தமிழ்நாட்டுல என்னங்க நடக்குது? செஞ்சி சிறுமி மாயமாகி 15 நாள் ஆச்சு! சிபிஎம் சண்முகம் கவலை!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழத்தில் அடுத்தடுத்து குழந்தைகள் மாயமாவதாக வெளியாகும் செய்திகள் மிகுந்த கவலை அளிக்கின்றன எனவும், செஞ்சி சிறுமி மாயமான விவகாரத்தில் என்ன நடந்தது என்றே புரிந்து கொள்ள முடியாத அளவிற்கு மர்மமாக இருக்கிறது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் கூறியுள்ளார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் உள்ள ஜெயராம் தனியார் திருமண மண்டபத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாநில தலைவர் செல்வராஜ் - அன்புச்செல்வி இணையேற்பு விழா நடைபெற்றது.

CPM Shanmugam

இவ்விழாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசினார் சிபிஎம் மாநில செயலாளர் பெ.சண்முகம்.

பெ.சண்முகம்

அப்போது பேசிய அவர், "விலைவாசி உயர்வினால் மக்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறார்கள். வெங்காயத்தை பார்த்தாலே கண்ணில் தண்ணீர் வருகிற அளவுக்கு ஒரு கிலோ வெங்காயத்தின் விலை ஏறத்தாழ 170 ரூபாய், 180 ரூபாய் என்கிற அளவுக்கு உயர்ந்திருக்கிறது. அரிசி, பருப்பு, சர்க்கரை, எண்ணெய் என மக்கள் அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்தக்கூடிய அனைத்து உணவுப் பொருட்களின் விலையும் மிகக் கடுமையாக உயர்ந்திருக்கிறது.

விலை உயர்வு

இதன் விளைவாக குறிப்பாக ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்கள் தங்கள் உணவு செலவுக்காகவே கூடுதலாக மாதத்திற்கு 10 ஆயிரம் ரூபாய்க்கு மேல் செலவழிக்க வேண்டிய நிலை உள்ளது. குறிப்பாக ஒன்றிய பாஜக அரசாங்கம், எத்தனால் தயாரிப்பு என்கிற பெயரில் அரிசி, கரும்பு இரண்டையும் திருப்பி விட்டதன் விளைவாகத்தான் சர்க்கரை தட்டுப்பாடும், அரிசி தட்டுப்பாடும் ஏற்பட்டு மிகக் கடுமையான விலை உயர்வுக்கு காரணமாக இருக்கிறது.

அத்யாவசிய பொருட்கள்

ஆகவே எத்தனால் உற்பத்தியை நிறுத்தி, உணவு பாதுகாப்புக்கு கூடுதல் முக்கியத்துவம் தர வேண்டும். தமிழ்நாடு அரசாங்கம் இந்த விலைவாசி உயர்விலிருந்து மக்களை பாதுகாக்கும் வகையில் அனைத்து அத்தியாவசிய பொருட்களையும் நியாயவிலைக் கடைகள் மூலமாக நியாயமான விலையில் வழங்குவதன் மூலம் ஓரளவு நிவாரணம் தர முடியும்.

அரசுக்கு எதிராக போராட்டம்

மத்திய அரசாங்கமும் அரிசி, சர்க்கரை உள்ளிட்ட பொருட்களுக்கு போடப்பட்டிருக்கக்கூடிய ஜிஎஸ்டி வரியை ரத்து செய்வதன் மூலம் விலையை குறைக்க முடியும். இந்த கடுமையான சிரமத்தில் இருந்து மக்களை பாதுகாக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வற்புறுத்தி, தமிழ்நாடு முழுவதும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் அடுத்த சில நாட்களுக்கு தொடர்ச்சியாகமத்திய மாநில அரசின் நடவடிக்கைகளை வற்புறுத்தி போராட்டத்தில் ஈடுபடுவது என்று தீர்மானித்திருக்கிறோம்.

குழந்தைகள் மாயம்

செஞ்சி குழந்தை காணாமல் போய் 15 நாட்கள் ஆகிறது. தமிழ்நாட்டில் தொடர்ச்சியாக குழந்தைகள் காணாமல் போவது என்பது எல்லோருக்குமே கவலை தரக்கூடிய விஷயம். அது செஞ்சி சிறுமி மட்டுமல்ல, தமிழ்நாட்டிலே தொடர்ச்சியாக இத்தகைய செய்திகள் மிக அதிகமாக வந்து கொண்டிருக்கிறது. தமிழக காவல்துறை, தமிழ்நாடு அரசு காணாமல் போன குழந்தைகளை உடனடியாக மீட்பதற்கும், குழந்தைகள் காணாமல் போவதை தடுக்கக்கூடிய வகையிலும் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும்.

சிபிசிஐடி

காணாமல் போன அனைத்து குழந்தைகளும் மேலூர் சிறுவன் பிணமாக மீட்கப்பட்டது போல் இல்லாமல், காணாமல் போன சிறுவர், சிறுமிகளை உயிருடன் மீட்பதற்கான துரித நடவடிக்கை எடுக்க வேண்டும். செஞ்சி சிறுமியை பொறுத்தவரை, சிபிசிஐடிக்கு வழக்கு ஒப்படைக்கப்பட்டதற்கு பிறகும் இன்னமும் அந்த சிறுமி கண்டுபிடிக்கப்படவில்லை என்பது மிகுந்த வேதனைக்குரிய விஷயம். வீட்டில் இருந்து, பிறந்த நாள் அன்றைக்கு காணாமல் போயிருக்கிறார். என்ன நடந்தது என்று புரிந்து கொள்ள முடியாத அளவுக்கு மர்மமாக இருக்கிறது. ஆகவே புலன் விசாரணையை தீவிரப்படுத்த வேண்டும்." என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+