Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சென்னை உள்பட 4 மாவட்ட வணிகர்களுக்கு குட்நியூஸ்.. வணிகவரித்துறை சொன்ன முக்கிய தகவல்.. என்ன தெரியுமா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளுர் உள்ளிட்ட 4 மாவட்டங்களை சேர்ந்த வணிகர்கள் நவம்பர் மாதத்துக்கான ஜிஎஸ்டிஆர்-3பி(GSTR-3B) படிவத்தை தாக்கல் செய்வதற்கான தேதியை தமிழக அரசு நீட்டிப்பு செய்து அறிவித்துள்ளது.

வங்கக்கடலில் உருவான மிக்ஜாம் புயல் கடந்த 5ம் தேதி ஆந்திராவில் கரையை கடந்தது. முன்னதாக இந்த புயல் சென்னை கடந்து சென்றது. இதனால் கடந்த 3 மற்றும் 4ம் தேதிகளில் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளுர் உள்ளிட்ட 4 மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கியது.

Cyclone Michaung: TN government extended the date upto december 27 for filing the GSTR-3B form for 4 districts

தொடர்ந்து பெய்த கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. அதோடு 4 மாவட்டங்களிலும் குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்தது. இதனால் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகினர். வீடுகளிலேயே மக்கள் முடங்கியன. கார், பைக் உள்ளிட்ட வாகனங்கள் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டன.

இதையடுத்து புயல் கரையை கடந்த பிறகு மீட்டு பணிகள் தொடங்கியது. குடியிருப்பு பகுதிகளில் தேங்கிய வெள்ளம் வெளியேற்றப்பட்டது. இதையடுத்து மெல்ல மெல்ல சென்னை உள்பட 4 மாவட்டங்களில் இயல்பு நிலை திரும்பியது. தற்போது மக்கள் வழக்கமான வாழ்க்கையை வாழ தொடங்கி உள்ளனர். இருப்பினும் இந்த மழையின் காரணமாக மக்கள் பல முக்கிய ஆவணங்களை இழந்துள்ளனர். இதையடுத்து மக்களின் துயரை துடைக்கும் வகையில் சிறப்பு முகாம்கள் தமிழக அரசு சார்பில் நடத்தப்பட்டு வருகிறது. மேலும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழக அரசு சார்பில் ரூ.6000 நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே தான் தமிழக வணிகவரித்துறை இன்று வணிகர்களின் நலன்கருதி முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதுதொடர்பாக தமிழக வணிக வரித்துறையின் வணிகவரி ஆணையர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழ்நாடு அரசு மிக்ஜாம் புயலின் இடர்பாடுகளை களைய பல்வேறு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வரகிறது. புயலினால் ஏற்பட்ட இயற்கை பேரிடரின் தாக்கத்தில் இருந்து மீட்பதற்கு தமிழ்நாடு அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக இந்த அறிவிப்பு வெளியிடப்படுகிறது.

அதன்படி புயலால் பாதிக்கப்பட்ட சென்னை, திருவள்ளுர், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் ஆகிய 4 வருவாய் மாவட்டங்களில் முதன்மை வணிகயிடங்களை கொண்டுள்ள வணிகர்கள், தமிழ்நாடு சரக்குகள் மற்றும் சேவைகள் வரிச்சட்டம் மற்றும் விதிகள் 2017 ன் கீழ் 2023 நவம்பர் மாதத்திற்கான ஜிஎஸ்டிஆர் - 3பி (GSTR-3B) படிவத்தினை தாக்கல் செய்ய வேண்டிய உரிய நாள் டிசம்பர் 20 என அறிவிக்கப்பட்டது.

தற்போது இந்த நாள் டிசம்பர் 27 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.அதன்படி மேற்கூறிய வருவாய் மாவட்டங்களில் உள்ள வணிகர்கள் நவம்பர் மாதத்துக்கான ஜிஎஸ்டிஆர்-3பி (GSTR-3B) படிவத்தினை நீட்டிக்கப்பட்ட டிசம்பர் 27 ம் தேதி வரை தாக்கல் செய்வதற்கு தாமத கட்டணம் மற்றும் வட்டி செலுத்த வேண்டியது இல்லை'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+