சாலையில் நடந்து சென்ற முதியவர்.. முட்டி தூக்கி வீசிய மாடு.. திருவல்லிக்கேணியில் ஷாக்
சென்னை: சென்னை திருவல்லிக்கேணியில் சாலையில் நடந்து சென்ற முதியவரை மாடு முட்டி தூக்கி வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. படுகாயமடைந்த முதியவரை அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் மீது ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.
சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் அருகே உள்ள மாதா கோயில் தெருவில் இன்று காலை 6.30 மணியளவில் முதியவர் ஒருவர் நடந்து சென்றார். அப்போது அந்த பகுதியில் 3க்கும் மேற்பட்ட மாடுகள் நின்று கொண்டிருந்தன. அதில் ஒரு மாடு திடீரென முதியவரை முட்டி தூக்கி வீசியது.

இதில் கீழே விழுந்த முதில் பலத்த காயமடைந்தார். அதிர்ச்சியில் அந்த முதியவர் மயக்கமடைந்தார். இதுகுறித்து அப்பகுதி மக்கள் தகவலின் பேரில் காயமடைந்த முதியவர் ஆம்புலன்ஸ் மூலம் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக அரசு ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. காயமடைந்த முதியவர் யார்? மாட்டின் உரிமையாளர் யார்? என்பது குறித்து விசாரணை நடைபெறுகிறது. சென்னையில் மாடுகள் சாலையில் சுற்றி திரிவாதை கட்டுப்படுத்த மாநகராட்சி நிர்வாகம் கடும் நடவடிக்கை எடுத்து வருகிறது. கூடுதல் அபராதம் விதித்தும் உரிமையாளர்கள் அச்சமின்றி மாடுகளை சாலையில் விடுகின்றனர். முதியவரை மாடு முட்டி தள்ளும் சிசிடிவி காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
கடந்த செப்டம்பர் மாதம் 14ஆம் தேதி இரவு இதே பகுதியில் சாலையில் சுற்றித்திரிந்த மாடு, ஆறு பேரை முட்டியது. இதுகுறித்து வழக்குப்பதிந்த ஐஸ் ஹவுஸ் காவல்நிலையத்தார், மாட்டின் உரிமையாளர் கிஷோர் மீது வழக்கு பதிந்தனர். அந்த மாட்டை பறிமுதல் செய்த மாநகராட்சி ஊழியர்கள், மாட்டின் உரிமையாளருக்கு அபராதம் விதித்தனர். இந்த சம்பவம் நடந்த 35 நாட்களில் மீண்டும் அதே பகுதியில் முதியவரை மாடு முட்டியுள்ளது.

கடந்த ஆகஸ்ட் மாத சென்னை அரும்பாக்கத்தில் தன் அம்மா உடன் நடந்து சென்ற சிறுமியை மாடு ஒன்று முட்டி தாக்கியது. ஒருமுறை அல்லது இருமுறை அல்ல..பலமுறை முட்டி காயப்படுத்தி தள்ளியது. அதன் அருகில் யாரையும் மாடு நெருங்கக்கூட விடவில்லை. ஒரு கட்டத்தில் அக்கம் பக்கத்தினர் அனைவரும் ஒன்று சேர்ந்து மாட்டினை பிரம்பால் மாட்டை அடித்து துரத்திவிட்டார்கள். அதன்பிறகே சிறுமியை மீட்க முடிந்தது. அந்த சிறுமி படுகாயத்துடன் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதனையடுத்து கடந்த மாதம் சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் அருகே சுற்றித்திரியும் மாடுகளை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் பிடித்து வண்டியில் ஏற்ற உத்தரவிட்டார். கால்நடைகள் சாலைகளில் சுற்றித்திரிந்தால் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் ஏற்கனவே தெரிவித்துள்ளார். அதனை யாருமே சீரியஸ் ஆக எடுத்துக்கொள்வதில்லை பல மாடுகள் சாலைகளில் மேய்ந்து கொண்டிருக்கின்றன. திருவல்லிகேணியில் இருந்து மயிலாப்பூருக்கு மாடுகள் வந்து கொண்டிருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications