சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

சென்னை தீவுத்திடல் கூவக்கரையோர மக்களுக்கு நகர்ப்புறத்திலே வீடு ஒதுக்க கோரிக்கை

Google Oneindia Tamil News

சென்னை: சென்னை தீவுத்திடல் எதிரே அமைந்துள்ள காந்திநகர் மக்களுக்கு கேசவ பிள்ளை பூங்கா பகுதியிலுள்ள குடியிருப்புகளை அரசு வழங்குமாறு துணை முதல்வரிடம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

சென்னையின் கூவம் கரையோரம் குடியிருந்த மக்களை பெரும்பாக்கத்திற்கு குடியமர்ந்தும் உத்தரவை மறுபரிசீலனை செய்ய அரசு முடிவு செய்துள்ளது. இந்த முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்திடம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

CPM Request for allotment of houses in urban areas to the people of Chennai koovam Island

துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்திடம் மார்க்சிஸ்ட் முன்னாள் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் மற்றும் மாவட்ட செயலாளர் ஜி. செல்வா ஆகியோர் நேரில் சந்தித்து கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர்.

அந்த மனுவில் சென்னை மாநகராட்சி தீவுத்திடல் எதிரே அமைந்துள்ள காந்திநகர் பகுதியில் வசிக்கும் மக்களை அப்பகுதியிலிருந்து அப்புறப்படுத்தி, சென்னைக்கு அப்பால் சுமார் 40 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள பெரும்பாக்கத்தில் குடியமர்த்தபடுகிறார்கள். இதனை அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும்.

சென்னைக்கு அப்பால் பெரும்பாக்கத்தில் குடியமர்த்தபடுவதால் அவர்களின் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்படும். எனவே காந்திநகர் மக்களை, 77வது வட்டம் கேசவ பிள்ளை பூங்கா பகுதியிலுள்ள குடியிருப்புகளை அரசு அவர்களுக்கு வழங்க வேண்டும் என்று கோரியிருந்தனர்.

English summary
CPM Request Pettion to OPS for allotment of houses in urban areas to the people of Chennai koovam Island
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X