Montha Route: மொந்தா புயலின் ரூட் இதுதான்! இந்த வழியாகத்தான் காக்கிநாடாவுக்கு செல்லும்!
சென்னை: மொந்தா புயல் காக்கிநாடா அருகே கரையை கடக்க செல்லும் ரூட் இதுதான்! எங்கே எப்படி எப்போது கரையை கடக்கிறது என்பதை தெரிந்து கொள்ளலாம். இந்த வானிலை அறிவிப்புகளை படித்துவிட்டு மக்கள் பீதியடையாமல் பாதுகாப்புடன் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. இதனால் தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் தென்கிழக்கு வங்கக் கடல் பகுதிகளில் 24 ஆம் தேதி காலை காற்றழுத்தம் நிலவியது. இது வலுப்பெற்று அன்றைய தினம் மாலையே ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக அதே பகுதிகளில் நிலவியது.

இது நேற்றைய தினம் மேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. கடந்த 6 மணி நேரத்தில் தென்கிழக்கு வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மணிக்கு 10 கி.மீ. வேகத்தில் மேற்கு வடமேற்கு நோக்கி நகர்ந்து நேற்று மாலை 5.30 மணிக்கு அதே பகுதியில் நிலை கொண்டுள்ளது.
இது போர்ட் பிளேருக்கு மேற்கு- தென் மேற்கில் சுமார் 510 கி.மீ. சென்னைக்கு கிழக்கு - தென்கிழக்கில் 890 கி.மீ. விசாகப்பட்டினத்திற்கு தென் கிழக்கே 920 கி.மீ., காக்கிநாடாவிற்கு தென் கிழக்கில் 920 கி.மீ. தொலைவில் மையம் கொண்டிருந்தது.
இது வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து இன்னும் 12 மணிநேரத்தில் புயலாக மாறும். இதையடுத்து வரும் 28ஆம் தேதி காக்கிநாடா அருகே மச்சிலிப்பட்டினம் மற்றும் கலிங்கப்பட்டினம் இடையே கரையை கடக்கும். இது கரையை கடக்கும் போது காற்றானது மணிக்கு 90- 100 கி.மீ. வேகத்தில் வீசும் என கணிக்கப்பட்டுள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான முதல் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 31° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25° செல்சியஸை ஒட்டியும் இருக்கக் கூடும்.
தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகள், தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியகிழக்கு வங்கக்கடல் பகுதிகள், மத்தியகிழக்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகள்: 26-10-2025 முதல் 27-10-2025 வரை: சூறாவளிக் காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். ஆகையால், இப்பகுதிகளுக்கு மீனவர்கள் இன்று செல்ல வேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
அடி வெளுக்கப்போகும் கனமழை! 7 மாவட்டங்களுக்கு பறந்த அலர்ட்.. உஷார் மக்களே! -
40% ஏற்கனவே காலி.. இந்தியாவை தாக்கும் பேராபத்து? சாட்டிலைட் போட்டோவை பார்த்தால் நிலைமை புரியும் -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்!












Click it and Unblock the Notifications