கோவை டு லண்டன் கார் ஓட்டிய மூகாம்பிகா ரத்தினம்! இன்று கமல் ஹாசனின் மநீம விட்டு வெளியேறிய மர்மம் என்ன
கோவை: மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து விலகுவதாக மாநில செயலாளர் மூகாம்பிகா ரத்தினம் அறிவித்துள்ளார். தனது எதிர்கால அரசியல் மற்றும் சமூகப் பணிகளை கருத்தில் கொண்டு, கட்சியிலிருந்து விலகும் முடிவை எடுத்துள்ளதாகவும், அரசியலில் இருந்து விலகினாலும் பெண்கள் முன்னேற்றம், குழந்தைகள் நலம் மற்றும் சமூக நலன் சார்ந்த பொதுச் சேவைகளில் தனது பணி தொடர்ந்து நீடிக்கும் என்றும் மூகாம்பிகா ரத்தினம் விளக்கம் தந்துள்ளார். யாரிந்த மூகாம்பிகா ரத்தினம்?
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கடந்த 7 ஆண்டுகளாக மக்கள் நீதி மய்யம் கட்சியில் பணியாற்றிய அனுபவம், எனது அரசியல் மற்றும் சமூகப் பயணத்தில் மிக முக்கியமான அத்தியாயமாக அமைந்துள்ளது.

மூகாம்பிகா ரத்தினம் விலகல்
அரசியலின் அரிச்சுவடியை எனக்குக் கற்றுக் கொடுத்த ஆசானாக தாங்கள் இருந்தீர்கள் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. குறிப்பாக, மகளிர் மற்றும் குழந்தைகள் நல அணி மாநிலச் செயலாளராகப் பணியாற்றிய காலகட்டத்தில், பெண்கள் மற்றும் குழந்தைகளின் நலன், சமூக முன்னேற்றம் மற்றும் கட்சியின் வளர்ச்சிக்காக முழு அர்ப்பணிப்புடனும் நேர்மையுடனும் செயல்பட்டேன்.
மேலும், தங்களின் பேராதரவுடனும் நம்பிக்கையுடனும் 2019 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் பொள்ளாச்சி தொகுதியில் போட்டியிடும் வாய்ப்பைப் பெற்றேன். அந்தத் தேர்தலில் சுமார் 60,000 வாக்குகளைப் பெற்று, மக்கள் மத்தியில் கட்சியின் கொள்கைகளையும் இலட்சியங்களையும் கொண்டு சேர்க்கும் பணியில் ஈடுபட்டது. எனக்கு மிகுந்த பெருமையாகும்.
மக்கள் நீதி மய்யம்
இந்தப் பயணத்தில் உறுதுணையாக இருந்த கட்சித் தொண்டர்கள், நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஆழ்ந்த சிந்தனை மற்றும் பரிசீலனைக்குப் பிறகு, எனது எதிர்கால அரசியல் மற்றும் சமூகப் பணிகளை கருத்தில் கொண்டு, கட்சியிலிருந்து விலகும் முடிவை எடுத்துள்ளேன்.
இந்த முடிவு எவ்வித அவசரத்திலும் அல்லது உணர்ச்சி வசப்பட்ட நிலையிலும் எடுக்கப்படவில்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். எனது அரசியல் பயணத்தில் உறுதுணையாக இருந்த தலைவர், துணைத் தலைவர்கள், மாநில, மாவட்ட மற்றும் அனைத்து நிலை நிர்வாகிகள், கட்சித் தொண்டர்கள் மற்றும் ஆதரவாளர்கள் அனைவருக்கும் என் இதயப்பூர்வமான நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மக்கள் நீதி மய்யம் கட்சியின் எதிர்கால வளர்ச்சிக்கும் வெற்றிக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். பெண்கள் முன்னேற்றம், குழந்தைகள் நலம் மற்றும் சமூக நலன் சார்ந்த பொதுச் சேவைகளில் எனது பணி தொடர்ந்து நீடிக்கும்" என்று குறிப்பிட்டுள்ளார்.
யார் இந்த மூகாம்பிகா ரத்தினம்
மூகாம்பிகா ரத்தினம் கடந்த 2020-ல் மக்கள் நீதி மய்யம் சார்பாக பொள்ளாச்சி தொகுதியில் போட்டியிட்ட வேட்பாளர் - மநீம மாநில மகளிர், குழந்தைகள் நல அணியின் செயலாளராகவும் பொறுப்பில் இருந்தவர்..
அதுமட்டுமல்ல, இவருக்கு பின்னால் மிகப்பெரிய சாதனைகளும் ஒளிந்திருக்கின்றன... பெண்களுக்கான சமூக செயற்பாட்டாளர்தான் மூகாம்பிகை. இவர் ஒரு ரேலியிஸ்ட், அதாவது கார் ஓட்டும் வல்லுநர்.. கோவையில் இருந்து லண்டனுக்கு காரிலேயே பயணம் செய்து சாதனை புரிந்தவர்.
20-க்கும் மேற்பட்ட நாடுகளில் கல்வியின் முக்கியத்துவம், பெண் வலிமை மற்றும் தேசிய ஒருமைப்பாட்டிற்காகவும் சாலைப் பயணம் மேற்கொண்டவர். மேலும், நலிந்த கலைகளை ஊக்குவிக்க வெவ்வேறு செயல்பாடுகளை முன்னெடுத்து செல்பவர்.
குறிப்பாக சுற்றுச்சூழல் பிரச்சினைகள் குறித்த விழிப்புணர்வை உண்டாக்கி, அரசுப்பள்ளி குழந்தைகளுக்கு நட்டு வளர்க்க செடிகள் கொடுத்தல் போன்ற முயற்சிகளை மேற்கொண்டு வருபவர்.. பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தை முதன்முதலாக வெளிச்சத்துக்கு கொண்டு வந்ததில் இவருக்கும் மிக முக்கிய பங்கு உள்ளது என்றே சொல்லலாம்.. எனினும், இப்போது இவர் எடுத்துள்ள இந்த அதிரடி அரசியல் முடிவு, மநீம வட்டாரத்தில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
-
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு!












Click it and Unblock the Notifications