ஓராண்டாக உள்நோக்கத்தோடு விமர்சனம்.. அண்ணாமலையை தாக்கி அதிமுக கூட்டத்தில் தீர்மானம்
சென்னை: தேசிய ஜனநாயக கூட்டத்தில் பாஜக மாநில தலைமை கடந்த ஒருவருட காலமாக திட்டமிட்டு அதிமுக காவல் தெய்வங்களை அவதூறாக பேசியும் கொள்கைகளையும் விமர்சித்து வருகிறது என்று அக்கட்சி மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
அதிமுக - பாஜக கூட்டணி தொடருமா தொடராதா என்ற உச்ச கட்ட பரபரப்பு நிலவிய நிலையில் இன்று கூட்டணி தொடர்பாக முடிவு எடுக்க அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் அக்கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை அதிமுக துணை பொதுச்செயலாளர் கேபி முனுசாமி செய்தியாளர்கள் முன் வாசித்தார். அப்போது அவர் கூறியதாவது;-

தலைமைக்கழக நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானத்தை வாசிக்கிறேன். அதிமுக தலைமை கழக செயலாளர்கள், மாவட்ட செயலாளர்கள் எம்.எல்.ஏக்கள், எம்.பிகக்ள் கூட்டத்தில் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தேசிய ஜனநாயக கூட்டத்தில் பாஜக மாநில தலைமை கடந்த ஒருவருட காலமாக திட்டமிட்டு அதிமுக மீது கழக தெய்வங்கள் அண்ணா, ஜெயலலிதா அவர்களை அவதூறாக பேசியும் கொள்கைகளையும் விமர்சித்து வருகிறது.
மதுரையில் நடைபெற்ற பொன்விழா மாநாட்டை சிறுமைப்படுத்தியும் எடப்பாடியை அவதூறாக விமர்சித்தும் வருகிறது. இந்த செயல் தொண்டர்கள் மத்தியில் கொந்தளிபான சூழல் ஏற்படுத்தியுள்ளது. இன்று மாலை மாவட்ட செயலளர்கள்,கட்சி நிர்வாகிகள் கோடி தொண்டர்கள் எண்ணத்திற்கும் விருப்பம் உணர்வுகளுக்கும் மதிப்பளித்து அதிமுக, பாஜக கூட்டணியில் இருந்தும் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்தும் விலகி கொள்கிறது. 2024 நாடாளுமன்ற தேர்தலை அதிமுக தலைமையில் மற்ற கூட்டணியோடு இணைந்து சந்திக்கும்" இவ்வாறு அவர் கூறினார்.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, ஜெயலலிதா மற்றும் அண்ணாதுரை குறித்து விமர்சனம் செய்ததை அதிமுக கண்டித்து கடும் ஆட்சேபம் தெரிவித்த நிலையில், இன்று அகக்ட்சி மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் அவரை கண்டித்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
-
அதிமுக பொதுக்குழு பஞ்சாயத்து ஓவர்.. உயர் நீதிமன்றத்தில் வழக்குகளை வாபஸ் பெற்ற எடப்பாடி, ஓபிஎஸ் -
கதை ஓவர்! அதிமுகவில் இருந்து நீக்கியதை எதிர்த்த மனுவை வாபஸ் பெற அனுமதி கேட்ட ஒபிஎஸ்.. இன்று விசாரணை -
பெரிய புள்ளி.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு! வலையை விரித்த செங்க்ஸ்.. தவெகவுக்கு தாவ தயாரான சிவிஎஸ்! -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம்











Click it and Unblock the Notifications