தமிழகத்தை முத்தமிட்ட ‘முரசு’ புயல்.. சென்னையில் விடிய விடிய வெளுத்த மழை! பாவம் வடசென்னை வாசிகள்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: முரசு புயல் எதிரொலியாக சென்னையில் விடிய விடிய கொட்டித் தீர்த்த கனமழையால் பல்வேறு சாலைகளில் மழைநீர் தேக்கமடைந்துள்ளது. குறிப்பாக சென்னை வியாசர்பாடி ரயில்வே சுரங்கப்பாதை குளம்போல் மாறியதால் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்தனர். மழைநீரை வெளியேற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டாலும், இரவு நேரம் என்பதால் கடும் போராட்டமாகவே இருந்தது.

தென்கிழக்கு வங்காள விரிகுடா பகுதியில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலை கடந்த ஆறு மணி நேரத்தில் மணிக்கு 25 கிலோமீட்டர் வேகத்தில் மேற்கு வட மேற்கு திசையில் நகர்ந்து முரசு புயலாக வலுப்பெற்றுள்ளது.

Cyclone Heavy Rain Flood

நேற்று தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மேற்கு மத்திய வங்காள விரிகுடாவில் சென்னை கிழக்கு தென்கிழக்கு 560 கிலோமீட்டர் தொலைவிலும் விசாகப்பட்டினம் ஆந்திர பிரதேசத்திற்கு தெற்கு தென்கிழக்கு 660 கிலோமீட்டர் தொலைவில் மையம் கொண்டு இருந்தது.

முரசு புயல்

இது மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து மேற்கு மத்திய வங்காள விரிகுடா பகுதியில் மேலும் வலுப்பெற்று கடுமையான புயலாக மாற அதிக வாய்ப்புள்ளது. அதன் பிறகு இது வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று நள்ளிரவு கரையைக் கடக்கும் என எதிர்பார்கப்படுகிறது. 11 மணி முதல் நவம்பர் 3ஆம் தேதி அதிகாலை 4 மணி வரை நெல்லூர் மற்றும் நர்சபூர் இடையே மணிக்கு 100 முதல் 110 கிலோமீட்டர் வேகத்தில் சில சமயங்களில் மணிக்கு 120 கிலோமீட்டர் வேகத்தில் ஆந்திர பிரதேசம் கடற்கரையை கடக்க வாய்ப்புள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

கனமழை

இதன் காரணமாக தூரத்து புயல் அபாய எச்சரிக்கை விடும் விதமாக பாம்பன் மீன் பிடி துறைமுகத்தில் இரண்டாம் எண் புயல் எச்சரிக்கை கொண்டு துறைமுக அதிகாரிகளால் ஏற்றப்பட்டு உள்ளது. முரசு புயல் காரணமாக சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட வட தமிழக மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.
சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங் களுக்கு கன முதல் மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக் கையாக பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

சுரங்கப்பாதையில் மழைநீர்

இதனால் வியாசர்பாடி ரயில்வே மேம்பால சுரங்கப்பாதையில் மழைநீர் குளம்போல் தேங்கி உள்ளது. குறிப்பாக, வியாசர்பாடி ரயில்வே மேம்பால சுரங்கப்பாதையில் மழைநீர் அதிகளவில் தேங்கியதால், அவ்வழியாக செல்ல முடியாமல் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர். இதனால் வாகனங்கள் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டு, போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.

மாநகராட்சி ஊழியர்கள்

இதற்கிடையே, மழை தொடர்ந்து பெய்து வந்தபோதிலும், மாநகராட்சி ஊழியர்கள் இரவு முழுவதும் மழைநீரை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். தற்போது வியாசர்பாடி ரயில்வே மேம்பால சுரங்கப்பாதையில் பம்ப் செட் இயந்திரங்கள் மூலம் தேங்கிய மழைநீரை வெளியேற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. முரசு புயல் மழை ஒருபுறம்... தேங்கிய மழைநீரால் போக்குவரத்து பாதிப்பு மறுபுறம் என வடசென்னை மக்கள் தவித்து வருகின்றனர்.

புழல் ஏரி

முரசு புயல் காரணமாக திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி, சோழவரம், செங்குன்றம், புழல் சுற்றுவட்டார இடங்களில் நேற்று பரவலாக இடி, மின்னலுடன் கூடிய கன மழை பெய்தது. திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக செங்குன்றம் 7 செமீ, சோழவரம், பொன்னேரி தலா 4 செமீ மழை பதிவாகியுள்ளது. நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழை காரணமாக புழல் ஏரிக்கு மீண்டும் நீர்வரத்து வர தொடங்கியது. புழல் ஏரிக்கு மீண்டும் 435 கன அடி நீர்வரத்து வர தொடங்கியதும் குறிப்பிடட்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+