சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கஜா.. மாலை 4 மணிக்குள், வீடு திரும்புங்க.. தனியார் நிறுவன ஊழியர்களுக்கு தமிழக அரசு அறிவுறுத்தல்

Google Oneindia Tamil News

Recommended Video

    கஜா முன்னெச்சரிக்கை : தனியார் நிறுவன ஊழியர்களுக்கு தமிழக அரசு அறிவுரை- வீடியோ

    சென்னை: புயல் பாதிப்பு ஏற்படக்கூடிய 7 மாவட்டங்களில் அரசு மற்றும் தனியார் நிறுவன ஊழியர்கள் மாலை 4 மணிக்குள் வீடு திரும்ப வேண்டும் என்று அரசு அறிவித்துள்ளது.

    கஜா புயல் இன்று இரவு 8 மணி முதல் 11 மணிக்குள் பாம்பன் மற்றும் கடலூர் நடுவே நாகை அருகே கரையை கடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    Cyclone Gaja impact: Government and pvt officials in 7 districts in Tamilnadu advise to go back home

    இந்த நிலையில் புயலால் பாதிக்கப்படக் கூடிய வாய்ப்பு உள்ளதாக கருதப்படும், 6 மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டது.

    கடலூர், நாகப்பட்டினம், ராமநாதபுரம், திருவாரூர், புதுக்கோட்டை, மற்றும் தஞ்சாவூர் ஆகிய ஆறு மாவட்டங்களில் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில், மேற்கண்ட 6 மாவட்டங்கள் தவிர்த்து தூத்துக்குடி மாவட்டத்தையும் சேர்த்து மொத்தம் ஏழு மாவட்டங்களில் தனியார் நிறுவன ஊழியர்கள், ஆலைகளில் பணியாற்றுவோர் மாலை 4 மணிக்குள் பணியை முடித்துக்கொண்டு வீட்டுக்கு திரும்ப வேண்டும் என்று மாநில வருவாய் ஆணையர் அந்தந்த மாவட்ட கலெக்டர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

    இதனால் அம்மாவட்டங்களில், அலுவலகங்கள் முன்கூட்டியே மூடப்படும் சூழ்நிலை உள்ளது. நாகை மாவட்டத்தில் மதியம் 3 மணிக்கே அலுவலகங்கள் மூடப்படுகிறது. அதேநேரம், புயல் மீட்பு பணியில் ஈடுபடும், அரசு அதிகாரிகளுக்கு, இந்த விதிமுறை பொருந்தாது. மேலும், பாதிக்கப்படக்கூடிய மாவட்டங்களில் சென்னை வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Government and pvt officials in 7 districts in Tamilnadu advise to go back home as Gaja cyclone arrives.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X