மதுரை - சென்னை வந்த இண்டிகோ விமானத்தில் நடுவானில் கண்ணாடியில் விரிசல்.. பத்திரமாக தரையிறக்கம்
சென்னை: மதுரையில் இருந்து இன்று சென்னை வந்த இண்டிகோ விமானத்தில் நடுவானில் கண்ணாடி உடைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. தரையிறங்கும்போது விமானத்தின் முன்பக்க கண்ணாடியில் விரிசல் கண்டுபிடிக்கப்பட்டது. இண்டிகோ விமானம் சென்னை விமான நிலையத்தில் பத்திரமாக தரையிறங்கியது.
மதுரையில் இருந்து இன்று சனிக்கிழமை அதிகாலை சென்னைக்கு 76 பயணிகளுடன் வந்த இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் சென்னைக்கு கிளம்பியது. நடுவானில் பறந்து கொண்டிருந்த போது விமானத்தில் முன்பக்க கண்ணாடியில் விரிசல் ஏற்பட்டுள்ளது.

தரையிறங்கும்போது விமானத்தின் முன்பக்க கண்ணாடியில் விரிசல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கண்ணாடியில் விரிசலை கவனித்த விமானி சாதுரியமாகச் செயல்பட்டு விமானத்தை பாதுகாப்பாக தரையிறக்கியதால் விமானத்தில் இருந்த 74 பயணிகள், 5 விமான பணியாளர்கள் என மொத்தம் 79 பேர் நல்வாய்ப்பாக உயிர் தப்பினர். விமானத்தின் கண்ணாடியை மாற்றும் பணி நடைபெற்று வருகிறது.
இந்தியாவின் மிகப்பெரிய விமான நிறுவனங்களில் ஒன்று இண்டிகோ ஏர்லைன்ஸ். குறைந்த கட்டணத்தில் வெளிநாடுகளுக்கும், உள்நாட்டிலும் விமான சேவைகளை இயக்கி வருகிறது இண்டிகோ ஏர்லைன்ஸ். குறிப்பாக குறைந்த கட்டணத்தில் இந்திய நகரங்களுக்கு இடையே இயக்கப்படுவதால் இந்த விமானத்துக்கு பயணிகள் மத்தியில் எப்போதும் வரவேற்பு அதிகம்.
அதேசமயம், பாதுகாப்பு குறைபாடு, தாமதமாக புறப்படுதல், தாமதமாக வந்து சேருதல் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளையும் இண்டிகோ விமானம் எதிர்கொண்டு வருகிறது. மேலும், இண்டிகோ விமானங்களில் ஏசி குறைபாடு இருப்பதாகவும் பயணிகள் பலரும் குற்றம்சாட்டி வருவது குறிப்பிடத்தக்கது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications