கோவை கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவம்! குழம்பிய குட்டையில் மீன்..மதச்சாயம் பூச ப்ளான்! பறந்த கோரிக்கை
சென்னை : கோவை கார் சிலிண்டர் வெடிப்பு தொடர்பாக, பாரபட்சமற்ற விசாரணையும், நடவடிக்கையும் மேற்கொள்ள வேண்டும் எனவும், கோவை மக்களின் அச்சத்தை போக்கிட பாதுகாப்பினை பலப்படுத்திட வேண்டும் என தமிழக அரசை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.
கோவை டவுன்ஹால் பகுதியில் உள்ள கோட்டை ஈஸ்வரன் கோவில் அருகில் கடந்த ஞாயிறன்று அதிகாலை கார் ஒன்று தீ பற்றியதில் அதில் இருந்த ஒருவர் உடல் கருகி உயிரிழந்தார். காரில் இருந்த சிலிண்டர் வெடித்ததால் கார் தீ பற்றியதாக கூறப்பட்டது.
கார் வெடித்து சிதறியதில் உயிரிழந்தவர் உக்கடம் கோட்டைமேட்டை சார்ந்த ஜமேஷா முபின் என தெரியவந்துள்ளது. மேலும் கடந்த 2019ஆம் ஆண்டில் இவரிடம் தேசிய புலணாய்வு முகமை விசாரணை மேற்கொண்டதும் தெரிய வந்தது.

கோவை கார் வெடிப்பு
இந்த விவகாரம் பல கேள்விகளையும் , அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ள நிலையில், கோவை மக்களின் அச்சத்தை போக்கிட பாதுகாப்பினை பலப்படுத்திட வேண்டும் என தமிழக அரசை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பாக அக்கட்சி செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில்," கோவை உக்கடம், கோட்டை ஈஸ்வரன் கோயில் பகுதியில் காரின் சிலிண்டர் வெடித்த சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காரில் இருந்த ஜமேசா முபீன் என்பவர் உயிரிழந்த நிலையில், காவல்துறை உடனடியாக 6 தனிப்படைகள் அமைத்து விசாரித்து வருகிறது. சிலர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அறிய முடிகிறது.

சதி திட்டங்கள்?
மேலும், காவல்துறை மேற்கொண்டுள்ள முதல்கட்ட விசாரணையில் சதி திட்டங்கள் இருக்கக் கூடுமோ என்ற ஐயம் எழுந்துள்ளது. அண்மைக் காலமாக பெட்ரோல் குண்டு வெடிப்புகள் கோவையில் நடந்துள்ளன. தொடர்ச்சியாக மத மோதலை உருவாக்கும் வகையில் கோவையில் பாஜக-இந்து முன்னணியினர் வெறுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதேபோன்று நாடு முழுவதும் மத மோதலை உருவாக்கும் வகையில் பாஜக-இந்து முன்னணியினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

தீவிரவாத சக்திகளின் நடவடிக்கை
இத்தகைய சக்திகளுக்கு தீனி போடும் வகையில் இஸ்லாமிய, தனிநபர், தீவிரவாத சக்திகளின் நடவடிக்கைகள் அமைந்துள்ளது கவலையளிப்பதாகும். இத்தகைய மதவெறி போட்டி நடவடிக்கைகளினால் கோவையில் தொடர்ந்து பதற்றமான சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. கார் சிலிண்டர் வெடிப்புக்கு பின்னணியில் தீவிரவாத நடவடிக்கை திட்டமிடபட்டிருக்கிறதா என்பதை காவல்துறை விரைவாக விசாரித்து உண்மைகளை கண்டறிய வேண்டும்.

குழம்பிய குட்டையில் மீன்
சிலர் தீவிரவாத, வன்முறை நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு எதிராக உறுதியான நடவடிக்கைகளை தமிழக அரசும், காவல்துறையும் மேற்கொள்ள வேண்டும். மக்கள் அச்சத்தில் இருக்கும் நிலையில், குழம்பிய குட்டையில் மீன் பிடிப்பது போல மதவெறி சக்திகள் கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவத்திற்கு மதச்சாயம் பூசி அரசியலாக்குவதும், மக்களிடையே மத அடிப்படையில் வெறியை தூண்டுவதும் கோயம்புத்தூர் மக்களுக்கும், தமிழக நலனுக்கும் உகந்ததல்ல என்பதை சுட்டி காட்ட விரும்புகிறோம். மதவெறி சக்திகளின் வெறுப்பு அரசியலுக்கு இரையாகாமல் அனைவரும் ஒற்றுமையுடனும், சகோதரத்துவத்துடனும் இருக்க வேண்டுமென அனைத்து பகுதி மக்களையும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) மாநில செயற்குழு கேட்டுக் கொள்கிறது." என கூறியுள்ளார்.
-
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
சென்னை கீழ்ப்பாக்கம் ஏடிஎம்மில் கொள்ளை முயற்சி.. அலாரம் அடித்ததும் மர்ம நபர் தப்பி ஓட்டம்! -
“என் மகனுக்கு TVK என பெயர் வைக்கப் போகிறேன்” - தவெக எம்.எல்.ஏ பல்லவி அறிவிப்பு -
அமைச்சர் ராஜ்மோகன் கையால் பட்டம் வாங்க மறுத்து மாணவர் செய்த செயல்! சென்னை கல்லூரியில் நடந்த பரபரப்பு -
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
மெரினா கடற்கரைக்கு அடியில் அதிசயம்! சென்னை மெட்ரோ 2ம் கட்டத்தில் மாஸ்: லைட்ஹவுஸ் நிலையம் உருவாகிறது -
மயிலாப்பூர் டூ அம்பத்தூர்.. கார் இருந்தாலும் சைக்கிள் பயணம்! உலக சைக்கிள் தினத்தில் அறிய வேண்டிய கதை -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம்












Click it and Unblock the Notifications