்பு நிலை முழுமையாக திரும்பி உள்ளது.
வகை 2ல் உள்ள அரியலூர், கடலூர், தருமபுரி, திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, மதுரை, பெரம்பலூர், புதுக்கோட்டை, இராமநாதபுரம், இராணிப்பேட்டை, சிவகங்கை, தேனி, தென்காசி, திருநெல்வேலி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, தூத்துக்குடி, திருச்சிராப்பள்ளி, விழுப்புரம், வேலூர் மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் கோவில்கள் திறக்கப்பட வில்லை. தற்போது தொற்று குறைந்து வருவதால் பக்தர்கள் தரிசனத்திற்காக ஆலயங்கள் திறக்கப்படுவது பற்றிய அறிவிப்பு வெளியாகலாம்.
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் ஆலயங்கள், அனைத்து வழிபாட்டு தலங்களும் திறக்கப்பட்டுள்ளன. அதுபோல வகை 2 உள்ள மாவட்டங்களிலும் வழிபாட்டு தலங்களை திறக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
அலுவலகங்களில் 100 சதவிகித பணியாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
அதே நேரத்தில் பள்ளிகள் திறப்பு, சினிமா தியேட்டர்கள் திறப்பு குறித்து நாளைய தினம் முக்கிய அறிவிப்பு வெளியாகலாம் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
வகை 1ல் உள்ள மாவட்டங்களுக்கிடையேயும், வகை 2, 3 ஆகியவற்றில் உள்ள மாவட்டங்களிலிருந்து வகை 1ல் உள்ள மாவட்டங்களுக்கும் திருமணம் சார்ந்த போக்குவரத்துக்கு இ பாஸ் பெற்று அனுமதிக்கப்படும். இதற்கான இ பாஸ் திருமணம் நடைபெற உள்ள மாவட்டத்தின் மாவட்ட ஆட்சியரிடமிருந்து இணையவழியாக https://eregister.tnega.org) மணமகன் /மணமகள் அல்லது அவர்களது பெற்றோர் விண்ணப்பித்து பெற்றுக் கொள்ளலாம். வகை1ல் உள்ள மாவட்டங்களிலிருந்து வகை2, 3-ல் உள்ள மாவட்டங்களுக்கு திருமணத்திற்காக பயணிக்கவும் இ பாஸ் பெறவேண்டும். திருமண நிகழ்வுகளில் 50 நபர்கள் மட்டும் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவர்.
நீலகிரி மாவட்டம், கொடைக்கானல், ஏற்காடு, ஏலகிரி, குற்றாலம் பகுதிகளுக்கு அவசர காரணங்களுக்காக பயணிக்க தொடர்புடைய மாவட்ட ஆட்சியர்களிடமிருந்து இ-பாஸ் பெற்று பயணிக்க அனுமதிக்கப்படும். அதே நேரத்தில் வகை 2 மற்றும் 3ல் உள்ள மாவட்டங்களுக்கிடையே திருமணம் சார்ந்த போக்குவரத்துக்கு இ-பாஸ்/இ-பதிவு இல்லாமல் பயணிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாளைய தினம் மருத்துவ குழுவினருடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை நடத்த உள்ள நிலையில் வகை 1ல் உள்ள மாவட்டங்களில் பொது போக்குவரத்துக்கு அனுமதிக்கப்படுமா? மேலும் பல தளர்வுகள் அறிவிக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
-
இந்த லட்சணத்துல உங்களுக்கு பொ.செ பதவி வேற வேணுமா? தேர்தல் தோல்விக்குப் பின் ஸ்டாலின் ஆவேசம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
Ilaiyaraja Birthday: ராஜாவின் ராஜாங்கம் தொடரட்டும்! இளையராஜாவுக்கு ஸ்டாலின் வாழ்த்து -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு!












Click it and Unblock the Notifications