அனைத்துக்கட்சி கூட்டம் மாதிரி.. இதுவும் ரொம்ப முக்கியம்! திமுகவுக்கு முக்கிய கோரிக்கை வைத்த சிபிஎம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: காவிரி விவகாரத்தில் ஒருமித்த கருத்தை எட்ட.. அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் என்று தவெக தலைமையிலான தமிழக அரசை எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியுள்ளன. இதே கோரிக்கையை முன்வைத்துள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஎம்), திமுகவுக்கும் அனைத்துக்கட்சி எம்பிக்கள் கூட்டம் குறித்தும் கோரிக்கையை முன்வைத்துள்ளது.

இந்த ஆண்டு மேட்டூருக்கு காவிரி நீர் வராததால், அணையிலிருந்து நீர் திறக்கப்படவில்லை. எனவே டெல்டா மாவட்டத்தில் 3.5 லட்சம் ஏக்கர் நிலம் வறட்சியில் சிக்கியிருக்கிறது. குறுவை சாகுபடி இன்னும் நடக்கவில்லை. நிலைமை இப்படி இருக்கும்போது.. கர்நாடக முதல்வர் டி.கே.சிவகுமாரை, முதலமைச்சர் சி.ஜோசப் விஜய் நேரில் சென்று சந்திப்பது ஏன்? என்று எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பியிருக்கின்றன.

CPIM

கர்நாடக அரசின் மேகதாது அணை திட்டத்திற்கு எதிராக உறுதியான நிலைப்பாட்டை தமிழகம் தெரிவிக்க.. அனைத்துக்கட்சி கூட்டத்தை நடத்த வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியுள்ளன. தவெக தலைமையிலான அரசு இன்னும்.. இதற்கான அறிவிப்பை வெளியிடவில்லை. இப்படி இருக்கையில்தான் சிபிஎம் மாநில செயலாளர் பெ.சண்முகத்தின் x பக்க பதிவு கவனம் பெற்றிருக்கிறது.

அவர் பதிவிட்டிருப்பதாவது, "தமிழ்நாட்டிற்கு காவிரி, மேகதாது அணை ஆகிய பிரச்சினைகள் மிகவும் முக்கியமானவை என்பதில் மாறுபட்ட கருத்து கிடையாது. இது குறித்து விவாதிக்க, தமிழ்நாடு அரசு அனைத்துக் கட்சிக் கூட்டத்தை நடத்த வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, திமுக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளும் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.

அதேபோல், "தொகுதி மறுவரையறை" தொடர்பான பிரச்சினையும் மிகவும் முக்கியமானது. தமிழ்நாட்டின் பிரதிநிதித்துவ விகிதம் எக்காரணம் கொண்டும் குறைவதை அனுமதிக்க முடியாது.

ஒன்றிய அரசின் குடும்பக் கட்டுப்பாட்டுத் திட்டத்தைச் சிறப்பாக நிறைவேற்றிய மாநிலங்கள் பலனடைய வேண்டுமே தவிர, பாதிப்புக்கு உள்ளாகக் கூடாது.

இதில் தமிழ்நாட்டின் ஒருமித்த கருத்தை ஒன்றிய அரசுக்கு வெளிப்படுத்தும் விதமாக, அனைத்துக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தை தமிழ்நாடு அரசு கூட்டியுள்ளது வரவேற்கத்தக்க நடவடிக்கை. எனவே, திமுக உள்ளிட்ட அனைத்துக் கட்சி எம்.பி.க்களும் இக்கூட்டத்தில் கலந்துகொண்டு ஒன்றுபட்ட நிலைப்பாட்டை வெளிப்படுத்துவது அவசியம் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் வேண்டுகோள் விடுக்கிறோம்" என்று தெரிவித்திருக்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+