சென்னையில் கொரோனா 2-வது அலையை விட.. 3-வது அலை மிக அதிவேகம்.. டேட்டாவுடன் விளக்கும் விஜயானந்த்
சென்னை: தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் பாதிப்பு மீண்டும் ஜெட் வேகத்தில் சென்று வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் தமிழகத்தில் 4,000-க்கும் மேற்பட்ட கொரோனா பாதிப்புகள் பதிவாகி உள்ளன. இரண்டு நாட்களுக்கு முன்னர் கூட பாதிப்பு 1700 ஆகத்தான் இருந்தது.
தற்போது மும்மடங்காக உயர்ந்து விட்டது. தலைநகர் சென்னையில் தினம்தோறும் கொரோனா பாதிப்பு இரட்டிப்பாகி வருகிறது. சென்னையில் நீண்ட நாட்களுக்கு பிறகு கொரோனா பாதிப்பு 2,000-ஐ கடந்து விட்டது.

சென்னைக்கு என்னாச்சு?
கடந்த 24 மணி நேரத்தில் 2481 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் மொத்த பாதிப்பில் சென்னையில் மட்டும் 50%-க்கும் மேற்பட்ட பாதிப்புகள் உள்ளன. கொரோனா இரண்டாவது அலையில் சென்னையில் பாதிப்புகள் உயர்ந்த நிலையில் சென்னை மாநகராட்சி அதனை வெற்ற்றிகரமாக கையாண்டது. இதேபோல் உச்சத்தில் இருந்த பாதிப்பு கீழ்நோக்கி சரிந்தது.

ஒன்றரை ஆண்டுகளுக்கான டேட்டாவை பாருங்க
தற்போது கொரோனா மூன்றாவது அலையில் சென்னை வசமாக மாட்டிக்கொண்டது. அதாவது சென்னையில் இரண்டாவது அலையை விட மூன்றாவது அலையில் பாதிப்பு வீரியமாக இருப்பதாக கோவிட் டேட்டா ஆய்வாளர் விஜயானந்த் கூறியுள்ளார். இது தொடர்பாக கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கான டேட்டாவை அவர் வெளியிட்டுள்ளார்.

கொரோனா இரண்டாவது அலை
இந்த டேட்டாவின்படி கடந்த 2020-ம் ஆண்டு ஜூலை மாதத்தில் சென்னையில் கொரோனா தினசரி பாதிப்பு 2,000 என்ற அளவில் இருந்துள்ளது. அதன் பிறகு கொஞ்சம் குறைந்து ஆகஸ்ட், செப்டம்பர், அக்டோபர் தினசரி பாதிப்பு 1,000 என்ற கணக்கில் சரசரியாக இருந்து. இதன் பிறகு முழுமையாக கொரோனா 2021-ம் ஆண்டு பிப்பிரவரி 1-ம் தேதி 134 பாதிப்புகளாக பதிவானது. இதனை தொடர்ந்து கொரோனா இரண்டாவது அலை வேகமெடுத்தது.

அதிஉச்சநிலை
2021-ம் ஆண்டு மார்ச் மாதத்தில் இருந்து ஜூன் மாத தொடக்கம் வரை இரண்டாவது அலை சென்னை உள்ளிட்ட தமிழகம் முழுவதும் ஆட்டிபடைத்தது. மே மாதம் 12-ம் தேதி மட்டும் சென்னையில் 7564 என்று தினசரி பாதிப்பு அதிஉச்சநிலையை அடைந்தது. இதனை தொடர்ந்து இரண்டாவது அலை முடிவுக்கு வந்து ஜூலை முதல் நவம்பர் வரை சென்னையில் 200-க்கும் கீழான பாதிப்புகளே பதிவாகின. நவம்பர் 26-ம் தேதி வெறும் 102 பாதிப்புகள் என மிக குறைவாக தொற்று பதிவானது.

3-வது அலை மிக வேகம்
ஆனால் இதன்பிறகு நிலைமை தலைகீழாக மாறத் தொடங்கியது. கடந்த மாதம் டிசம்பர் நடுப்பகுதி முதல் கொரோனா வேகம் எடுக்க தொடங்கியது. நவம்பர் 26-ம் தேதி 102 பாதிப்புகள் இருந்த நிலையில் சுமார் 45 நாட்களுக்காகவே 2481 பேருக்கு பாதிப்பு(இன்றைய பாதிப்பு) கண்டறியப்பட்டுள்ளது. 2-வது அலையை விட 3-வது அலை வேகம் எடுப்பதற்கு இதுவே சான்று எனப்படும் வகையில் விஜயானந்த் டேட்டா தெளிவாக கூறுகிறது.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications